Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெறிப்பாட்டு | veṟi-p-pāṭṭu n. <>id.+பாட்டு1. Song sung in veṟi-y-āṭṭu; வெறியாட்டில் நிகழும் பாடல். (பரிபா. 5, 15, உரை.) |
| வெறிப்பு 1 | veṟippu n. <>வெறி4-. 1. Dazzle, glare; கண்கூச்சம். கோல வெறிப்பினான் . . . மாலைக்கண் கொண்டவே (சீவக. 2397). 2. Longing in consequence of privation; 3. Jarring; 4. Drunkenness; |
| வெறிப்பு 2 | veṟippu n. <>வெறி5-. Famine; பஞ்சம். (W.) |
| வெறிபிடி - த்தல் | veṟi-piṭi- v. intr. <>வெறி3+. See வெறிகொள்-. . |
| வெறிமலர் | veṟi-malar n. <>id.+. 1. Fragrant flower; வாசனையுள்ள பூ. (திருக்கோ. 96, உரை.) 2. Flower offered to a god; |
| வெறிமுண்டன் | veṟi-muṇṭaṉ n. <>id.+. Mad fellow; பித்துப்பிடித்த தடியன். Colloq. |
| வெறியயர் - தல் | veṟi-y-ayar- v. intr.<>id.+. See வெறியாடு-. வேலன் வெறியயர் வியன்களம் பொற்ப (அகநா. 97). . |
| வெறியன் 1 | veṟiyaṉ n. <>id. 1. Drunkard; குடிவெறி யுள்ளவன். 2. Madman; 3. Furious person ; |
| வெறியன் 2 | veṟiyaṉ n. <>வெறு-மை. Empty, destitute person; யாதும் அற்றவன். வெறியரன்றோ குணங்களான் விரிஞ்சன் முதலா மேலானோர் (கம்பரா. உருக்காட்டு. 111). |
| வெறியாட்டாளன் | veṟiyāṭṭāḷaṉ n. <>வெறியாட்டு+. Priest dancing under possession by Skanda; வெறியாடல் புரியும் வேலன். (பு. வெ. 9, 41, உரை.) |
| வெறியாட்டு | veṟi-y-āṭṭu n. <>வெறி3+. 1. Dance of a priest possessed by Skanda; வேலனாடல். (பு. வெ. 1, 21, தலைப்பு.) 2. Frantic or mad play; |
| வெறியாட்டுப்பறை | veṟiyāṭṭu-p-paṟai n. <>வெறியாட்டு+பறை3. Drum of kuṟici tract, used in veṟi-y-āṭṭu; வெறியாட்டில் முழக்கும் குறிஞ்சிநிலப் பறை. (இறை. 1, பக். 17.) |
| வெறியாடல் | veṟiyāṭal n. <>வெறியாடு-. See வெறியாட்டு. . |
| வெறியாடு - தல் | veṟi-y-āṭu- v. intr. <>வெறி3+. To dance under possession by Skanda ; வெறியாட்டாடுதல். |
| வெறியாள் | veṟi-y-āḷ n.<> id.+ஆள்2. See வெறியாட்டாளன். (குறுந். 366.) . |
| வெறியெடு - த்தல் | veṟi-y-eṭu- v. intr. <>id.+. To conduct a veṟi-y-āṭṭu-, வெறியாட்டு நிகழ்த்துதல். தமர்வெறி யெடுப்புழி அதனை விலக்கக் கருதிய தோழி (ஐங்குறு. 28, உரை). |
| வெறியோடு 1 - தல் | veṟi-y-ōṭu- v. intr. <>id.+. 1. To be dazzled, as eyes by excessive brilliancy; ஒளிமிகுதியாற் கண் வெறித்துப்போதல். பலபூண் மின்னாலுங் கண்கள் வெறியோடி விட்டனவே (பாரத. பதினேழாம்போர். 168). 2. To be in despair; to be inconsolable; |
| வெறியோடு 2 - தல் | veṟi-y-ōṭu- v. intr. <>வெறி6+. See வெறி5-, 1. இல்லம் வெறியோடிற்றாலோ (திவ். பெரியாழ். 3, 8, 1). . |
| வெறிவிலக்கல் | veṟi-vilakkal n. <>வெறி3+. (Akap.) See வெறிவிலக்கு. (ஐங்குறு. 247, உரை.) . |
| வெறிவிலக்கு | veṟi-vilakku n. <>id.+. (Akap.) Theme of opposing the veṟ,-y-āṭṭu performed with a view to curing a lovesick Woman under a mistaken impression that she is ill; தலைவிக்குக் காமத்தாலுண்டான நோயை வேறு காரணத்தாலுண்டானதாகக் கொண்டு அந்நோயைத் தணிக்கவேண்டிச் செய்யும் வெறியாட்டைத் தடுத்து நிற்றலைக் கூறும் அகத்துறை. (மாறனலங். 107, உதா. பக். 204.) |
| வெறு - த்தல் | veṟu- 11 v. tr. 1. To detest, loathe; அருவருத்தல். வெறுமின் வினைதீயார் கேண்மை (நாலடி, 172). 2. To hate; 3. To be angry at; 4. To dislike; 5. To renounce; to be free from attachments; 1. To abound; 2. To be afflicted; |
| வெறுக்கவெறுக்க | veṟukka-veṟukka adv. <>வெறு-+. In a surfeiting measure; வேண்டாமென்று தள்ளக்கூடியவளவு மிகுதியாக. |
| வெறுக்கை 1 | veṟukkai n. <>வெறு-. 1. Aversion, loathing; அருவருப்பு. தாதுண வெறுக்கைய வாகி (ஐங்குறு. 93). 2. Dislike; 3. Abundance; 4. Wealth; 5. Gold; 6. Life-spring; 7. Offering, as to a superior; |
