Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெங்கதிரோன் | veṅkatirōṉ n. <>id. See வெங்கதிர்ச்செல்வன். வெங்கதிரோன் குலத்துக்கோர் விளகாய்த் தோன்றி (திவ். பெருமாள். 10, 1). . |
| வெங்கம் | veṅkam n. prob. bhaṅga. Extreme poverty; மிக்க வறுமை. வெங்கம் பரந்த அம்மையார்க்கு அமுதுபடி திருவிளக்கெண்ணெய். |
| வெங்கலபாத்திரம் | veṅkala-pāttiram n. <>வெங்கலம் + பாத்திரம்2. Bronze vessel for domestic use; வீட்டுக்குரிய வெண்கலத்தாற் செய்த பாத்திரம். |
| வெங்கலம் | veṅkalam n. Corr. of வெண்கலம்1. (C. G.) . |
| வெங்கலாமை | veṅkalāmai n. prob. வெங்கலம் + ஆமை. A kind of tortoise; ஆமைவகை . |
| வெங்கள் | veṅ-kaḷ n. <>வெம்-மை + கள்3. Highly intoxicating liquor; கடுக மயக்குங் கள். வெங்கட் டொலைச்சிய விருந்திற் பாணி (சிலப். 10, 131). |
| வெங்களம் | veṅ-kaḷam n. <>id.+ களம் 2 Battlefield; போர்க்களம். மறமன்னர் வெங்களத்து வேலுயர்த்த வேந்து (பு. வெ. 9, 11). |
| வெங்கன் | veṅkaṉ n. <>வெங்கம். Poverty-stricken person, pauper, used in contempt; தரித்திரன். (W.) |
| வெங்காக்கணம் | veṅ-kākkaṇam n. <>வெண்-மை+. White-flowered mussel-shell creeper. See வெள்ளைக்காக்கணம். (பரி. அக.) |
| வெங்காயத்தாமரை | veṅkāya-tāmarai n. prob. வெங்காயம்+. Hyacinth, a parasitic water-plant; நீர்ப்பூடுவகை. Mod. |
| வெங்காயப்பூக்கோரை | veṅkāya-p-pū-k-kōrai n. prob. id.+ பூ3+. A kind of sedge; கோரைவகை. (M. N.A.D. 11, 170.) |
| வெங்காயம் | veṅ-kāyam n. See வெண்காயம். (பதார்த்த. 445.) . |
| வெங்காயவெடி | veṅkāya-veṭi n. See வெண்காயவெடி. Loc. . |
| வெங்கார் 1 | veṅ-kār n. <>வெம்-மை + காரம்2. Heat; வெப்பம். (யாழ். அக.) |
| வெங்கார் 2 | veṅ-kār n. <>id.+. A kind of paddy; நெல்வகை. |
| வெங்கார்நாற்றம் | veṅkār-nāṟṟam n. <>வெங்கார்1+. Odour caused by rain falling on hot, dry ground; தலைப்பெயன் மழையாற் காய்ந்த மண்ணினின்று எழும் ஆவிநாற்றம். காடுகள் தரும் வெங்கார்நாற்றமும் (பரிபா. 20, 10, உரை). |
| வெங்கார்மண் | veṇkār-maṇ n. <>id.+. Soil hot with sun's heat; சூரியவெப்பத்தாற் சூடேறிய நிலம். (சீவக. 2503, உரை.) |
| வெங்காரம் 1 | veṅ-kāram n. prob. வெண்மை + காரம்1. Borax, Sodae soboras; மருந்துச் சரக்குவகை. (பதார்த்த.1103.) வெங்காரம் வெய்தெனினு நோய்தீர்க்கும் (நீதிநெறி. 59). |
| வெங்காரம் 2 | veṅkāram n. prob. வெம்-மை +id A kind of caustic; புண்ணுக்கு இடும் ஒருவகைக் காரம். |
| வெங்காரிப்பு | veṅkārippu n. <>வெங்கார்1. Cracking of agricultural land by excessive heat; வயல்நிலம். அதிக வெப்பத்தால் வெடிக்கை. Loc. |
| வெங்காரிப்புவெட்டு - தல் | veṅkārippu-veṭṭu- v. intr. <>வெங்காரிப்பு+. To open the ridge for watering a field for the first time after harvest; அறுவடைக்குப் பிறகு வயலுக்கு நீர்விட வரப்பு வெட்டுதல். Tj. |
| வெங்காருடைப்பு | veṅkār-uṭaippu n. <>வெங்கார்1 + உடைப்பு1. Cracking of ridges in wet lands owing to veṅkār; சூரிய வெப்பத்தால் வயல்வரப்புப் பிளந்திருக்கை. Tj. |
| வெங்கான்வெளி | veṅ-kāṉ-veḷi n. <>வெம்மை + கான்3 +வெளி1. Arid land, desert; நீரற்ற பிரதேசம். (யாழ். அக.) |
| வெங்கிணாத்தி | veṅkiṇātti n. A huge, mountain snake; பெரிய மலைப்பாம்புவகை. (W.) |
| வெங்கியம் | veṅkiyam n. cf. vyaṅgya. 1. Suggested sense. See வியங்கியம், 1. 2. Line of demarcation; |
| வெங்கிராயன்வெளி | veṅkirāyaṉveḷi n. See வெங்கான்வெளி. (யாழ். அக.) . |
| வெங்குசம்பா | veṅku-campā n. prob. வெம்-மை + சம்பா1. A kind of campā paddy; சம்பாநெல்வகை. (A.) |
| வெங்குரு | veṅkuru n. <>id.+ குரு5. 1. Shiyali; சீகாழி. சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவியுள்வீற்றிருந்தாரே (தேவா. 85,1). 2. Yama; |
| வெங்கை | veṅkai n. Veṅkaṉūr in Trichi-nopoly District; திரிச்சிராபள்ளி ஜில்லாவைச் சார்ந்த வெங்கனூர். (G. Tp. D. I, 308.) |
| வெங்கைக்கலம்பகம் | veṅkai-k-kalam-pakam n. <>வெங்கை+. A kalampakam poem on šiva at Veṅkai, by Civappirakācar; வெங்கைச் சிவபிரான்மீது சிவப்பிரகாசர் பாடிய கலம்பகநூல். |
