Word |
English & Tamil Meaning |
|---|---|
| வைத்தியபாகம் | vaittiya-pākam, n. <>vaidya+bhāga. Physician's share of a medicine perpared by him or under his direction for his patient; நோயாளிக்காகச் செய்யப்பட்ட மருந்தில் மருத்துவனுக்குரிய பகுதி. |
| வைத்தியம் | vaittiyam, n. <>வைத்தியன். See வயித்தியம். . |
| வைத்தியமாதா | vaittiya-mātā, n. <>வைத்தியம்+. Malabar-nut tree. See ஆடாதோடை. (மலை.) |
| வைத்தியவிருத்தி | vaittiya-virutti, n. <>vaidya+vrtti. Inam land granted to physicians. See வயித்தியவிருத்தி. |
| வைத்தியன் | vaittiyaṉ, n. <>vaidya. 1. Physician, medical practitioner; மருத்துவன். 2. One who studies the Vēdas; |
| வைத்து | vaittu, part. <>வை 3-. An expletive; ஓர் அசைச்சொல். இப்பாதகத்தைக் கண்டு வைத்தும் (சீவக. 681, உரை). |
| வைத்துக்கொண்டு | vaittu-k-koṇṭu, part. <>id. + கொள்-. An expletive; ஓர் அசைச்சொல். பௌத்தமதங்களில் வைத்துக்கொண்டு வைபாஷிகன் (ஈடு, அவ.). |
| வைத்துக்கொள்(ளு) - தல் | vaittu-k-koḷ-, v. tr. <>id.+. 1. To keep for one's self; உரிமையாகக் கொள்ளுதல். 2. To suppose, take for granted; 3. To keep as a mistress or concubine; |
| வைத்துப்பாடு - தல் | vaittu-p-pāṭu-, v. tr. <>id.+. To decorate and seat on a platform, as a bride, pregnant women, etc., and sing auspicious songs; மணப்பெண் முதலானவர்களை அலங்கரித்து மணையில் வைத்துச் சுபம்பாடுதல். Brāh. |
| வைத்தூறு | vai-t-tūṟu, n. <>வை5 + தூறு2. Straw-stack; வைக்கோற் குவை. எரிமுன்னர் வைத்தூறுபோலக் கெடும் (குறள், 435). |
| வைதகி | vaitaki, n. See வைதேகி, 2. (மூ. அ.) . |
| வைதரணி | vaitaraṇi, n. <>vaitaraṇī. The Hindu Styx, the river that has to be crossed to reach Yama's region; எமலோகத்துக்குச் செல்லுமுன் கடக்கவேண்டிய ஆறு. (காசிக. காலமறி. 13.) |
| வைதரணிநதியோன் | vaitaraṇi-natiyōṉ, n. <>id. +நதி1. Yama; இயமன். (பிங்.) |
| வைதருப்பநெறி | vaitaruppa-neṟi, n. <>வைதருப்பம் +. (Rhet.) A style of poetry having ten characteristics, such as terseness, perspicuity, dist. fr. kauṭa-neṟi; செறிவு தெளிவு முதலிய பத்துக்குணங்குகளும் அமையப் பாடுமுறை. (தண்டி. 14. ) |
| வைதருப்பபாகம் | vaitaruppa-pākam, n. <>id. + பாகம். (Rhet.) See வைதருப்பநெறி. . |
| வைதருப்பம் | vaitaruppam, n. <>vaidarbha. (Rhet.) See வைதருப்பநெறி. மென்மையுங்கடினமுமாகிய வைதருப்ப கௌடங்களோடும் (மாறனலங். பொது. 79, உரை). . |
| வைதலம் | vaitalam, n. <>vaidala. A kind of vessel; ஒருவகைப் பாத்திரம். (யாழ். அக.) |
| வைதவியம் | vaitaviyam, n. <>vaidhavya. Widowhood; கைம்மை. (பு. வெ. 10, சிறப்பிற்பொது, 4, கொளு, உரை.) |
| வைதன்மியதிட்டாந்தம் | vaitaṉmiyatiṭṭāntam, n. <>vaidharmya + drṣṭānta. (Log.) Dissimilar example in which both cāthyam and ētu are absent; சாத்தியமெய்தா விடத்தில் ஏதுவுமின்மையைக் குறிக்குந் திட்டாந்தம் (மணி. 29, 140.) |
| வைதன்மியதிட்டாந்தவாபாசம் | vaitaṉmiya-tiṭṭāanta-v-āpācam, n. <>vaidharmya-drṣṭāntābhāsa. (Log.) Semblance of vaitaṉmiya-tittāntam, of five kinds, viz., cāttiyāviyāvirutti, cātaṉāviyāvirutti, upayāviyāvirutti, avvetirēkam, viparīta-ventirēkam; சாத்தியாவியாவிருத்தி சாதனாவியாவிருத்தி உபயாவியாவிருத்தி அவ்வெதிரேகம் விபரீதவெதிரேகம் என ஐவகைப் பட்ட போலியான வைதன்மியதிட்டாந்தம். (மணி. 29, 334-5.) |
| வைதன்மியம் | vaitaṉmiyam, n. <>vaidhar-mya. Dissimilarity; ஒப்பின்மை. |
| வைதனிகம் | vaitaṉikam, n. <>vaitanika. Daily hire or wage; அற்றைக்கூலி. (யாழ்.அக.) |
| வைதாளி | vaitāḷi, n. <>vaitālika. Panegyric song; புகழ்ந்து பாடும்பாட்டு. |
| வைதாளிகர் | vaitāḷikar, n. <>vaitālika. A class of panegyrists attached to kings; அரசரைப் புகழ்ந்துபாடுவோருள் ஒருவகையினர். மாகதப்புலவரும் வைதாளிகரும் (சிலப். 26, 74). |
| வைதாளியாடுவார் | vaitāḷi-y-āṭuvār, n. <>வைதாளி + ஆடு-. See வைதாளிகர். (சிலப். 5, 48, அரும்.) . |
| வைதிககாரியம் | vaitika-kāriyam, n. <>vaidika +. Vēdic rite; religious rite; வைதிகச்சடங்கு. |
