Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேறுபண்ணு - தல் | vēṟu-paṇṇu-, v. <>வேறு+. intr. 1. See வேறுபடுத்து-. . 2. To create misunderstanding; 3. To do the very opposite; |
| வேறுபாட்டொழிப்பு | vēṟupāṭṭoḻippu, n. <>வேறுபாடு+. (Rhet.) A variety of avanuti; அவநுதியணிவகை. (யாழ். அக.) |
| வேறுபாடு | vēṟupāṭu, n. <>வேறுபடு1-. 1. Difference; வித்தியாசம். மேலைக்கிளவியொடு வேறு பாடிலவே (தொல். சொல். 217). 2. Disagreement; 3. See வேற்றுமை, 2. காமதன்மங் குற்றப்படும்படி அதனோடு வேறுபாடுகொண்டு (கலித். 12, உரை). |
| வேன் | vēṉ, n. <>வியன்1. Excess; மிகுதி. (W.) |
| வேன்காண்(ணு) - தல் | vēṉ-kāṇ-, v. intr. <>வேன்+. To be in excess; அளவில் அதிகமாயிருத்தல். நெல்லை யளந்ததில் இரண்டுமரக்கால் வேன்கண்டது. |
| வேன்மகன் | veṉ-makaṉ, n. <>வேல்1+. The sacrificing priest. See வேலன், 3. வெறியயர் வெங்களத்து வேன்மகன் (நாலதி, 16). |
| வேனல் | vēṉal, n. cf. வேனில். [M. vēnal.] 1. Heat; வெப்பம். வேனன்மல்கி வெண்டேர்சென்ற வெந்நிலம் (சீவக. 2578). 2. Hot season; 3. Anger; |
| வேனற்கட்டி | vēṉaṟ-kaṭṭi, n. <>வேனல்+. Summer boil; வேனிற்காலத் துண்டாஞ் சிரங்கு. |
| வேனில் 1 | veṉil, n. prob. வே-. 1. See வேனிற்காலம். வேனிலாயினுந் தண்¢புனலொழுகுந்தேனுர் (ஐங்குறு. 54). . 2. Spring season; 3. Heat; 4. Mirage; |
| வேனில் 2 | veṉil, n. prob. வேய்1 -. (பிங்.) 1. Decoration; ஒப்பனை. 2. Beauty; 3. Splendour; |
| வேனிலவன் | vēṉilavaṉ, n. <>வேனில்1. See வேனிலான். வேனிலவன் மேனுதல் விழித்தவன் (பாரத. முதற்போர். 63). . |
| வேனிலாளி | vēṉil-āḷi, n. <>id.+. See வேனிலான். (பிங்.) . |
| வேனிலான் | veṉilāṉ, n. <>id. Kāma, as God of Spring; மன்மதன். வேனிலான் வருநெறி வெண்முள் வித்தினார் (சீவக. 2635). |
| வேனிற்காலம் | veṉiṟ-kālam, n. <>id.+. Hot season; summer; கோடைக்காலம். |
| வேனிற்பள்ளி | veṉiṟ-paḷḷi, n. <>id.+. Open terrace of a house, as a place for resting and enjoying the moonlight during summer; நிலாமுற்றம். மேனிலை மருங்கின் வேனிற்பள்ளி யேறி. (சிலப். 8, 18). |
| வேனிற்பாசறை | veṉiṟ-pācaṟai, n. <>id.+பாசறை1. Summer camp of a king waging war, dist. fr., kūtiṟ-p-pācaṟai; போர்மேற்சென்ற அரசன். வேனிற்காலத்துத் தங்கும் படைவீடு. (தொல். பொ. 76.) |
| வேனின்மாலை | veṉiṉ-mālai, n. <>id.+மாலை3. A poem describing the two divisions of the hot season, iḷa-vēṉil and mutu-vēṉil, one of 96 pirapantam, q.v.; பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் இளவேனில் முதுவேனில் என இருதிறப்பட்ட பருவங்களையும் சிறப்பித்துக்கூறும் நூல். (வீரசிங்காதன. அகளங்க. 7.) |
| வேஜார் | vējār, n. <>Hind. bēkār. Uselessness; பயனின்மை. Loc. |
| வேஜாரி | vējāri, n. Corr. of வியபிசாரி. |
| வேஷ்டகம் | vēṣṭakam, n. <>vēṣṭaka. Gum; பிசின். (சங். அக.) |
| வேஷ்டணம் | vēṣṭaṇam, n. <>vēṣṭana. (யாழ். அக.) 1. Tying of the amulet; காப்புக்கட்டுகை. 2. Girdling, encircling; |
| வேஷ்டனை | vēṣṭaṉai, n. <>vēṣṭanā. Repeating certain syllables, while chanting Vēdic Samhitas in kiramapāṭam; வேதபாராயணத்திற் சங்கிதைப்பகுதிகளைக் கிரமபாடமாக ஓதும் போது சிற்சில பதங்களை மடக்கியோதுகை. |
| வேஷ்டாடை | vēṣṭaṭai, n. <>வேஷ்டி+ஆடை1. A mode of wearing cloth. See பஞ்சகச்சம். Brāh. |
| வேஷ்டி | vēṣṭi, n. <>vēṣṭa. [T. veṣṭuvā.] 1. Man's cloth; ஆடவர் அணியும் ஆடை. See வேஷ்டாடை. Brāh. |
| வேஷ்டிதம் | vēṣṭitam n. <>vēṣṭita. See வேட்டிதம். . |
| வேஷ்டியம் | vēṣṭiyam, n. See வேட்டிதம். . |
| வேஷ்டை | vēṣṭai, n. [T. vēṣaṭa.] Mortification, annoyance; உபத்திரவம். (C. G.) |
