Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெளிவாய் 2 | veḷivāy adj. <>வெளிவு+ஆ6-. Openly; பகிரங்கமாய். வெளிவாய்ச் சொல். |
| வெளிவாய்ப்படுகை | veḷivāy-p-paṭukai n. <>வெளிவாய்1+. Land adjacent to and outside the bund of a river or tank ; ஆறு குளங்களையடுத்துப் புறம்பாகவுள்ள பூமி. |
| வெளிவாயன் | veḷi-vāyaṉ n. <>வெளி1+வாய்1. One who lets out secrets; இரகசியத்தை வெளிவிடுபவன். (யாழ். அக.) |
| வெளிவிடு - தல் | veḷi-viṭu- v. tr. <>id.+. To reveal, make known ; பலரறியச் செய்தல். |
| வெளிவிருத்தம் | veḷi-viruttam n. <>வெளி3+விருத்தம்1. (Pros.) A kind of stanza belonging to the veṇpā class and consisting of three or four lines, each line ending with the same taṉi-c-col; மூன்றடியாலேனும் நான்கடியாலேனும் முற்றுப்பெற்று அடிதோறும் இறுதியில் ஒரு சொல்லையே தனிச்சொல்லாகக் கொண்டு வெண்பாவுக்கு இனமாய் வரும் பாவகை. (காரிகை, செய். 7, உரை.) |
| வெளிவிழுதல் | veḷi-viḻutal n. <>வெளி1+. Ruptured intestines, hernia; குடல் அண்டகோசத்துள் தாழ்கை. அவனுக்கு வெளிவிழுந்திருக்கிறது. |
| வெளிவீதி | veḷi-vīti n. <>id.+வீதி2. Boulevard or street surrounding a temple, fort or town ; கோயில் முதலியவற்றிற்கு வெளிப்புறமுள்ள தெரு. |
| வெளிவு | veḷivu n. <>id. See வெளிப்படை, 1, 2. . |
| வெளிவெருட்டு | veḷi-veruṭṭu n. <>id.+. See வெளிப்பகட்டு. (யாழ். அக.) . |
| வெளிவேஷம் | veḷi-vēṣam n. <>id.+. 1. Disguise; தன்னுருவைப் பிறர் அறியாதபடி பூச்சு முதலியவற்றால் மறைக்கை. 2. Outward show; 3. Hypocrisy; |
| வெளிற்றுப்பனை | veḷiṟṟu-p-paṉai n. <>வெளிறு+. Palmyra having no hard core ; வயிரமற்ற பனை. வேனில் வெளிற்றுப்பனை போலக் கையெடுத்து (அகநா. 333). |
| வெளிற்றுமரம் | veḷiṟṟu-maram n. <>id.+. 1. Soft, pithy tree without core. See அலிமரம். 2. East Indian coral tree. |
| வெளிற்றுரை | veḷiṟṟurai n. <>id.+உரை6. Unmeaning word; vain, empty speech; பயனில் சொல். வெளிற்றுரை விடுமி னென்றான் (சீவக. 1431). |
| வெளிறன் | veḷiṟaṉ n. <>id. 1. Ignorant man; அறிவில்லாதவன். (யாழ். அக.) 2. Mean person; |
| வெளிறு 1 - தல் | veḷiṟu- 5 v. intr. 1. To grow white; வெண்மையாதல். 2. To become pale; |
| வெளிறு 2 | veḷiṟu n.<> வெளிறு-. 1. Whiteness; வெண்மை. வெளிறு சேர்நிணம் (கம்பரா. கரன். 155). 2. Paleness; pallor; 3. Light; 4. Becoming clear or manifest; 5. Uselessness; 6. Stupidity, ignorance; 7. Tenderness, youth; 8. That which is not dense; 9. Fault, defect; 10. Having no hard core; 11. See வெளிற்றுமரம், 1. வெளிறுமுன் வித்திப் பின்னை வச்சிரம் விளைத்த லாமோ (சீவக. 2613). (திவா. MSS.) 12. Common sebesten. |
| வெளு - த்தல் | veḷu- 11 v. <>வெண்-மை. intr. 1. To become white; வெண்மையாதல். கீர்த்தி வெளுத்ததே (கலிங். 243). 2. To become pale; to lose colour; 3.To dawn; 4. To become clear or manifest; 1. To whiten, bleach, wash, as clothes; 2. To drub, beat hard; |
| வெளுத்தபாதிரி | veḷutta-pātiri n. <>வெளு-+பாதிரி. Indian calosanthes. See பாளையுடைச்சி. (M. M.) |
| வெளுத்தல் | veḷuttal n. prob. id. A tree; மரவகை. (யாழ். அக.) |
| வெளுத்தலரி | veḷuttalari n. prob. id.+அலரி. Pagoda tree. See ஈழத்தலரி. (M. M.) |
| வெளுத்துவாங்கு - தல் | veḷuttu-vāṅku- v. <>id.+. intr. To do a thing in an admirable manner; மிகநன்றாகச் செய்தல். -tr. See வெளூ-, 2. |
| வெளுத்துவிடு - தல் | veḷuttu-viṭu- v. tr. & intr. <>id.+. See வெளுத்துவாங்கு-. . |
