Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெங்கைக்கோவை | veṅkai-k-kōvai n. <>id.+. A kōvai poem on šiva at Veṅkai, by Civappirakācar; வெங்கைச் சிவபிரான்மீது சிவப்பிரகாசர் இயற்றிய கோவைப்பிரபந்தம். |
| வெங்கையலங்காரம் | veṅkai-y-alaṅkāram n. <>id.+. A work on šiva at Veṅkai, by Civappirakācar; வெங்கைச் சிவபிரான்மீது சிவப்பிரகாசர் பாடிய பிரபந்தங்களுள் ஒன்று. |
| வெங்கையுலா | veṅkai-y-ulā n. <>id.+. A ulā poem on šiva at Veṅkai, by Civappirakācar; வெங்கைச் சிவபிரான்மீது சிவப்பிரகாசர் இயற்றிய உலாப்பிரபந்தவகை. |
| வெங்கோல் | veṅ-kōl n. <>வெம்-மை + கோல்1. See வெங்கோன்மை. (ஏலாதி, 10.) . |
| வெங்கோலன் | veṅkōlaṉ n. <>வெங்கோல். Tyrant, cruel ruler; கொடுங்கோலை யுடைய மன்னன். வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் (குறள், 563). |
| வெங்கோன்மை | veṅkōṉmai n. <>id. Cruel government; tyrannical rule; கொடுங்கோல். |
| வெச்சம் | veccam n. [T. bejjamu.] A defect in rubies; மாணிக்கக் குற்றவகை. வெச்சம் பொரிவு (கல்லா. 98). |
| வெச்சமுது | veccamutu n. <>வெச்சு+அமுது. Cooked food; சமைத்த உணவு. வெச்சமுது மண்டபமும். (T. A. S. i, 100). |
| வெச்சு | veccu n. <>வெய்து. Heat; வெம்மை . |
| வெச்சுவெச்செனல் | veccuvecceṉal n. See வெச்செனல். (W.) . |
| வெச்சுவெந்நீர் | veccu-vennīr n. <>வெச்சு+. Hot water; சுடுநீர். (யாழ். அக.) |
| வெச்செனல் | vecceṉal n. <>வெச்சு [T. veccana, K. beccane.] Expr. of (a) being hot, becoming heated; வெம்மைக்குறிப்பு. தண்ணென்று வெச்சென்று (குமர. பிர. மீனாட். பிள்ளைத். 1): (b) being harsh; |
| வெச்செனவு | vecceṉavu n. <>வெச்செனல். Heat; சூடு. தண்ணெனவும் வெச்செனவுந்தந்து (சேதுபு. கடவுள். 3). |
| வெசவி | vēcavi n. [T. vēsavi K. besige.] Hot weather; உஷ்ணகாலம். |
| வெஞ்சம் 1 | vecam n. Corr. of வஞ்சம்1. . |
| வெஞ்சம் 2 | vecam n. cf. வெஞ்சினம்1. Anger; கோபம். (யாழ். அக.) |
| வெஞ்சமம் 1 | ve-camam n. <>வெம்-மை + சமம்2. (Mus.) A melody-type of the pālai class; பாலைப்பண்வகை. (நம்பியகப்.) |
| வெஞ்சமம் 2 | ve-camam n. <>id.+ சமம்3. War, battle; போர். விளிந்தா ரொழிந்தார் வெஞ்சமத்தில் (பாரத. பன்னிரண்டாம். 73). |
| வெஞ்சமன் | ve-camaṉ n. <>id.+சமன்2. Yama; யமன். (W.) |
| வெஞ்சனபண்டாரம் | vecaṉa-paṇṭāram n. <>வெஞ்சனம்+. See வெஞ்சனம், 1. வெஞ்சனபண்டாரம் கொள்ளவும் (S. I. I. iv, 292). . |
| வெஞ்சனம் | vecaṉam n. <>vyajana. 1. Vegetable relish; சமைத்த கறியுணவு. Colloq. 2. Condiment; 3. Sauce; 4. Cinsonant; |
| வெஞ்சிலைச்செல்வன் | ve-cilai-c-celvaṉ n. <>வெம்-மை + சிலை3+. Vīrabhadra; வீரபத்திரன். (W.) |
| வெஞ்சினம் 1 | ve-ciṉam n. <>id.+. Extreme anger; கடுங்கோபம். வெஞ்சின மின்மையும் (சிறுபாண். 210). |
| வெஞ்சினம் 2 | veciṉam n. See வெஞ்சனம், 1, 2, 3. வெஞ்சினங்களென்றும் விரும்பாளே (தனிப்பா. i, 304, 25). . |
| வெஞ்சுடர் | ve-cuṭar n. <>வெம்-மை+. Sun; சூரியன். வெஞ்சுட ரொளியுநீ (பரிபா. 3, 67). (பிங்.) |
| வெஞ்சுடர்க்கிரணன் | ve-cuṭar-k-kira-ṇaṉ n. <>id.+சுடர்+. Sun; சூரியன். (திவா.) |
| வெஞ்சொல் | ve-col n. <>id.+ சொல்3. Angry, harsh word; கடுஞ்சொல். கருமன நச்சு வெஞ்சொற் கட்டியங்காரன் (சீவக. 744). |
| வெஞ்சோறு 1 | ve-cōṟu n. <>id.+சோறு 3. Fresh, cooked rice, as hot; சுடுசோறு. எயிற்றியரட்ட வின்புளி வெஞ்சோறு (சிறுபாண். 175). |
| வெஞ்சோறு 2 | ve-cōṟu n. <>வெண்-மை +id. Plain rice, without curry; கறி சேர்க்கப்படாத சோறு. |
| வெட்கக்கேடு | veṭka-k-kēṭu n. <>வெட்கம்+. Disgrace, shame. See வெட்கம். சொன்னால் வெட்கக்கேடு; அழுதால் துக்கக்கேடு. |
| வெட்கங்கெட்டவன் | veṭkaṅ-keṭṭavaṉ n. <>id.+. Shameless fellow; மானமற்றவன். |
| வெட்கங்கெடு - த்தல் | veṭkaṅ-keṭu- v. tr. <>id.+. To treat shamefully, to disgrace; அவமானப்படுத்துதல். (W.) |
