Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேற்றானை | vēṟṟāṉai n. <>வேல்1+தானை. Force of spearmen in an army, one of aṟuvakai-t-tāṉai, q.v.; அறுவகைத்தானையுள் ஒன்றான வேற்படை. (திவா.) |
| வேற்றிசைப்பா | vēṟṟicai-p-pā n. <>வேறு+இசை5+பா4. (Pros.) A verse in a distinctive metre at the end of a carukkam, or ilampakam; சருக்கம் அல்லது இலம்பகத்தின் முடிவில் வேறுபாடான இசைபெற்றுவரும் பா. (திவா.) |
| வேற்றுக்காற்று | vēṟṟu-k-kāṟṟu n. <>id.+. (W.) 1. Wind from a different direction; திசைமாறி வீசுங்காற்று. 2. Fart; |
| வேற்றுக்குரல் | vēṟṟu-k-kural n. <>id.+குரல்3. (W.) 1. Strange voice; அன்னியர் குரல். 2. Unnatural tone; disguised voice; |
| வேற்றுத்தாய் | vēṟṟy-t-tāy n. <>id.+. Step-mother; நற்றாயல்லாத மாற்றாந்தாய். |
| வேற்றுநர் | vēṟṟunar n. <>id. Persons in disguise; மாறுவடிவங்கொண்டவர். நூற்றுவர் முற்றி வேற்றுந ராகென (பெருங். மகத. 1, 94). |
| வேற்றுநிலைமெய்ம்மயக்கம் | vēṟṟu-nilai-meymmayakkam n.<>id.+நிலை+.(Gram.) Coalescence of a consonant except k, c, t, p with a consonant other than itself, in conformity with the rules, as in paṅku, opp. to nṭaṉiliai-meymmayakkam; க் ச் த் ப் வொழிந்த பதினான்கு ஒற்றுக்களும் தம்முடன் பிறமெய்கள் வந்து மயங்குகை. (நன். 110, உரை.) |
| வேற்றுப்புலம் | vēṟṟu-p-pulam n. <>id.+. 1. Strange place, foreign place; தனக்கு அன்னியமான விடம். 2. Enemy's country; |
| வேற்றுப்பொருள்வைப்பு | vēṟṟu-p-poruḷ-vaippu n. <>id.+பொருள்+. (Rhet.) A figure of speech in which a particular notion is substantiated by a general notion or vice versa; சிறப்புப்பொருளைச் சாதிப்பதற்குப் பொதுப் பொருளையும், பொதுப்பொருளைச் சாதிப்பதற்குச் சிறப்புப்பொருளையும் அமைத்துக்கூறும் அணி. (தண்டி. 46.) |
| வேற்றுமணாளன் | vēṟṟu-maṇāḷaṉ n. <>id.+. Paramour; பரபுருடன். (யாழ். அக.) |
| வேற்றுமனிதன் | vēṟṟu-maṉitaṉ n. <>id.+. Stranger; அன்னியன். |
| வேற்றுமுகம் | vēṟṟu-mukam n. <>id.+. 1. Face of a stranger; unfamiliar face; அன்னியமுகம். அந்தக் குழந்தைக்கு வேற்றுமுகமில்லை. 2. Altered face, indicating one's displeasure; |
| வேற்றுமுனை | vēṟṟu-muṉai n. <>id.+ முனை3. Enemy's army; பகைப்படை. வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கும் (அகநா. 67). |
| வேற்றுமை | vēṟṟumai n. <>id. 1. Difference; வித்தியாசம். வேற்றுமையின்றிக் கலந்திருவர் நட்டக்கால் (நாலடி, 75). 2. Antipathy; 3. Dissimilarity; disagreement; 4. Characteristic mark distinguishing an individual or species; 5. (Gram.) Case; 6. (Gram.) See வேற்றுமையுருபு. (நன். 420.) 7. (Gram.) See வேற்றுமைப்புணர்ச்சி. (நன். 151.) 8. (Rhet.) See வேற்றுமையணி. (தண்டி. 49.) |
| வேற்றுமைகாட்டு - தல் | vēṟṟumai-kāṭṭu- v. intr. <>வேற்று-மை+. To differentiate; to make a difference; to make invidious distinction; வித்தியாசங் காட்டுதல். (யாழ். அக.) |
| வேற்றுமைத்துணை | vēṟṟumai-t-tuṇai n <>id.+. External help derived by a king from his army, wealth, etc.; படை பொருள் முதலிய புறப்பொருள்களால் அரசர்க்கு அமையுந் துணை. (குறள், 861, உரை.) |
| வேற்றுமைத்தொகை | vēṟṟumai-t-tokai n. <>id.+. (Gram.) A compound in which the case-ending is elliptical; வேற்றுமையுருபு தொக்குவருந் தொடர். (நன். 363.) |
| வேற்றுமைநயம் | vēṟṟumai-nayam n. <>id.+. View-point of differentiation, opp. to oṟṟumai-nayam; வேறுபடுத்திப் பார்க்கு முறை. ஒற்றுமைநயத்தி னென்றெனத் தோன்றினும் வேற்றுமைநயத்தின் வேறே யுடலுயிர் (நன். 451). |
| வேற்றுமைப்புணர்ச்சி | vēṟṟumai-p-puṇarcci n. <>id.+. (Gram.) Combination of two words, the case-ending of the first of which is either expressed or understood; வேற்றுமையுருபுகள் இடையில் விரிந்துந் தொக்கும் வரச் சொற்கள்புணர்வது. (நன். 152, உரை.) |
| வேற்றுமைமயக்கம் | vēṟṟumai-mayakkam n. <>id.+. (Gram.) Antiptosis, use of one case for another; ஒரு வேற்றுமையுருபு வேறொரு வேற்றுமைப்பொருளில் வருகை. |
| வேற்றுமையணி | vēṟṟumai-y-aṇi n. <>id.+அணி2. (Rhet.) A figure of speech. See வியதிரேகம், 4. |
