Word |
English & Tamil Meaning |
---|---|
ஈளைத்தரை | īḷai-t-tarai n. prob. ஈரம்+. Moist ground; ஈரத்தரை. (சிலப். 3, 96, உரை.) |
ஈற்றசை | īṟṟacai n. <>ஈறு1+அசை. Expletive at the end of a line or sentence in a verse or at the end of a word; அடியிறுதி வாக்கியவிறுதி சொல்லிறுதிகளில் வரும் அசைச்சொல். (சீவக. 334, 228.) |
ஈற்றம் | īṟṟam n. <>ஈன்-. [M. īṟṟam.] Giving birth, bringing forth; ஈனுகை. பேரறத்தால¦ற்றம் (சிறுபஞ். 74). |
ஈற்றயல் | īṟṟayal n. <>ஈறு1+அயல். Penultimate; இறுதிக்கடுத்தது. ஈற்றய லாவோ வாகலும் (நன். 353). |
ஈற்றா | īṟṟā n. <>ஈற்று+ஆ. Cow that has calved; ஈற்றுப்பசு. (சூடா.) |
ஈற்று | īṟṟu n. <>ஈன்-. [M. īṟṟu.] 1. Bringing forth, applied to animals; ஈனுகை. மானீனு மீற்றினிடை (பிரபோத. 11, 88) 2. Young one brought forth; 3. Young plant; |
ஈற்றுக்கடன் | īṟṟu-k-kaṭaṉ n. <>ஈறு1+. Funeral rites, being the last duty to be performed to one's relative; அந்திமக் கிரியை. ஈற்றுக் கடன்பிறவுந் தாதைக்கு விதியா லாற்றி (திருவிளை. தடாதகை. 42.) |
ஈற்றுமிசை. | īṟṟu-micai. n. <>id.+. See ஈற்றயல். (திருக்கோ. 164, உரை.) . |
ஈற்றுளை - தல் | īṟṟuḷai- v. intr. <>ஈற்று+உளை. To travail; பிரசவவேதனைப்படுதல். (கூர்மபு. தக்கன்வேள். 57.) |
ஈற்றெழுத்துக்கவிசொல்லல் | īṟṟeḻuttu-k-kavi-collal n. <>ஈறு1+. Exhibition of one's memory in which after one has recited a verse, another must recite a verse beginning with the last letter of that very verse or the letter next to it; ஒருவர்கூறிய பாட்டின் கடையெழுத்தை முதலாகக்கொண்டு பிறர் கவியை ஒப்பித்தல். |
ஈற்றேறு - தல் | īṟṟēṟu- v. intr. <>ஈற்று+. Grain maturing on the stalk; பயிர்க்கரு முதிர்தல். சாலி யீற்றேறும் போது (ஏரெழு. 47.) |
ஈறல் | īṟal n. <>இறு-. 1. Grief, as of a broken heart; deep-seated sorrow; துக்கம். என்னெஞ்சீறலை யாருக்குச்சொல்லி ஆற்றுவேன். (J.) 2. Closeness, thickness; |
ஈறற்பற்றை | īṟaṟ-paṟṟai n. Dense thicket; நெருக்கமான தூறு. (W.) |
ஈறாந்தம் | īṟāntam n. <>ஈறு1+அந்தம். Final end, utmost limit; ஆகமுடிவு. (W.) |
ஈறிலான் | īṟilāṉ n. <>id.+ இல்லான். God, He who has no end; கடவுள். (கந்தபு. திருக்கல். 22.) |
ஈறிலி | īṟili n. <>id.+ இல்லி. See ஈறிலான். (அக. நி.) . |
ஈறு 1 | īṟu n. <>இறு1-. 1. End, termination; அந்தம். (திவா.) 2. Death; 3. Limit, boundary; |
ஈறு 2 | īṟu n. prob. எயிறு. The gums of the teeth; பல்நிற்கும் தசை. |
ஈறுகட்டி | īṟu-kaṭṭi n. prob. <>ஈறு1+. Calomel, bichloride of mercury; இரசகர்ப்பூரம். (சங். அக.) |
ஈறுகரை - தல் | īṟu-karai- v. intr. <>ஈறு2+. To waste away, as the gums of the teeth; பல்ல¦று கெடுதல். (W.) |
ஈறுகொழு - த்தல் | īṟu-koḻu- v. intr. <>id+. To become swollen, as the gums of the teeth; பல்ல¦று வீங்குதல். |
ஈறுதப்பினபேச்சு | īṟu-tappiṉa-pēccu n. <>ஈறு1+. Bad language; தகாத வார்த்தை. Loc. |
ஈன் 1 | īṉ n. <>இ3. 1. This place; இவ்விடம், ஈன்வரு கென்ன (தணிகைப்பு. வீராட்ட. 89). 2. This world; |
ஈன்(னு) 2 - தல் | īṉ- 8 v. tr. [T. īnu, K. M. īn.] 1. To bear, bring forth, yean; கருவுயிர்த்தல். (நாலடி. 400). 2. To produce, yield, bring into being; |
ஈன்றணிமை | īṉṟaṇimai n. <>ஈன்-+அணிமை. Time immediately after calving, said of a cow; புனிறு. (திவா.) |
ஈன்றணுமை | īṉṟaṇumai n. See ஈன்றணிமை. (தொல். பொ. 146.) . |
ஈன்றதாய் | īṉṟa-tāy n. <>ஈன்-+. Mother who brought forth, one of ai-vakai-t-tāyar, q.v.; பெற்றதாய் உயிர்த்தபொழுதே... ஓடிற் றீன்றதாய் (பிரபுலிங். பிரபுதே. 63). |
ஈன்றவள் | īṉṟavaḷ n. <>id. See ஈன்றாள். (சூடா.) . |
ஈன்றாள் | īṉṟāḷ n. <>id. Mother; தாய். ஈன்றாள் பசிகாண்பா னாயினும் (குறள், 656). |
ஈன்றான் | īṉṟāṉ n. <>id. 1. Father; தந்தை. (பிங்.) 2. Brahmā, the creator; |
ஈன்றோன் | īṉṟōṉ n. See ஈன்றான், 1. (சூடா.) . |
ஈனசந்தி | īṉa-canti n. <>hīna+. 1. Inopportune time; அகாலம். 2. Worry, trouble; |
ஈனசாதி | īṉa-cāti n. <>id.+. Lowest caste; இழிந்தசாதி. |