Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெட்டுக்குளம்பு | veṭṭ-k-kuḷampu n. <>id.+. Cloven hoof ; கால்நடையின் பிளந்துள்ள பாதம். (அபி. சிந்.) |
| வெட்டுக்கூர் | veṭṭ-k-kūr n. <>id.+. Pointed nail ; கூராணி. Loc. |
| வெட்டுச்சட்டை | veṭṭu-c-caṭṭai n. <> id.+சட்டை1. A kind of jacket for girls ; பெண்களணியும் ஒருவகை அங்கி. (J.) |
| வெட்டுண்(ணு) - தல் | veṭṭuṇ- v. intr. <>id.+. To be cut ; முறிபடுதல். |
| வெட்டுணி | veṭṭuṇi n.prob. வெட்டுண்-. (W.) 1. Disobedient child ; கீழ்ப்படியாத பிள்ளை. 2. Villain; |
| வெட்டுத்தட்டு | veṭṭu-t-taṭṭu n. perh. வெட்டு+தட்டு2. Ear of a drum ; பறையின் வாய்வார். (W.) |
| வெட்டுத்தாக்கு | veṭṭu-t-tākku n. <>id.+தாக்கு2. Excavated pit ; மண்ணெடுத்த குழி . Loc. |
| வெட்டுத்தாவு | veṭṭu-t-tāvu n. <>id.+தாவு5. Tank pit; deep portion of a tank ; குளம் ஏரி முதலியவற்றில் வெட்டப்பட்ட ஆழமான பகுதி. (R. T.) |
| வெட்டுப்பகை | veṭṭu-p-pakai n. <>id.+. See வெட்டுப்பழி. இட்டவன் இராவிட்டால் வெட்டுப்பகை. . |
| வெட்டுப்படு - தல் | veṭṭu-p-paṭu- v. intr. <>id.+. See வெட்டுண்-, வெட்டுப்பட்டாய் மகனே தலைநாளின் விதிப்படியே (தனிப்பா. i, 149, 54). . |
| வெட்டுப்படை | veṭṭu-p-paṭai n. <>id.+. Army of swordsmen ; வாட்படை. (W.) |
| வெட்டுப்பழி | veṭṭ-p-paḻi n. <>id+. Mortal feud ; தீராப்பகை. அவனுக்கும் இவனுக்கும் வெட்டுப்பழி குத்துப்பழியாக இருக்கிறது. |
| வெட்டுப்பாக்கு | veṭṭu-p-pākku n. <>id.+பாக்கு1. Split areca nut of inferior quality ; இரண்டாகத் துண்டிக்கப்பட்ட மட்டமான பாக்கு. Loc. |
| வெட்டுப்பாக்குவெட்டி | veṭṭu-p-pākku-veṭṭi n. <>id.+. A kind of areca-nut cracker ; பாக்கு வெட்டிவகை . Nā. |
| வெட்டுப்பூச்சி | veṭṭu-p-pūcci n. <>id.+. See வெட்டுக்கிளி. . |
| வெட்டுமருந்து | veṭṭu-maruntu n. <>id.+. Medicinal herbs, roots, barks, etc., as obtained by cutting ; வெட்டிக் கொள்ளப்படும் மருந்துவகை. ā. |
| வெட்டுமாலை | veṭṭu-mālai n. <>id.+perh. மாலை2. See வெட்டுத்தாக்கு. Loc. . |
| வெட்டுமாறன் | veṭṭumāṟaṉ n. perh. id. +மாறு-. An intoxicant ; வெறிதரும் ஒருவகைப் பண்டம். (யாழ். அக.) |
| வெட்டுமுளை | veṭṭu-muḻai n. <>id.+. Money recently minted; புதிதா யடிக்கப்பட்ட நாணயம். (W.) |
| வெட்டுரை 1 | veṭṭurai n. <>id.+ உரை6. Cutting word, harsh speech; வெடுவெடுப்பான பேச்சு. (யாழ். அக.) |
| வெட்டுரை 2 | veṭṭurai n. <>id.+உரை4. See வெட்டுரைப்பணம். (W.) . |
| வெட்டுரைப்பணம் | veṭṭurai-p-paṇam n. <>வெட்டுரை2+பணம்2. Bad coin; counterfeit coin; கள்ளநாணயம். (யாழ். அக.) |
| வெட்டுவாய் | veṭṭu-vāy n. <>வெட்டு-+. (W.) 1. Gash, opening of a cut; அறுபட்ட புண்வாய். 2. Joining; |
| வெட்டுவாலி | veṭṭu-vāli n. <>id.+வால்2. See வெட்டுக்கிளி. (W.) . |
| வெட்டுவாள் | veṭṭu-vāḷ n. <>id.+வாள்1. A kind of chopper; வெட்டுக்கத்திவகை. (யாழ். அக.) |
| வெட்டுவெட்டனல் | veṭṭu-veṭṭeṉal n. Expr. of (a) being angry; சினக்குறிப்பு: (b) being harsh or rough; (c) being frightened; (d) Dazzling; |
| வெட்டுவேர் | veṭṭuvēr n. See வெட்டிவேர், 1. (பிங்.) . |
| வெட்டுவேளாண்மை | veṭṭu-vēḷāṇmai n. <>வெட்டு-+. Harvest ; அறுவடை . (W.) |
| வெட்டுளி | veṭṭuḷi n. <>id.+உளி1. See வெட்டிரும்பு. (C. E. M.) . |
| வெட்டெனம் | veṭṭeṉam n. perh. vēṣṭana. Ceremonial commencement of the festival of a village deity ; கிராமதேவதைக்குத் திருவிழாத் தொடங்குகை . Loc. |
| வெட்டெனல் 1 | veṭṭeṉal n. perh. வெட்டை2. Expr. of harshness, violence, severity; கடுமைக்குறிப்பு. வெட்டெனப் பேசன்மின் (தேவா. 1241, 3) . |
| வெட்டெனல் 2 | veṭṭeṉal n. prob. வெற்றெனல். Expr. of giving consent by silence; மௌனமாய் இசைதற் குறிப்பு. ஆய்ச்சி . . . குறுங்கயிற்றாற்கட்ட வெட்டென் றிருந்தான் (திவ். பெரியதி. 5, 9, 7). |
| வெட்டெனவு | veṭṭeṉavu n. <>வெட்டனல்1. 1. Severity, harshness; கடுமை. 2. Hardness; 3. That which is severe or hard; |
