Word |
English & Tamil Meaning |
---|---|
ஈருள்ளிக்கோரை | īr-uḷḷi-k-kōrai n. <>ஈருள்ளி+. A sedge, with culm terete, Cyperus articulatus; கோரைவகை. (A.) |
ஈரொட்டு | īr-oṭṭu n. <>இரண்டு+ஒட்டு-. 1. Uncertainty, doubt; நிச்சயமின்மை. நோயாளியின் காரியம் ஈரொட்டாயிருக்கிறது. 2. Conditional bargain. |
ஈரொற்றுவாரம் | īr-oṟṟu-vāram n. <>id.+. Musical composition sung with double beat; இரண்டு மாத்திரை பெற்றுவருஞ் செய்யுள். (சிலப். 3, 136, உரை.) |
ஈவி - த்தல் | īvi- 11 v. tr. <>ஈ-. To distribute, apportion; பங்கிடுதல். Colloq. |
ஈவிரக்கம் | īvirakkam n. <>ஈவு+இரக்கம். Compassion associated with liberality, sympathy; மனக்கசிவு. Colloq. |
ஈவு | īvu n. <>ஈ-. [T. īvi.] Giving, bestowing; கொடை. ஈவுதனைமேற்கொண்ட (கம்பரா. கார்முக. 22). 2. Gift, donation; 3. Distribution, sharing; 4. Disappearance, vanishing; 5. (Math.) Quotient; |
ஈவுக்கணக்கு | īvu-k-kaṇakku n. <>ஈவு+. (Math.) Division; வகுத்தற்கணக்கு. (W.) |
ஈவுசோர்வு | īvu-cōrvu n. <>id.+. Seasonableness and unseasonableness with particular reference to the resources on hand; சந்தர்ப்பா சந்தர்ப்பம். ஈவுசோர்வு பார்த்துச் செய்யவேண்டும். Loc. |
ஈவுதரம் | īvu-taram n. <>id.+. Average collection; சராசரி வரிவசூல். (G. Tn. D. 288.) |
ஈவுமானியம் | īvu-māṉiyam n. <>id.+. Grant of a proportion or percentage on any branch of land revenue, which fluctuates with the improvement or deterioration of the produce (R. F.); நிலவரும்படிக்குத் தக்கபடி ஈவித்துக்கொடுக்கும் சுதந்திரம். |
ஈவோன் | īvōṉ n. <>ஈ-. 1. Donor, benefactor; கொடையாளி. 2. Teacher; |
ஈழக்காசு | īḻa-k-kācu n. <>ஈழம்+. A coin of Ceylon; நாணயவகை. (I.M.P. Tj. 38.) |
ஈழக்குலச்சான்றார் | īḻa-k-kula-c-cāṉṟār n. <>id.+. Division of the Cānār caste; சான்றார் குலவகுப்பு. (பெரியபு. ஏனாதி. 2.) |
ஈழங்கனாக்காண்(ணு) - தல் | īḻaṅ-kaṉā-k-kāṇ- v. intr. <>id.+. To dream of things which had never before been in one's experience, referring to the dream experiences of those in ancient times who had not seen Ceylon; கண்ணாற்காணாததைச் சொப்பனங்காணுதல். (திவ். திருக்குறுந். 1, வ்யா.) |
ஈழங்கிழங்கு | īḻaṅ-kiḻaṅku n. <>id.+. Wing-stalked yam, m. cl., Dioscorea alatai; பெருவள்ளி. (L.) |
ஈழச்சேரி | īḻa-c-cēri n. <>id.+. Street inhabited by toddy-drawers; கள்ளிறக்குபவர் வாழிடம். (S.I.I. ii, 44.) |
ஈழஞ்சுற்றியோடல் | īḻa-cuṟṟi-y-ōṭal n. <>id.+. Sailing round the eastern side of Ceylon; இலங்கையின் கிழக்குவழியே செல்லுங் கப்பற்பிரயாணம். (W.) |
ஈழத்தலரி | īḻattalari n. <>id.+. Pagoda-tree, s. tr., Plumeria acutifolia; அலரிவகை. (பதார்த்த. 117.) |
ஈழதண்டம் | īḻa-taṇṭam n. <>īṣā+daṇda. The shaft of a carriage; ஏர்க்கால். நேமிவரையு மந்தரமும்... ஈழதண்டமாய் (கூர்மபு. திரிபுர. 39). |
ஈழநாடு | īḻa-nāṭu n. <>ஈழம்+. Ceylon; இலங்கை. (தேவா. 1239, 7.) |
ஈழப்புளி | īḻa-p-puḷi n. <>id.+. Malabar gamboge, l. tr., Garcinia cambogia; கொறுக்காய்ப்புளி. |
ஈழம் | īḻam n. <>Pāli, Sīhala. <>Simhala. 1. Ceylon; சிங்களம். (திவா.) 2. Gold; . 3. Toddy, arrack; 4. Spurge, Euphorbia; |
ஈழம்பூட்சி | īḻam-pūṭci n. <>id.+. An ancient tax; ஒரு பழையவரி. (S.I.I. ii, 521, 31.) |
ஈழமண்டலம் | īḻa-maṇṭalam n. <>id.+. The country of Ceylon; இலங்கை. ஈழமண்டலமளவு திறைகொண்ட (தமிழ்நா. 253). |
ஈழவக்கத்தி | īḻava-k-katti n. <>ஈழவர்+. Knife used by īḷavas; ஈழவர்க்குரிய கத்தி. (தொல். எழுத். 153, உரை.) |
ஈழவன் | īḻavaṉ n. <>ஈழம். [T. īdigavadu, M. īḻavaṉ.] One of a caste of people who emigrated from Ceylon in the remote past and settled in Tinnevelly, Travancore and Malabar, the caste of toddy-drawers; மலையாள நாட்டிற் கள்ளிறக்குஞ் சாதியார். தெங்கும் பனையும் இவர்கள் மனமின்றி ஈழவர் ஏறப்பெறாதாராகவும் (S.I.I. ii, 509). |
ஈழுவன் | īḻuvaṉ n. <>id. See ஈழவன். . |
ஈளை | īḷai n. [M. īḷa.] 1. Phlegm; கோழை. ஈளை யேங்கி யிருமி (திவ். பெரியதி. 1, 3, 6). 2. Asthma; 3. Consumption, tuberculosis; |