Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேதார்த்தன் | vētārttaṉ n. <>vēdārtha. God, as the ultimate meaning of the Vēdas; [வேதப்பொருளானவன்] கடவுள். (W.) |
| வேதாரணியம் | vētāraṇiyam n. <>vēda+araṇya. Tirumaṟai-k-kāṭu, a šiva shrine in the Tanjore District; சோணாட்டுள்ள திருமறைக்காடு என்னும் சிவதலம். |
| வேதாரம்பம் | vētārampam n. <>id.+ā-rambha. The ceremony of beginning the study of the Vēdas, on the Upakarma day; சிராவணதினத்தினன்று வேதாத்தியயனந் தொடங்குஞ் சடங்கு. |
| வேதாளம் | vētāḷam n. <>vētāla. 1. Demon, ghost, goblin, vampire; பேய். (திவா.). 2. Devil; |
| வேதாளி | vētāḷi n. <>vētālī. Kāḷi; காளி. (பிங்.) |
| வேதாளிகர் | vētāḷikar n. <>vaitālika. See வைதாளிகர். (சிலப். 5, 48.) (பிங்.) . |
| வேதாளியர் | vētāḷiyar n. See வைதாளிகர். (கெயாதரம Mss.) . |
| வேதி 1 | vēti n. <>vēdin. 1. One who knows; அறிந்தவன். வேதிபோற்றி விமலாபோற்றி (திருவாச. 4, 106). 2. Brahmā; 3. Learned person; |
| வேதி 2 | vēti n. <>vēdi. 1. Low platform within a house, for sacrifices, weddings, etc.; மணம் முதலிய சடங்கு நிகழ்த்தும் மேடை. மைந்தனைச் செம்பொன்வேதி யெறிக்குங் கிரணமணிப் பீடம் தேற்றினாரே (பாரத. திரௌ. 91). 2. See வேதிகை 1, 1. கீதசாலை வேதிநிறைய (பெருங். உஞ்சைக் 34, 224) 3. Outer wall of a fortification; compound wall; 4. See வேதிகை1, 3. பாத்திரவேதி, திருமஞ்சனவேதி. 5. Sacrificial pit 6. The 18th nakṣatra. |
| வேதி 3 - த்தல் | vēti- 11 v. tr. <>bhēda. 1. To cause change; விகாரப்படுத்துதல். (யாழ். அக.) 2. To change, transmute, as baser metals; 3. To render hostile; |
| வேதி 4 | veti n. <>வேதி3-. Transmuting; தாழ்ந்தவற்றை யுயர்பொருளாக மாற்றுகை. குளிகை கொடு பரிசித்து வேதி செய்து (தாயு. சின்மயா. 7). |
| வேதி 5 - த்தல் | vēti-, 11 tr. <>vyath. To oppress; நலிதல். வேதியா நிற்கு மைவரால் (திவ். திருவாய். 7, 1, 3). |
| வேதி 6 - த்தல் | veti- 11 v. tr. perh. vimard. To smear, rub on, as sandal paste; தீற்றுதல். (சீவக. 1081, உரை.) |
| வேதிகை 1 | vētikai n. <>vēdikā. 1. Platform, pial; திண்ணை. (பிங்.) பவளத் திரள்காற் பைம்பொன் வேதிகை (சிலப். 5, 148). 2. Marriage dais; 3. Stool, pedestal; 4. Altar, raised platform for oblations of rice, etc., in temples; 5. (šaiva) Place of worship; 6. Plank; 7. Street; |
| வேதிகை 2 | vētikai n. <>bhēdikā. 1. Transmuting; வேறுபடுத்துகை. வேதிகைசெய் தெய்வமணி கொல்லோ (கம்பரா. உருக். 68). 2. Shield; 3. Arrow; |
| வேதித்தார் | vētittār n. <>வேதி3-. Enemies; பகைவர். வேதித்தார் புரமூன்றும் (தேவா.159, 9). |
| வேதிதம் | vētitam n. <>vēdhita. (யாழ். அக.) 1. Perforating, drilling; துளைக்கை. 2. Tube; |
| வேதிப்பான் | vētippāṉ n. <>வேதி3-. One who transmutes; வேதகஞ்செய்வோன். தானெல்லாம் வேதிப்பா னாகி (சி. சி. 11, 12). |
| வேதியன் 1 | vētiyaṉ n. <>vēda. 1. Brahmin; பார்ப்பனன். நான்மறை வேதியர்தேத்து (திருவாலவா. 40, 2). 2. Brahmā; 3. God; |
| வேதியன் 2 | vētiyaṉ n. <>vēdya. See வேதவேத்தியன். வினையேனுடை வேதியனே (திவ். திருவாய். 7, 1, 2). . |
| வேதியன் 3 | vētiyaṉ n. Alum; சீனக்காரம். (மூ. அ.) |
| வேதினம் | vētiṉam n. perh. vēdhana. Saw; ஈர்வாள். வேதினத்துப்பவும் (சிலப்.14, 176). |
| வேது 1 | vētu n. <>வெம்-மை. [M. vēdu.] 1. Heat, warmth; வெம்மை. வேதுசெய் சாந்தமும் (சீவக. 2675). 2. Fomentation; 3. Caustic, pungent medicine; |
| வேது 2 | vētu n. <>bhēda. Change; வேறுபாடு. வேதறியாவண நின்றனன் (திருமந். 2220). |
