Word |
English & Tamil Meaning |
|---|---|
| வீசுகோல் | vicu-kōl n. <>id.+. 1. See வீசுவில். (W.) . 2. A kind of rod used for striking the bow in singing viṟ-pāṭṭu; |
| வீசுதமர் | vicu-tamar n. <>id.+தமர். Bow drill; துரப்பணவகை. (W.) |
| வீசுதவர் | vicutavar n. <>id.+ தவர். See வீசுதமர். (யாழ். அக.) . |
| வீசுவில் | vicu-vil n. <>id.+. Drill bow; துரப்பண மிழுக்க உதவும் வில். |
| வீசுவிற்குடம் | vicu-viṟ-kuṭam n. <>வீசுவில் +. Case for a drill bow; துரப்பணக் கூடு. (W.) |
| வீசேறு - தல் | vicēṟu- 5 v. intr. perh. வீசு- + ஏறு-. To be upraised; மேலேறுதல். வீசேறிய புருவத்தவர் (தேவா. 69, 10) . |
| வீசை 1 | vicai n. [T. vīse.] Viss, a measure of weight=40 palams; நாற்பது பலங்கொண்ட எடுத்தலளவை. |
| வீசை 2 | vicai n. <>மீசை. Moustache. See மீசை, 2. Loc. |
| வீசைத்தூக்கம் | vicai-t-tūkkam n. <>வீசம் + தூக்கம். Goldsmith's weight = 1/4 kuṉṟi; காற்குன்றிமணி எடை. |
| வீட்சணம் | viṭcaṇam n. <>vīkṣaṇa. Sight, look; பார்வை. கடாட்ச வீட்சணம். |
| வீட்சணை | viṭcaṇai n. See வீட்சணம். (சங். அக.) . |
| வீட்சிதம் | viṭcitam n. <> vīkṣita. See வீட்சணம். (யாழ். அக.) . |
| வீட்டன் | viṭṭaṉ part. perh. vīpsā. cf. வட்டம். A distributive suffix meaning 'each, every'; தோறும் என்று பொருள்படும் ஒரு விகுதி. ஆட்டை வீட்டன் பொலிசை காசு அரைக்கால் (S. I. I. ii, 97). |
| வீட்டார் | viṭṭār n. <>வீடு. Members of a household; வீட்டிலுள்ள ஜனங்கள். |
| வீட்டாள் | viṭṭāḷ n. <>id. Wife ; மனைவி. (யாழ். அக.) |
| வீட்டிறப்பு | viṭṭiṟappu n. <>id.+ இறப்பு. Eaves of the roof of a house; மேற்கூரையின் தாழ்ந்த பக்கம். (சூடா.) |
| வீட்டு 1 - தல் | viṭṭu- 5 v. tr. Caus. of வீடு-. 1. To kill; கொல்லுதல். (சூடா.) அந்தகன் றூதர் வீட்டு முன்னரே (உபதேசகா. சிவபுரா. 40). 2. To destroy; 3. To remove; |
| வீட்டு 2 - தல் | viṭṭu- 5 v. tr. <>வீழ்த்து-. To cast into, throw in; தள்ளுதல். இரவியைச் சிறையில் வீட்டினான் (கந்தபு. அமரசிறைபு. 3.) |
| வீட்டுக்காரர் | viṭṭukkārar n. <>வீட்டுக்காரன். Husband. See ஆத்துக்காரர், 2. |
| வீட்டுக்காரன் | viṭṭu-k-kāraṉ n. <>வீடு + காரன். 1. Man who owns a house; வீட்டுக்குரியவன். 2. See வீட்டுக்காரர். |
| வீட்டுக்காரி | viṭṭukkāri n. Fem of வீட்டுக்காரன். (W.) 1. Woman who owns a house; வீட்டுக்குடையவள். 2. Wife; |
| வீசுகாலேணி | vicu-kāl-ēṇi n. <>வீசு- +. A kind of ladder with two supporting legs; step-ladder; தாங்குகால்க ளிரண்டுள்ள ஏணிவகை. (W.) |
