Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேற்றுமையுருபு | vēṟṟumai-y-urupu n. <>id.+. (Gram.) Case-endings of the six cases from the accusative to the locative; இரண்டு முதல் ஏழு வரையிலுமுள்ள ஆறுவேற்றுமைகளை யுணர்த்தும் உருபுச்சொல். (நன்.) |
| வேற்றுமைவிரி | vēṟṟumai-viri n. <>id.+. (Gram.) Compound in which the case-ending is expressed; வேற்றுமையுருபு விரிந்துநிற்குந் தொடர். |
| வேற்றுரு | vēṟṟuru n. <>வேறு+உரு3. Disguised form or shape; மாற்றுருவம். யாவரும் விளைபொரு ளுரையார் வேற்றுருக் கொள்கென (மணி. 26, 69). |
| வேற்றுவன் | vēṟṟuvaṉ n. <>id. Stranger; அயலான். வேற்றுவ ரில்லா நுமரூர்க்கே செல்லினும் (சீவக. 1550). |
| வேற்றுவேடம் | vēṟṟu-vēṭam n. <>id.+வேடம்1. Disguise; மாறுவேடம். |
| வேற்றொலிவெண்டுறை | vēṟṟoli-ven-tuṟai n. <>id.+ஒலி+. (Pros.) A kind of veṇtuṟai in which the firrst few lines have one kind of rhythm and the succeeding lines have a different kind of hythm; முன்பிற் சில அடிகள் ஓரோசையாயும் பின்பிற் சில அடிகள் மற்றோரோசையாயும் வரும் வெண்டுறைவகை. (காரிகை, செய். 7, உரை, பக். 79.) |
| வேற்றோன் | vēṟṟōṉ n. <>id. See வேற்றுவன். வேற்றோன் போல மாற்றம் பெருக்கி (பெருங். இலாவாண. 8, 147). |
| வேறா - தல் | vēṟ-ā- v. intr. <>id.+ஆ6-. 1. To be separated, disunited; பிரிதல். 2. To be different; 3. To become different or altered; 4. To change in one's mind; 5. To be spoilt, as in quality; 6. To be distinguished or particularised; to be special; 7. To be away from; 8. To be alone; |
| வேறிடம் | vēṟiṭam n. <>id.+. Solitude, retreat; தனியிடம். (யாழ். அக.) |
| வேறு | vēṟu n. [K. bēṟu.] 1. Other, that which is different; பிறிது. வேறோர் பரிசிங்கொன்றில்லை (திருவாச. 33, 5). 2. That which is separated; 3. Class; kind; 4. Enmity, opposition; 5. That which is opposite; 6. Evil; 7. That which is new; 8. That which is special or distinct; that which is distinguished or particularised; 9. Solitariness; 10. A word used as a heading in poems, to indicate change of metre; |
| வேறுகொள்(ளு) - தல் | vēṟu-koḷ- v. tr. <>வேறு+. 1. To remove to a secluded place; ஏகாந்தமான இடத்தைச் சேரவிடுதல். கொடிய வல்வினையேன் றிறங்கூறுமின் வேறுகொண்டே (தில். திருவாய். 6, 1, 9). 2. To mark out; to treat with special regard; 3. To understand differently; |
| வேறுசெய் - தல் | vēṟu-cey- v. tr. <>id.+. 1. To cause dissensions; to create enmity; பகைவிளைத்தல். வேந்த னும்மையும் வேறுசெய்து (சீவக. 755). 2. See வேறுகொள்-, 2. |
| வேறுநினை - த்தல் | vēṟu-niṉai- v. intr. id.+. 1. To think differently; to misunderstand; விபரீதமாக நினைத்தல். 2. To be ungrateful and think of doing evil; |
| வேறுநினைவு | vēṟu-niṉaivu n. <>id.+. Absence of mind; inattention; கவனமின்மை. Loc. |
| வேறுபடு - தல் | vēṟu-paṭu- v. intr. <>id.+. See வேறு-. வேறுபட் டாங்கே கலுழ்தி (கலித். 91). |
| வேறுபடு - த்தல் | vēṟu-paṭu- v. tr. Caus. of வேறுபடு1-. See வேறுபடுத்து-. . |
| வேறுபடுத்து - தல் | vēṟu-paṭuttu- v. tr. Caus. of வேறுபடு1-. 1. To change, alter; மாற்றுதல். 2. To make different; 3. To sow discord between; to alienate; 4. To separate; |
