Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெட்டாந்தரை | veṭṭān-tarai n. <>வெட்டை2+ஆ6-+தரை3. Dry, hard ground, without vegetation; காய்ந்திறுகிய நிலம். (யாழ். அக.) |
| வெட்டி 1 | veṭṭi n. <>வெட்டு-. [T. vaṭṭi ., baṭṭe M. veṭṭi.] 1. Spade; மண்வெட்டி. (W.) 2. Path, road, way; 3. An ancient tax; 4. See வெட்டியான், 1, 2. |
| வெட்டி 2 | veṭṭi n. cf. vyartha. [T. vaṭṭi, O. K. biṭṭe, M. veṭṭi.] Uselessness, worthlessness; பயனின்மை. உன்னை வெட்டிக்குப்பெற்று வேலிக்காலிற் போட்டிருக்கிறதா? |
| வெட்டி 3 - த்தல் | veṭṭi- 11. v. inr. prob. வெட்டு-. To be harsh, rough or violent; கடுகடுப்பாதல். இத்தனைபோது படுத்தின சிறுமையாலே வெட்டித்து (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 188). |
| வெட்டி 4 | veṭṭi n. See வெட்டிவேர். (யாழ். அக.) . |
| வெட்டிக்காசு | veṭṭi-k-kācu n. <>வெட்டி1+காசு3. An ancient tax; பழைய வரிவகை. (I. M. P. Cg. 1068.) |
| வெட்டிக்குப்பெறு - தல் | veṭṭikku-p-peṟu v. tr. <>வெட்டி2+. To get gratis or for nothing; இலவசமாகக் கிடைத்தல். Colloq. |
| வெட்டிக்கொட்டு - தல் | veṭṭi-k-koṭṭu- v. tr. <>வெட்டு-+. 1. To dig and remove, as earth; மண்முதலியன தோண்டி அப்புறப்படுத்துதல். 2. See வெட்டிச்சாய்-, 3. அவன் வெட்டிக்கொட்டினானோ? 3. See வெட்டிக்கொடு-. Loc. |
| வெட்டிக்கொடு - த்தல் | veṭṭi-k-koṭu- v. tr. <>id.+. 1. To give liberally, used ironically; தாராளமாகக் கொடுத்தல். 2. To help one with; |
| வெட்டிச்சாய் - த்தல் | veṭṭi-c-cāy- v. tr. <>id.+. 1. To cut down; மரம் முதுலியன முறித்து வீழ்த்துதல். 2. To kill outright; 3. To accomplish, as greath things, used ironically; 4. See வெட்டிக்கொடு-. Loc. |
| வெட்டிச்சோறு 1 | veṭṭi-c-cōṟu n. <>வெட்டி1+சோறு1. An ancient tax; பழைய வரிவகை. (Insc.) |
| வெட்டிச்சோறு 2 | veṭṭi-c-cōṟu n. <>வெட்டி2+id. Food given to a useless mouth; தண்டச்சோறு. |
| வெட்டிது | veṭṭitu n. <>வெட்டி-மை. [K.beṭṭitu.] That which is hard or rough or violent, as cutting; கடுமையானது. வெட்டிதாக வார்த்தை சொல்ல (ஈடு, 3, 5, 7). |
| வெட்டிநிலம் | veṭṭ-nilam n. <>வெட்டி2+. Untilled land, as lying waste; தரிசுநிலம். Loc. |
| வெட்டிப்பயல் | veṭṭ-p-payal n. <>id.+. Worthless fellow; உபயோகமில்லாதவன். (W.) |
| வெட்டிப்பாட்டம் | veṭṭ-p-pāṭṭam n. <>வெட்டி1+பாட்டம்1. An ancient tax; பழைய வரிவகை. வெட்டிப்பாட்டமும் . . . எப்பேர்ப்பட்ட இறைகளு முட்பட (Insc.). |
| வெட்டிப்பாடு - தல் | veṭṭi-p-pāṭu- v. tr. <>வெட்டு-+. To compose a poem in retort, without using the opponent's phraseology; ஒரு புலவன் தன்னைப் பழித்துக்கூறிய சொற்களாலன்றிப் பிறவாறு அவனைப்பழித்துப் பாடுதல். |
| வெட்டிப்புடவை | veṭṭi-p-puṭavi n. <>வெட்டி1+. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. i, 91.) |
| வெட்டிப்புரட்டு - தல் | veṭṭi-p-puraṭṭu- v. <>வெட்டு-+. tr. To work hard, used ironically; கடுமையாக வேலைசெய்தல். Colloq. -tr. See வெட்டிச்சாய்-, 3. |
| வெட்டிப்பேச்சு | veṭṭi-p-pēccu n. <>வெட்டி-+. Vain talk, useless speech; வீண்வார்த்தை. வெட்டிப்பேச்சுப் பேசாதே காரியத்தை முடி. |
| வெட்டிப்பேசு - தல் | veṭṭi-p-pēccu v. <>வெட்டு-+. tr. 1. To retort, refute; எதிர்த்து சொல்லுதல். 2. To rebuke, chide; To speak harshly; |
| வெட்டிமுறி - த்தல் | veṭṭ-muṟi- v. tr. <>id.+. See வெட்டிச்சாய்-, 1, 2, 3. . |
| வெட்டிமை | veṭṭimai n. <>id. 1. Harshness, roughness; கொடுமை. 2. Harshness of speech; 3. Anger; 4. Service of a Veṭṭiyāṉ; |
| வெட்டியார்பறையார் | veṭṭiyār-paṟaiyar n. <>வெட்டியான்+. A sub-division of the Peṟaiyas, who act as drummers on certain ceremonial occasions; சில விசேடகாலங்களிற் பறைகொட்டல் புதியும் பறையர்வகையார். (M. M. 655.) |
| வெட்டியான் | veṭṭiyāṉ n. prob. வெட்டு-.[T. veṭṭivādu.] 1. A Village menial servant; ஓர்வகைக் கிராம ஊழியக்காரன். (C.G.) 2. One who cremates corpses; 3. An insect that cuts off the leaves of crops; |
