Word |
English & Tamil Meaning |
|---|---|
| வீரமகேந்திரன் | vīra-makēntiraṉ. n. <>id.+. A hero in Skanda's army, one of nava-vīrar, q.v.; நவவீரருள் ஒருவர். (W.) |
| வீரமங்கை | vīra-maṅkai n. <>id.+. See வீரலக்ஷ்மி. (கலிங். 416.) . |
| வீரமந்திரம் | vīra-mantiram n. <>id.+. Mantra uttered in a horse's ears, so that it may fly or stop as the rider pleases; வேண்டும் போது நிற்கவும் பறந்துசெல்லவும் குதிரையின் காதில் ஓதும் மந்திரம் வெம்பரிமான்செவி வீரமந்திரம் ... நீ மொழிகென (சீவக. 791). |
| வீரமயேச்சுரர் | vīra-mayēccurar n. <>id.+mahēšvara. Vira-šaiva ascetics; வீரசைவமுனிவர். பெரிய மடந்தனில் வாழ் வீரமயேச்சுரர் வாழியே (தக்கயாகப். பக். 225). |
| வீரமயேசுரன் | vīra-mayēcuraṉ n. <>id.+. See வீரமகேச்சுரன். (நாமதீப. 35.) . |
| வீரமயேந்திரன் | vīra-mayēntiraṉ n. <>id.+mahēndra. See வீரமகேந்திரன். (நாமதீப. 35.) . |
| வீரமாகாளன் | vīra-mā-kāḷaṉ n. <>id.+ மா4+காளான்1. A village deity, the head of Aiyaṉār's hosts; ஐயனார் சேனைத்தலைவரான கிராமதேவதை. வெய்யரிற் பெரிதும் வெய்யோன் வீரமாகாள னென்போன் (கந்தபு. மகாகாளர். 3). |
| வீரமாகாளி | vīra-mā-kāḷi n. <>id.+id.+காளி1. Kāḷī, as the ferocious goddess துர்க்காதேவி. |
| வீரமாகேசம் | vīra-mākēcam n. <>id.+.(Nāṭya.) A kind of masquerade dance; வரிக்கூத்துவகை. (சிலப்.3, 13, உரை, பக். 88.) |
| வீரமாபுரந்தரன் | vīra-mā-purantaraṉ n. <>id.+. மா4+. See வீரபுரந்தரன். (கந்தபு. துணைவர். 29.) . |
| வீரமாமகேச்சுரன் | vīra-mā-makēccuraṉ n. <>id.+ id.+. See வீரமகேச்சுரன். (கந்தபு. துணைவர். 28.) . |
| வீரமாமகேந்திரன் | vīra-mā-makēntiraṉ n. <>id.+id.+. See வீரமகேந்திரன். (கந்தபு. துணைவர்.27.) . |
| வீரமாமுனிவர் | vīra-mā-muṉivar n. Father Beschi, an Italian Jesuit, 1680-1747, author of Catur-akarāti, Tēmpāvaṇi, Toṉṉūl-viḷakkam, etc.; கி.பி. 1680 முதல் 1747 வரை வாழ்ந்த கிறிஸ்தவமதபோதகரும் சதுரகராதி தேம்பாவணி தொன்னூல்விளக்கம் முதலிய நூல்கள் இயற்றியவரும் இத்தாலிய தேசத்தவருமான பாதிரி. |
| வீரமார்த்தாண்டன் | vīra-mārttāṇṭaṉ n. <>vīra+. 1. Illustrious hero; பெருவீரன். 2. A hero in Skanda's army , one of nava-vīrar, q.v.; |
| வீரமாலை | vīra-mālai n. <>id.+mālā. 1.Garland of victory; வெற்றிமாலை. (யாழ். அக.) 2. A kind of poem or song in praise of a warrior; |
| வீரமுட்டி | vīra-muṭṭi n. See வீரமுஷ்டி. . |
| வீரமுடி | vīra-muṭi n. <>வீரம்1+. Warrior's crown; வீரரணியுங் கிரீடம். |
| வீரமுத்திரிகை | vīra-muttirikai n. <>id. A ring worn on the middle toe; காலின் நடுவிரலணி. (W.) |
| வீரமுரசு | vīra-muracu n. <>id.+முரசு2. Drum of heroism, one of mu-m-muracu, q.v.; மும்முரசுகளுள் வீரத்தின் அறிகுறியாக முழக்கும் முரசம். மயிரான்மிக்க கண்ணினையுடைய வீரமுர சொலிப்ப (பு.வெ. 8, 17, உரை). |
| வீரமுழவு | vīra-muḷavu n. <>id.+. War drum, of four kinds, viz., muracu, nicāḷam, tuṭumai, timilai; முரசு நிசாளம் துடுமை திமிலை என நால்வகையான போர்ப்பறை. முன்சொன்ன வீரமுழவு நான்கும் (சிலப். 3, 27, உரை, பக். 106). |
| வீரமுஷ்டி | vīra-muṣṭi n. <>vīra + muṣṭi. Fanatical Vīra-šaiva mendicant who goes about armed with sword and shield; வாள் ழதலிய ஆயுதந் தரித்துச்செல்லும் மதவைராக்கியம் மிக்க வீரசைவத் துறவி. உண்பான் தின்பான் சிவப்பிராமணன், குத்துக்கு நிற்பான் விரமுஷ்டி. |
| வீரமொழி | vīra-moḷi n. <>வீரம்1+ மொழி2. See வீரவாதம். கண்ணகி சொல்லிய வீரமொழி (சிலப்.25, 82, அரும்.). . |
| வீரயாகம் | vīra-yākam n. <>வீரன்+. A sacrifice in honour of Vīrapattiraṉ; வீரபததிரன் பொருட்டுச் செய்யும் யாகவகை (யாழ். அக.) |
| வீரரசம் | vīra-racam n. <>vīra+. (Rhet.) See வீரம்1, 2. (சிலப். 3, 13, உரை.) . |
| வீரரதம் | vīra-ratam n. <>id.+prob. rata. Arrow; அம்பு. (யாழ். அக.) |
| வீரராக்கதன் | vīra-rākkataṉ. n. <>id.+. See வீரராட்சதன். (கந்தபு. துணைவர். 30.) . |
| வீரராட்சதன் | vīra-rāṭcataṉ n. <>id.+. A hero in Skanda's army, one of nava-vīrar, q.v.; நவவீரருள் ஒருவர். (W.) |
| வீரராயன்பணம் | vīra-rāyaṉ-paṇam n. <>id.+ராயன்+பணம்2. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 142.) |
