Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேய் 3 - த்தல் | vēy- 11 v. tr. cf. வேவு-. To spy out; ஒற்றராற் செய்தியறிதல். (மதுரைக். 642, உரை.) வேய்த்திறே, களவுகாண்பது (ஈடு, 3, 8, 3). |
| வேய் 4 | vēy n. <>வேய்3-. 1. Report, as of a spy; குறளைச்சொல். ஒற்றினாகிய வேயே (தொல். பொ. 58). 2. Spy; 3. (Puṟap.) Theme describing the choice of spies; |
| வேய் 5 - த்தல் | vēy- 11 v. tr. <>ஏய்2-. To deceive. See ஏய்2-, 3. (J.) . |
| வேய்க்கண் | vēy-k-kaṇ n. <>வேய்2+. Bamboo joint; மூங்கிற்கணு. (நாமதீப. 297.) |
| வேய்ங்குழல் | vēy-ṅ-kuḻal n. <>id.+குழல்3. Bamboo pipe; புல்லாங்குழல். ஆயர்கள் வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும் (திவ். திருப்பள்ளியெழுச். 4). |
| வேய்தல் 1 | vēytal n. <>வேய்1-. 1. Thatched house; கூரையால் மூடப்பட்ட வீடு. (பிங்.) 2. Tube; |
| வேய்தல் 2 | vēytal n. <>வேய்3-. Spying; ஒற்று. (அரு. நி.) |
| வேய்ந்துணி | vēy-n-tuṇi n. <>வேய்2+. Bamboo pipe ஊதுகுழல். வேய்ந்துணி யலமரும் புறத்தர் (சீவக. 1848). |
| வேய்ம்பரம்பு | vēy-m-parampu n. <>id.+பரம்பு2. Bamboo mat; மூங்கிற் பாய். Nā. |
| வேய்வனம் | vēy-vaṉam n. <>id.+வனம்1. Tinnevelly believed to have been originally a bamboo forest; திருநெல்வேலித் தலம். (திருவிளை. 31, 2.) |
| வேய்வு 1 | vēyvu n. <>வேய்1-. Covering; மூடுகை. (சங். அக.) |
| வேய்வு 2 | vēyvu n. <>வேய்5-. Deceiving; ஏய்ப்பு. (சங். அக.) |
| வேய்வை | vēyvai n. perh. id. A defect in lute string; யாழ்நரம்புக்குற்றவகை. வேய்வை போகிய விரலுளர் நரம்பின் (பொருந.17). |
| வேயர் 1 | vēyar n. <>வேய்4. Spies; ஒற்றர். (பிங்.) |
| வேயர் 2 | vēyar n. See வேயல். (W.) . |
| வேயர் 3 | vēyar n. prob. வேய்2. A class of Brahmins; பார்ப்பனக்குடிவகை. வேயர்தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன் (திவ். பெரியாழ், 5, 4, 11). |
| வேயரிசி | vēy-arici n. <>id.+. Seed of the bamboo; மூங்கிலரிசி. (திவா.) |
| வேயல் | vēyal n. <>id. Short-sized bamboo; சிறுமூங்கில். (நன், 71, மயிலை.) |
| வேயாம் | vēyām n. See வேரடம். (மூ. அ.) . |
| வேயாமாடம் | vēyā-māṭam n. <>வேய்1-+ஆ neg.+மாடம்1. Open terrace of the upper storey, as uncovered; நிலாமுற்றம். வேயாமாடமும் வியன்கலவிருக்கையும் (சிலப். 5, 7). |
| வேயுள் | vēyuḷ n. <>id.+உள்2. 1. Covering; மூடுகை. வேயுள் விசும்பு (பு. வெ. 8, 28). 2. Blossoming; 3. Terraced house; 4. Upper storey; 5. Mansion; |
| வேர் 1 | vēr n. [K. bēru.] 1. Root; மரஞ்செடிகளை மண்ணின்மேல் நிலைநிற்கச் செய்து அவை உணவேற்க வுதவுவதான அடிப்பகுதி. (சூடா.) 2. Black cuscuss grass. 3. Root of long pepper; 4. Anything root-like; 5. Foundation; 6. Cause; |
| வேர் 2 - த்தல் | vēr- 11 v. intr. cf. வியர்-. [K. bēmer.] 1. To sweat, perspire. See வியர்-, 1. வேர்த்து வெகுளார் விழுமியோர் (நாலடி, 64). 2. To feel irritated. 3. To be angry, indignant; 4. To be afraid; |
| வேர் 3 | vēr n. <>வேர்-. 1. Perspiration; வேர்வை. வேரொடு நனைந்து (பொருந. 80). 2. Anger; |
| வேர்க்கடலை | vēr-k-kaṭalai n. <>வேர்1+. Ground-nut. See மணிலாக்கொட்டை. . |
