Word |
English & Tamil Meaning |
|---|---|
| வீட்டுவாடை | vīṭṭu-vāṭai n. <>id.+வாடை. See வீட்டுவாடகை. (யாழ். அக.) . |
| வீட்டுவிசாரணை | vīṭṭu-vicāraṇai n. <>id.+. See வீட்டு மணியம், 1. (W.) . |
| வீட்டுவிசாரம் | vīṭṭu-vicāram n. <>id.+. Cares of a householder, cares of a family; குடும்பக் கவலை. |
| வீட்டுவீரன் | vīṭṭu-vīraṉ n. <>id.+. One who affects heroism at home but is really a coward outside; வீட்டிலிருந்து வீரம்பேசும் பயங்கொள்ளி. (யாழ்.அக.) |
| வீட்டுவேலை | vīṭṭu-vēlai n. <>id.+. 1. Home-work, home exercise; வீட்டிற் செய்து கொணருமாறு இடப்படும் வேலை. Mod. 2. Domestic duties; 3. Menial service, as washing, sweeping, etc.; 4. House-building work; |
| வீட்டுள்ளார் | vīṭṭuḷḷār n. <>id.+. (W.) 1. Inmates of a house; வீட்டுக்குரியார். 2. Householders; |
| வீட்டெலி | vīṭṭeli n. <>id.+எலி. House-rat. See இல்லெலி. (புறநா. அரும்.) |
| வீட்டைச்சுற்று - தல் | vīṭṭai-c-cuṟṟu- v. intr. <>id.+. To be hanging about one's own house; to be a stay-at-home; வெளியேறி வேலைசெய்யாமல் தன்விட்டிலேயே திரிந்துகொண்டிருத்தல். |
| வீட்டோடுங்கூட்டோடும் | vīṭṭōṭuṅkūṭṭōṭum adv. <>id.+. Throughout the house; வீடுமுழுவதும். (T. A. S. V, 224.) |
| வீட்டைத்தல் | vīṭaṭaittal n. <>id.+. Closing of a house due to extinction of a family, as by death; சாவு முதலியவற்றால் வமிசமற்று வீடு மூடிக்கிடக்கை. |
| வீடணன் | vīṭaṇaṉ n. <>Vibhīṣaṇa. A brother of Rāvaṇa; இராவணன் தம்பி. நின்மினென்றனன் வீடண னீதியான் (கம்பரா. பிணிவீ.110). |
| வீடறு - த்தல் | vīṭaṟu- v. tr. <>வீடு+அறு-. To settle, as a case or dispute; வழக்கு முதலியன திர்த்தல். வழக்குமாறுபட்டு வந்தோர்க்கு அவ்வழக்கு வீடறுப்பன் (பொருந.188, உரை). |
| வீடாரம் | vīṭāram n. (T.bidāramu K. bidāra.) 1. Camp; பாசறை. (பு. வெ. 8,16, கொளு, உரை.) 2. House; |
| வீடாவழி | vīṭā-vaḷi adv. <>வீடு+ஆ-+. From house to house; வீடு வீடாக. (W.) |
| வீடி 1 | vīṭi n. A parasitic leafless plant. See கொற்றான். (மலை.) |
| வீடி 2 | vīṭi n. <>vīṭī. Betel; தாம்பூலம். (இலக். அக.) |
| வீடிகை | vīṭikai n. <>vīṭikā. 1. Betel; வெற்றிலை. (மலை.) 2. Roll of betel leaves with arecanut, spices and lime; |
| வீடு 1 | vīṭu n. <>விடு-. [K. bīdu.] 1. Leaving; விடுகை. நட்டபின் வீடில்லை (குறள், 791). 2. Emancipation, freedom, liberation; 3. Freedom from the bondage of karma; 4. Completion; settlement; end; 5. Dissolution of the universe; 6. Creation: 7. Heaven, as the final release or liberation; 8. Svarga, Indra`s heaven; 9. House, habitation, abode; 10. (Astrol.) Zodiacal sign; 11. Squares, as of a chess board; 12. Winning place or goal in a board of an indoor game; 13. Clearing nut tree. 14. A cant term signifying one; |
| வீடு 2 - தல் | viṭu n.5 v. perh. id. intr. 1.To perish; to be destroyed; கெடுதல். வினை . . . வீடுமே (தேவா. 360, 8). 2. To die; 3. To cease; To let off, leave off; |
| வீடுகொள்(ளு) - தல் | vīṭu-koḷ- v. tr. <>வீடு+. To recover, get back; மீண்டும் பெறுதல். ஆருயிரைக் கூற்றம் விழுங்கியபின்- வீடுகொண்டற்றால் (பு. வெ. 2, 1). |
| வீடுசெய் - தல் | vīṭu-cey- v. tr. <>id.+. 1. To renounce, relinquish; துறத்தல். வீடுமின் முற்றவும் வீடுசெய்து (திவ். திருவாய், 1, 2, 1). 2. To release; 3. To remit, as taxes; 4. To surrender, as to God; |
