Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேது 3 | vētu n. cf. vyathā. Suffering, pain; வேதனை. எழுத்தஞ்சுணராச் சமண்வேதனைப் படுத்தானை (தேவா. 423, 8). |
| வேதுகுளி - த்தல் | vētu-kuḷi- v. tr. & intr. <>வேது1+. To use steam as a sudorific; நீராவியால் உடலை வேர்க்கச் செய்தல். (J.) |
| வேதுகொள்(ளு) - தல் | vētu-koḷ- v. tr. & intr. <>id.+. See வேதுபிடி-. வேது கொள்வது போலுங் கடும்பகல் (கலித். 145). (ஈடு, 3, 5, 4.) . |
| வேதுசெய் - தல் | vētu-cey- v. tr. & intr. <>id.+. See வேதுபிடி-. அகிற்புகையின் மேவியுடம்பினை வேதுசெய்து (சீவக. 2667). . |
| வேதுபிடி - த்தல் | vētu-piṭi- v. tr. & intr. <>id.+. 1. To warm the body, as with smoke, etc.; ஆவி புகை முதலியவைகளால் உடலை வெம்மை செய்தல். 2. To apply fomentation; 3. See வேதுகுளி-. |
| வேதுவார் - த்தல் | vētu-vār- v. intr. <>id.+. To bathe a woman in medically prepared hot water, after child-birth; பிரசவமானபின் பெற்றவளுடம்பில் சூடான மருந்துநீரை யூற்றுதல். Loc. |
| வேதுவிடு - தல் | vētu-viṭu- v. tr. & intr. <>id.+. See வேதுகுளி-. (J.) . |
| வேதை 1 | vētai n. prob. vyathā. Pain, affliction; துன்பம். ஏதையா விந்தவேதை (இராம நா. கிஷ்.14). |
| வேதை 2 | vētai n. <>bhēda. 1. Alchemy, transmutation of metals; இரசவாதம். (W.) 2. Line, as on palm of hand; |
| வேதை 3 | vētai n. <>vēdha. 1. Drilling, boring; துளைக்கை. 2. (Astron.) Contact on a particular day, of a nakṣatra or tithi with its preceding nakṣatra or tithi; 3. See வேதைப்பொருத்தம். (சங். அக.) |
| வேதைக்கயிறு | vētai-k-kayiṟu n. <>வேதை3+. (Astrol.) Diagram used in ascertaining vētai-p-poruttam; வேதைப்பொருத்தம் பார்க்கக் கீறிய கீற்று. (விதான. கடிமண.17.) |
| வேதைச்சிந்தூரம் | vētai-c-cintūram n. <>வேதை2+. A powder used in alchemy; இரசவாதத்திற் பயன்படும் சிந்தூரவகை. |
| வேதைப்பொருத்தம் | vētai-p-poruttam n. <>வேதை3+. (Astrol.) A correspondence between the nakṣatras of the prospective bride and bridegroom ascertained by vētai-k-kayiṟu, one of ten kaliyāṇa-p-poruttam, q.v.; கலியாணப் பொருத்தம் பத்தனுள் மணமகனுடைய நக்ஷத்திரத்திற்கும் மணமகளுடைய நக்ஷத்திரத்திற்கு முள்ள இணக்கத்தை வேதைக்கயிறு மூலமாகப் பார்க்கும் பொருத்தம் (சோதிட. சிந்.198.) |
| வேதோக்தம் | vētōktam n. <>vēdōkta. 1. That which is taught in the Vēdas; வேதத்திற் சொல்லப்பட்டது. 2. That which is in accordance with the principles of the Vēdas; |
| வேதோபாங்கம் | vētōpāṅkam n. <>vēdōpāṅka. A class of works supplementary to the Vēdās, four in number, viz., purāṇam, niyāyam, mīmācai, taruma-cāttiram; புராணம் நியாயம் மீமாஞ்சை தருமசாத்திரம் என நால்வகையாய்வேதத்திற்குத் துணையான சிற்றுறுப்புக்கள். |
| வேந்தவை | vēntavai n. See வேத்தவை. இவ்வகை யுரைசெய விருந்த வேந்தவை (கம்பரா. மந்திரப். 80). . |
| வேந்தன் | vēntaṉ n. cf. dēvēndra. 1. Indra; இந்திரன். வேந்தன் மேய தீம்புன லுலகமும் (தொல். பொ. 5). 2. King; 3. Sun; 4. Moon; 5.Brhaspati; |
| வேந்து | vēntu n. <>வேந்தன். 1. Kingly position; அரசபதவி. வேந்தனும் வேந்து கெடும் (குறள் .899). 2. Kingdom, royalty; 3. Indra; 4. King; |
| வேந்துரு | vēnturu n. Ancestor in the sixth degree in the paternal line; ஏழாந்தலை முறையில் தந்தைவழி முன்னோன். (W.) |
| வேந்தோன்றி | vēntōṉṟi n. <>வெண்டோன்றி. Malabar glory lily. See கலப்பைக் கிழங்கு. (W.) . |
| வேப்பங்கள் | vēppaṅ-kaḷ n. <>வேம்பு+கள்3. A sour juice that oozes from margosa trees, used medicinally; வேப்பமரத்தினின்று வடியும் நீர். (W.) |
| வேப்பங்குடி நீர் | vēppaṅ-kuṭinīr n. <>id.+. Decoction prepared from margosa bark; வேப்பம்பட்டையினின்று வடித்த கஷாயம். இவ்வேப்பங்குடிநீரை யன்றோ நானுன்னைக் குடிக்கச் சொல்லுகிறது (ஈடு, 1, 10, 4). |
| வேப்பநெய் | vēppa-ney n. <>id.+. See வேப்பெண்ணெய். (பதார்த்த. 157.) . |
| வேப்பம்பாசி | vēppam-pāci n. prob. id.+பாசி1. A kind of moss, affecting crops; பயிரைக் கெடுக்கும் ஒருவகைப் பாசி. (யாழ். அக.) |
