Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெளிமான் 1 | veḷi-māṉ n. perh. id.+மான்1. 1. Ravine deer, Gazella brunetti; மான் வகை. (W.) 2. Hind, female deer; |
| வெளிமான் 2 | veḷimāṉ n. A chief of the šaṇgam age; சங்ககாலத்துத் தலைவருள் ஒருவன். வெளிமானுழைச் சென்றார்க்கு (புறநா. 162). |
| வெளிமுகடு | veḷi-mukaṭu n. <>வெளி1+. The utmost limit of space ; அண்டத்தின் புறவெல்லை. அகில வெளிமுகடிடிய (பாரத. ஆறாம் போர். 22). |
| வெளிமுற்றம் | veḷi-muṟṟam n. <>id.+. 1. Courtyard of a house; வீட்டின் வெளிப்புறத்துள்ள திறந்த வெளி. 2. Place marked off in a kitchen for washing utensils; |
| வெளிமூலம் | veḷi-mūlam n. <>id.+. External piles ; முளைகள் வெளித்தோன்றும் மூலநோய்வகை. (M. L.) |
| வெளியங்கம் | veḷi-y-aṅkam n. <>id.+அங்கம். Outward show; pomp ; ஆடம்பரம். Loc. |
| வெளியடை | veḷi-y-aṭai n. <>id. Curtain, veil ; திரைச்சீலை. (W.) |
| வெளியந்தரம் | veḷi-y-antaram n. <>id.+அந்தரம்1. Intervening space; இடைவெளி. (தக்கயாகப்.147, உரை.) |
| வெளியரங்கம் | veḷi-y-araṅkam n. <>id.+aṅga. cf. bahiraṅga. 1. Openness, publicity; பகிரங்கம். வெளியரங்கம் பெறத்தந்தோம் (குற்றா. தல. 16, 54). 2. That which is clear, obvious or evident; |
| வெளியா - தல் | veḷi-y-ā- v. intr. <>id.+. See வெளிப்படு1-. வெளிநின்ற மாற்றம் வெளியான பின் (பாரத. வெளிப்பாட்டு. 17). . |
| வெளியாக்கு - தல் | veḷi-y-ākku- v. tr. Caus. of வெளியா-. See வெளிப்படுத்து-. . |
| வெளியாடை | veḷi-y-āṭai n. <>வெளி1+ஆடை1. 1. Curtain; hanging, tapestry; அலங்காரத் தொங்கற்சீலை. (W.) 2. Veil, outer-wear; |
| வெளியார் 1 | veḷiyār n. <>வெளி3. Senseless persons ; அறிவிலார். வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல் (குறள், 714). |
| வெளியார் 2 | veḷiyār n. <>வெளி1. Outsiders, strangers ; புறம்பானவர். |
| வெளியிடு - தல் | veḷi-y-iṭu- v. <>id.+. tr. 1. See வெளிப்படுத்து-. --intr. . 2. See வெளிவாங்கு-. (யாழ். அக.) |
| வெளியீடு | veḷiyīṭu n. <>வெளியிடு-. 1. Publication, as of a book; நூல் முதலியவற்றின் பிரசுரம். Mod. 2. Edition; |
| வெளியேற்று - தல் | veḷi-y-ēṟṟu- v. tr. <>வெளி1+. 1. To expel; வெளியே போகச் செய்தல். 2. To transport; to extern; 3. See வெளிப்படுத்து-, 3. |
| வெளியேறு - தல் | veḷi-y-ēṟu v. intr. <>id.+. 1. To get out, as from a house; வெளியே போதல். 2. To abandon one's home and go away; 3. To migrate; 4. To escape from a danger; |
| வெளிர்த்துக்காட்டு - தல் | veḷirttu-k-kāṭṭu- v. intr. <> விளர்2-+. 1. To clear, as the sky after rain; மழை பெய்தபின் வானம் வெளுத்தல். 2. To appear pale; |
| வெளில் 1 | veḷil n. 1. Post to which elephants are tied; யானைத்தறி. களிறிலவாகிய புல்லரை நெடுவெளில் (புறநா. 127). 2. Churning rod; 3. Stake, post; 4. Squirrel; |
| வெளில் 2 | veḷil n. See வெள்ளில்2. (பிங்.) . |
| வெளிவந்தை | veḷi-vantai n. <>வெளி1+perh. vandā. Tick, an external parasite, on cattle; மாட்டின்மேலுள்ள உண்ணி. Loc. |
| வெளிவா - தல் [வெளிவருதல்] | veḷi-vā- v. intr. <>id.+. 1. To be public; பலராலு மறியப்படுதல். 2. To be published; |
| வெளிவாங்கு - தல் | veḷi-vāṅku- v. intr. <>id.+. To become clear, as the sky after rain ; மழைபெய்தபின் மேகங்கலைந்து வெளிச்சமாதல். (யாழ். அக.) |
| வெளிவாசல் | veḷi-vācal n. <>id.+. 1. Outer gate; கட்டடத்தின் வெளியிலிருக்கும் வாசல். 2. Open space in front of a house; |
| வெளிவாசலுக்குப்போ - தல் | veḷi-vācalukku-p-pō- v. intr. <>வெளிவாசல்+. See வெளிக்குப்போ-. Colloq. . |
| வெளிவாய் 1 | veḷi-vāy n. <>வெளி1+வாய்1. 1. Word disclosing a secret; அந்தரங்கத்தை வெளியிடும் வாக்கு. (யாழ். அக.) 2. The outer rim or lip of a vessel; |
