Word |
English & Tamil Meaning |
---|---|
ஈனசுரம் | īṉa-curam n. <>id.+. Low voice or tone; தாழ்ந்தகுரல். அவன் ஈனசுரமாய்ப் பேசினான். |
ஈனத்தார் | īṉattār n. prob. ஈசன்றார். Cassia. See கொன்றை. (மலை.) . |
ஈனதை | īṉatai n. <>hīna-tā. Low state, degraded condition; இழிவு தரமற வீனதை யடைய (ஞானவா. தாசூ. 23.) |
ஈனம் 1 | īṉam n. <>hīna. 1. Degradation, baseness, meanness; இழிவு. ஈனமா யில்லிருந்து (நாலடி, 198). 2. Deficiency, want; |
ஈனம் 2 | īṉam n. <>ஈளம் corr. of ஈழம் (ள being misread ன). Spurge. See கள்ளி. (மலை.) . |
ஈனல் | īṉal n. <>ஈன்-. Ear of corn; கதிர். (W.) |
ஈனவன் | īṉavaṉ n. <>hīna. Degraded person, low fellow; இழிந்தோன். (திவ். இயற். நான்மு. 6.) |
ஈனன் | īṉaṉ n. <>id. See ஈனவன். (திருவாத. பு. திருப்பெரு. 133.) . |
ஈனனம் | īṉaṉam n. Silver; வெள்ளி. (அக. நி.) |
ஈனாக்குமரி | īṉā-k-kumari n. <>ஈன்-+ஆ neg.+. Young woman who has not yet borne children; மகப்பெறாத இளம்பெண். (W.) |
ஈனாமலடு | īṉā-malaṭu n. <>id.+. See ஈனாமாடு. (W.) . |
ஈனாமாடு | īṉā-māṭu n. <>id.+. Barren cow or buffalo; மலட்டுப்பசு முதலியன. (W.) |
ஈனாயம் | īṉāyam n. <>hīna. Ignominy, disgrace, dishonour; இழிவு. Loc. |
ஈனாவரக்கி | īṉā-v-arakki n. <>hīna+. Cruel, merciless woman; lit., Rākṣasa woman who has not borne children; கொடியவள். (W.) |
ஈனில் | īṉ-il n. <>ஈன்-+இல். Lying-in-chamber; பிரசவிக்கும் இடம். பேடைச்செவ்வி நோக்கி யீனி லிழைக்க (பதினோ. திருவாரூ. 19). |
ஈனை | īṉai n. 1. [T. īne.] Vein of a leaf; இலை நரம்பு. 2. Outline of a picture; |
ஈனையெழுது - தல் | īṉai-y-eḻutu- v. intr. <>ஈனை+. To delineate, make the first outline of a picture, design a pattern; சித்திரக்குறிப்பு வரைதல். (W.) |
ஈனைவாங்கு - தல் | īṉai-vāṅku- v. intr. <>id.+. See ஈனையெழுது. (W.) . |
ஈனோர் | īṉōr n. <>ஈன். Those who are of this world; இவ்வுலகத்தோர். ஈனோர் வடிவிற் காண்டலில்லென (சிலப். பதிகம், 53). |
ஈஜாபு | ījāpu n. <>Arab. ijab. Proposal; பிரேரணை. விவாஹம் நிறைவேறுவதற்கு ஈஜாபு அவசியமானது. Muham. |
ஈஷணாத்திரயம் | īṣaṇā-t-tirayam n. <>īsaṇā+traya. The three desires or attachments. See ஏஷணாத்திரயம். . |
ஈஷு - தல் | īṣu- 5 v. tr. <>இழிசு-. To smear, daub. வீட்டிற்கு மண்ணை ஈஷினான். Brāh. |
உ 1 | u . Fifth letter of the Tamil alphabet representing the close back lax rounded vowel sound; ஐந்தாமுயிரெழுத்து. |
உ 2 | u . Symbol for the number 2, usually written without the loop (உ); அ உ வறியா வறிவிலிடைமகனே (யாப். வி. 37.) |
உ 3 | u . 1. (a). Euphonic prothesis of the nature of an on-glide in Sanskritic words beginning with , யூ, யோ, ரு, ரூ, ரோ, லு, லூ, லோ, as in உயுத்தம் for யுத்தம், உரோகிணி for ரோகிணி, உலோபி for லோபி. (b) Euphonic medial anaptyxis appearing in Sanskritic words in or . 2. Final euphonic anaptyxis developing from the consonantal ending of a word, as in பல்லு for பல், and also in combinations, as in அவனுக்கு for அவற்கு; |
உ 4 | u part. 1. Demonstr.: (a) Base of the demonstr. pron. expressing aperson, place or thing occupying an intermediate position, neither far nor near, and meaning yonder or occupying a position near the person or persons spoken to; (b) Demonstr. part. before nouns, 1. (a) ஓர் அகச்சுட்டு. செய்குன்றுவை (திருக்கோ. 223). (b) புறச்சுட்டு. ஊழையு முப்பக்க்ங்காண்பர் (குறள், 620). 2. (a) An ending of vbl. nouns, as in வரவு; (b) An ending of abstract nouns, as in மழவு; (c) An ending of the past vbl. pple., as inசெய்து; |
உ 5 | u n. <>u. Energy of šiva; சிவசக்தி. (திருமந். 1751.) |
உக்கம் 1 | ukkam n. prob. உ4. [M. ukkam.] Waist; இடை. உக்கஞ்சேர்த்திய தொருகை (திருமுரு. 108). |