Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெறும்பிலுக்கு | veṟum-pilukku n. <>id.+. Mere glitter, foppery; விண்பகட்டு. வெறும்பிலுக்கு வண்ணான் மாற்று. |
| வெறும்புறங்கூற்று | veṟumpuṟaṅkūṟṟu n. <>வெறும்புறங்கூறு-. Scandal; அலர்மொழி. (யாழ். அக.) |
| வெறும்புறங்கூறு - தல் | veṟum-puṟaṅkūṟu- v. intr. <>வெறு-மை+புறம்1+. 1. To spread tales; குறளை கூறுதல். (திவா.) 2. To utter slanderous words; |
| வெறும்புறம் | veṟum-puṟam n. <>id.+id. 1. Empty condition; ஒன்றுமில்லாத நிலை. வெறும்புறத்திலே ஆலத்திவழிக்க வேண்டுங் கையிலே (ஈடு, 1, 8, 9). 2. Absence of reason or purpose; |
| வெறும்பெரியவன் | veṟum-periyavaṉ n. <>id.+. One who is a grown-up physically but not intellectually; புத்தியில் முதிராது தோற்றத்தால்மட்டும் பெரியவனாகத் தோன்றுபவன். Madr. |
| வெறும்பொய் | veṟum-poy n. <>id.+. Downright lie, unmixed falsehood; மெய்யின் கலப்பு அற்ற முழுப்பொய். |
| வெறுமன் | veṟumaṉ n. <>id. Worthlessness; வீண் அப்பச்சை வெறுமனாகாமே (ஈடு, 4, 10, 7). |
| வெறுமனே | veṟumaṉē adv. <>வெறுமன். 1. In vain, without advantage; வீணாக. 2. Without doing anything, idly; |
| வெறுமனை | veṟumaṉai adv. See வெறுமனே. (யாழ். அக.) . |
| வெறுமை | veṟumai n. 1. Emptiness, vapidness; ஒன்றுமின்மை. 2. Profitlessness, uselessness; 3. Ignorance; 4. Poverty; 5. Quality of being unmixed or pure; |
| வெறுமொருவன் | veṟum-oruvaṉ n. <>வெறு-மை+. Single, solitary person; தனித்த ஒருவன் கலகமாரன் வெறுமொருவனால் (தக்கயாகப். 25). |
| வெறுமொன்று | veṟum-oṉṟu n. <>id.+. Single, solitary thing; தனித்த ஒன்று. தாமவில்லு வெறுமொன்று முன்னம் (தக்கயாகப். 23). |
| வெறுவாக்கிலங்கெட்டவன் | veṟuvāk-kilaṅ-keṭṭavaṉ n. Corr. of வெறுவாய்க்கிலை கெட்டவன். . |
| வெறுவாய்க்கிலைகெட்டவன் | veṟu-vāy-kk-ilai-keṭṭavaṉ n. <>வெறு-மை+வாய்1+இலை+. Extremely poor man, as not even having a betel leaf to chew, used in contempt; ஒன்றுமில்லாத தரித்திரன். (சீவக. அரும்.) |
| வெறுவாய்கூறு - தல் | veṟu-vāy-kūṟu- v. intr. <>id.+.id.+. To babble; பிதற்றுதல். (W.) |
| வெறுவாய்பசப்பு - தல் | veṟu-vāy-pacapu- v. <>id.+.id.+. intr. See வெறுவாயலட்டு-, 1. (யாழ். அக.)-tr. . To coax with empty words; |
| வெறுவாயலட்டு - தல் | veṟu-vāy-alaṭṭu- v. intr. <>id.+.id.+. 1. To utter empty or useless words; வீண்பேச்சுப் பேசுதல். (யாழ். அக.) 2. See வெறுவாய்கூறு-. 3. To brag; |
| வெறுவியர் | veṟuviyar n. <>id. Worthless, insignificant persons; பயனற்றவர். இருபிறப்பும் வெறுவியரா யிருந்தார்சொற் கேட்டு (தேவா. 962, 5). |
| வெறுவிலி | veṟu-v-ili. n. <>id.+இல் neg. Totally destitute person; ஒன்றுமற்ற வறியவன். (யாழ். அக.) |
| வென் 1 | veṉ n. <>வெல்-. Victory; வெற்றி. வென்வேற் செழிய (புறநா. 19). |
| வென் 2 | veṉ n. <>வெந். [T. vennu, K. bennu.] See வெந். மயில்வென் றனில்வந்தருளுங் கனபெரி யோனே (திருப்பு. 10). . |
| வென்றநாமங்கொடு - த்தல் | veṉṟa-nāmaṅ-koṭu- v. intr. <>வெல்-+நாமம்3+. To give a person the name of his conqueror; ஒருவனுக்கு அவனை வென்றடக்கியவன் பெயரைக் கொடுத்தல். உத்தம சோழனென் றிவர் தமக்கு வென்றநாமங்கொடுத்து (S. I. I. iv, 29-30). |
| வென்றவன் | veṉṟavaṉ n. <>id. 1. Victor; செயித்தவன். வென்றவன் வென்றவன் வேள்வியில் விண்ணவர் தங்களை (தேவா. 1024, 5). 2. Siddha, as one who has renounced the world; 3. See வென்றோன், 2. வென்றவன் பாதஞ் சேர்ந்து (சீவக. 1437). |
| வென்றான் | veṉṟāṉ n. <>id. See வென்றோன். வென்றான் வினையின்றொகை (சூளா. காப்பு). . |
| வென்றி | veṉṟi n. <>id. [M. vinni.] Victory, triumph; வெற்றி. வேலன்று வென்றி தருவது (குறள், 546). |
