Word |
English & Tamil Meaning |
---|---|
ஈர்வாணி | īr-vāṇi n. See ஈர்வடம். (J.) . |
ஈர்வாரி | īr-vāri n. <>ஈர்3+வார். See ஈர்வலி. . |
ஈர்வாள் | īr-vāḷ n. <>ஈர்1-+. [M. īrvāḷ.] Saw; இரம்பம். (திவா.) |
ஈர்ஷை | īrṣai n. <>īršā. Envy, Jealousy; பொறாமை. (சி.சி. 2, 39, சிவாக்.) |
ஈரக்கல் | īra-k-kal n. Corundum; குருவிந்தக்கல். (W.) |
ஈரங்கி | īraṅki n. <>E. hearing. (Law.) Judge's investigation and hearing of arguments in a case; வழக்குக்கேட்கை. Mod. |
ஈரங்கொல்(லு) - தல் | īraṅ-kol- v. tr. <>ஈரம்+. To expel moisture from; to allow to dry; ஈரமுலர்த்துதல். ஈரங்கொன்றபின்...குஞ்சியை (சீவக. 2422). |
ஈரங்கொல்லி | īraṅ-kolli n. <>id.+ கொல்-. Washerman; வண்ணான். (பிங்; ஈடு, 7, 6, 10.) |
ஈரங்கொள்ளி | īraṅ-koḷḷi n. Dial. var. of ஈரங்கொல்லி. ஈரங்கொல்லி. (S.I.I. ii, 277.) |
ஈரங்கோலி | īraṅ-kōli n. Dial. var. of ஈரங்கொல்லி. ஈரங்கொல்லி. (சூடா.) |
ஈரடி | īr-aṭi n. <>இரண்டு+அடி. 1. (Pros.) Two lines; இரண்டடி. ஈரடி வெண்பா (காரிகை, செய்யு. 3). 2. Uncertainty; 3. Fork, that which is bifurcate; |
ஈரடிப்பயன் | īraṭi-p-payaṉ n. <>ஈரடி+. 1. Ambiguity in conversation, equivocation; கவர் பொருள். (W.) 2. Double dealing, acting with duplicity so as to suit both parties; 3. Uncertainty, dubiousness; 4. Diverseness; disagreement; discrepancy, as of a report or an account differently related; |
ஈரடிவருக்கம் | īraṭi-varukkam n. <>id.+. Name given to a verse of two lines in which the first and middle letters of each are the same; செய்யுள் வகை. (W.) |
ஈரடிவெண்பா | īr-aṭi-veṇpā n. <>id.+. Veṇpā of two lines. See குறள்வெண்பா. (காரிகை, செய். 3.) . |
ஈரடுக்கொலி | īr-aṭukkoli n. <>இரண்டு+அடுக்கு+. Reiterated words imitative of sound, as நெறுநெறெனல்; இரட்டையாக அடுக்கிவரும் ஒலிக்குறிப்புச்சொல். (W.) |
ஈரணி | īr-aṇi n. <>ஈர்4+. Garments put on by women before bathing; புனலாடும்போது மகளிர் அணிதற்குரியவை. (பரிபா. 7, 61.) |
ஈரணை | īr-aṇai n. <>இரண்டு+அணை. Two pairs of oxen; இரண்டு சோடி மாடு. (J.) |
ஈரந்துவட்டு - தல் | īran-tuvaṭṭu- v. tr. <>ஈரம்+. To wipe the head and body after bathing; நீராடியபின் ஈரத்தைத்துடைத்தல். |
ஈரநா | īranā n. <>id.+. Slanderous tongue; புறங்கூறும் நாக்கு. ஈரநாவுக் கெலும்பில்லை. (W.) |
ஈரப்பசை | īra-p-pacai n. <>id.+. 1. Moisture, as in lands; wetness, as in clothes; ஈரக்கசிவு. 2. Sympathy, mercy, kindness, as the moisture in one's heart; |
ஈரப்பலா | īra-p-palā n. <>id.+. 1. Bread-fruit tree, l. tr., Artocarpus incisa; ஆசினி. (திவா.) 2. Monkey Jack, m. tr., Artocarpus Lakucha; |
ஈரப்பற்று | īra-p-paṟṟu n. <>id.+. 1. Moisture, dampness, fluid exuding or diffused; ஈரக்கசிவு. 2. Sympathy, as the moisture in one's heart; |
ஈரப்பாடு | īra-p-pāṭu n. <>id.+ படு1-. 1. Condition of being moist, opp. to உலத்தற்பாடு; ஈரமாயிருக்கை. Loc. 2. Tenderness of heart; |
ஈரம் | īram n. [T. īmiri, K. īra, M. īram.] cf. nīra. 1. Wet, moisture, humidity, dampness; நீர்ப்பற்று. (பாரத. திரொளபதி. 97.) 2. Freshness, greenness; 3. Coolness, agreeableness, pleasantness; 4. Love, affection, attachment; 5. Grace, mercy, favour; 6. Knowledge, wisdom; 7.Arnotto, s.tr., Bixa orellana; 8. Sugar-cane. See கரும்பு. (மலை.) 9. Mottled melon. See வெள்ளரி. (இராசவைத்.) |
ஈரம்பனை | īram-paṉai n. <>ஈரம்+. [M. īrampana.] Jaggery-palm. See கூந்தற்பனை. (L.) . |
ஈராசு | īr-aracu n. <>இரண்டு+. Government by two, dyarchy; இருவர் ஆளுகை. ஈராசு தவிர்த்தாலிறே சேஷித்வம் பூர்ணமாவது (திவ். அமலனாதி. 1, வ்யா.) |
ஈரல் 1 | īral n. <>ஈர்4. [M. īral.] Internal organ in the body as the liver or spleen; ஈருள். (பிங்.) |
ஈரல் 2 | īral n. <>ஈர்1-. Harassing, tormenting; வருந்துகை. பாதகவர்க்கத்துக்கு ஈரலாம்படி (ஈடு, 9, 9, பர.) |