Word |
English & Tamil Meaning |
|---|---|
| வைகாலம் | vaikālam, n. <>vaikāla. Evening; சாயங்காலம். (யாழ். அக.) |
| வைகானசம் | vaikāṉacam, n. <>vaikhānasa. 1. A Vaiṣṇava āgama; வைஷ்ணவ ஆகமங்களுள் ஒன்று. 2. An aphoristic work on household rites; |
| வைகானசன் | vaikāṉacaṉ, n. <>vaikhānasa. 1. Follower of the Vaikhaṉasa āgama; வைகானச ஆகமத்தின்படி ஒழுகுபவன். (நாமதீப. 128.) 2. Hermit, dweller in the forest; |
| வைகிராந்தம் | vaikirāntam, n. <>vaikrānta. A kind of gem; ஒருவகை மணி. (யாழ். அக.) |
| வைகிருத்தியம் | vaikiruttiyam, n. <>vaikrtya. See வைகிருதம். (யாழ். அக.) . |
| வைகிருதம் | vaikirutam, n. <>vaikrta. Aversion; வெறுப்பு. (யாழ். அக.) |
| வைகிருள் | vaikiruḷ, n. <>வைகு-+இருள். Darkness immediately before dawn; விடியற்காலத் திருள். |
| வைகு - தல் | vaiku-, 5 v. intr. 1. To halt, stay, tarry; to reside, dwell; தங்குதல். நெடுந்திமிற் றொழிலொடு வைகிய தந்தைக்கு (அகநா. 60). மாலெரியாகிய வரதர் வைகிடம் (தேவா. 467, 9). 2. To pass, as time; 3. To dry up, as a river; 4. To dawn, as the day; 5. To cohabit; |
| வைகுசுடர் | vaiku-cuṭar, n. <>வைகு- +. Light that burns all night; விடியுமளவும் எரியும் விளக்கு. வைகுசுடர் விளங்கும் வான்றோய் வியனகர் (அகநா. 87). |
| வைகுண்டச்சல்லா | vaikuṇṭa-c-callā, n. <>வைகுண்டம் +. 1. Shroud for a corpse; பிரேதத்தை மூடுதற்குரிய சீலை. 2. Any flimsy cloth; |
| வைகுண்டநாதன் | vaikuṇṭa-nātaṉ, n. <>vaikuṇṭha +. Viṣṇu, as Lord of vaikuṇṭam; திருமால். (சூடா.) |
| வைகுண்டம் | vaikuṇṭam, n. <>vaikuṇṭha. 1. Viṣṇu's heaven; திருமாலுலகம். (பரிபா. 13, 13, உரை.) 2. White dead nettle. |
| வைகுண்டவாசி | vaikuṇṭa-vāci, n. <>vaikuṇṭha-vāsin. See வைகுண்டநாதன். . |
| வைகுண்டவேகாதசி | vaikuṇṭa-v-ēkātaci, n. <>வைகுண்டம் +. The 11th titi of the waxing moon in the month of Mārkaḻi, as a special day of festivity in honour of Viṣṇu; மார்கழிமாதத்துச் சுக்கிலபட்சத்து ஏகாதசியன்று திருமாலின்பொருட்டுக் கொண்டாடப்படுந் திருநாள். |
| வைகுண்டன் | vaikuṇṭaṉ, n. <>Vaikuṇṭha. Viṣṇu; திருமால். (நாமதீப. 47.) |
| வைகுண்ணியம் | vaikuṇṇiyam, n. <>vaiguṇya. 1. Difference of qualities, contrariety of properties; குணமாறுபாடு. 2. Defect; fault; |
| வைகுந்தநாதன் | vaikunta-nātaṉ, n. See வைகுண்டநாதன். வைகுந்தநாத னெனவல்வினைமாய்ந்தறச் செய்குந்தன் (திவ். திருவாய். 7, 9, 7). . |
| வைகுந்தம் | vaikuntam, n. See வைகுண்டம். வைகுந்தங் காண்பார் விரைந்து (திவ். இயற். நான்மு. 79). . |
| வைகுந்தன் | vaikuntaṉ, n. See வைகுண்டன். கண்ணன் வைகுந்தனோடு (திருவிருத். 30). . |
| வைகுபுலர்விடியல் | vaiku-pular-viṭiyal, n. <>வைகு-+புலர்-+ விடியல்1. See வைகுறுவிடியல். வைகுபுலர் விடியல் வயவர் சூழ்வர (பெருங். உஞ்சைக். 56, 149). . |
| வைகுல்லியம் | vaikulliyam, n. perh. vaiguṇya. cf. வைகூலியம். Opposition, contrariety; unfavourableness; எதிரிடை. (யாழ். அக.) |
| வைகுறு | vaikuṟu, n. <>வைகு- + உறு1-. 1. See வைகறையாமம். வைகுறுவிடியல். (தொல். பொ. 8). . 2. Daybreak. |
| வைகுறுமீன் | vaikuṟu-mīn, n. <>வைகுறு + மீன்1. Morning star; விடிவெள்ளி. வைகுறு மீனிற் றோன்றும் (அகநா. 17). |
| வைகுறுவிடியல் | vaikuṟu-viṭiyal, n. <>id. + விடியல்1. Early dawn; அருணோதய காலம். வைகுறுவிடிய லியம்பிய சொல்லே (புறநா. 233). |
| வைகூலியம் | vaikūliyam, n. cf. பிரதி கூலியம். See வைகுல்லியம். (W.) . |
| வைகை | vaikai, n. <>vēga-vatī. See வையை. (பிங்.) . |
| வைகைத் துறைவன் | vaikai-t-tuṟaivaṉ, n. <>வைகை+துறை. The Pāṇdya king, as lord of the Vaikai region; பாண்டியன். (பிங்.) |
