Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஜயஜய | jaya-jaya int. <>id.+ jaya. A benedictory formula of victory; 'வெல்க வெல்க' என்று கூறும் ஆசி . |
| ஜயஸ்தம்பம் | jaya-stampam n. <>id.+. Pillar erected in celebration of a victory; வெற்றிகுறித்து நாட்டப்படுந் தம்பம். (S. I. I. i, 134.) |
| ஜயாபஜயம் | jayāpajayam n. <>id.+ apajaya. Victory and defeat ; வெற்றி தோல்விகள். |
| ஜயாஜயம் | jayājayam n. <>id.+ a-jaya. See ஜயாபஜயம். . |
| ஜயாஸ்ரயமண்டபம் | jayāšraya-maṇṭapam n. <>id.+ āšraya+. Front hall or portico of camava-caraṇam; சமவசரணதின் முகமண்டாபம். |
| ஜர்ஜ்ஜரம் | jarjjaram n.<>jarjara. That which is decayed ; சிதிலமானது. |
| ஜர்ஜ்ஜரை 1 | jarjjarai n. cf. jharjhara. Confused din; பலவகைப்பட்டா ஒலிகள் கலந்த ஓசை இந்த ஜர்ஜ்ஜரையை என்னால் தாங்க முடிய வில்லை. |
| ஜர்ஜ்ஜரை 2 | jarjjarai n. <>jharjharā. Whore ; எடுப்பட்டவள். |
| ஜரப் | jarap n. cf. சிறப்பு. See சிறப்பு, 2. . |
| ஜரப்செய் - தல் | jarap-cey- v. intr.<>Arab.zarab+. To exercise undue authority; மனம்போனபடி அதிகாரஞ்செய்தல். (C. G.) |
| ஜராயத் | jarāyat n. <>U.jerāyat. 1. Ryot whose occupation is agriculture; விவசாயஞ்செய்யுங் குடி. 2. Ryot who has an occupancy right similar to that of a paṭṭātār; |
| ஜராயு | jarāyu n. <>jarāyu. 1.Amnion enclosing the embryo. See பன்னீர்க்குடம். 2. Womb. |
| ஜராயுதோஷம | jarāyu-tōṣam n. <>ஜராயு+. A disease affecting the amnion; ஜராயுவில் உண்டாங் கோளாறு. (சாரங்க. 85.) |
| ஜராயுஜம் | jarāyujam n. <>jarāyu-ja. Viviparous animal. See சராயுசம். |
| ஜரி - த்தல் | jari- 11 v. <>jr. intr. 1. To be digested. See சரி4-. -tr. To digest; |
| ஜரிகை | jarikai n. <>U. zarī. See சரிகை3. . |
| ஜரீப் | jarīp n. <>Arab. jarīb. (C. G.) 1. Measure, measuring; அளவு. 2. Measuring of land; land survey; |
| ஜரீப்தார் | jarīp-tār n. <>id.+ U. dār. Land-measurer; surveyor; நிலமளப்போன். (C. G.) |
| ஜரூர் | jarūr n. <>U. zarūr. 1. Urgency, emergency; அவசரம். (C.G.) 2. Care, attention; 3. Quickness. |
| ஜரூர்மராமத்து | jarūr-marāmattu n. <>ஜரூர்+. Monsoon repairs, as requiring immediate attention; உடன் கவனிக்கவேண்டியனவாய் ஏரிகரை முதலியவற்றிற்குப் பருவமழையாலுண்டான கெடுதிகளைச் செப்பனிடுகை. Loc. |
| ஜரை | jarai n. <>jarā. See சரை1. (ஈடு, 6, 1, 2, அரும்.) . |
| ஜல்தி | jalti <>U. jaldī. n. Quckness, speed; விரைவு. (C. G.)-adv. Quickly; |
| ஜல்லடம் | jallaṭam n. <>T. tcalladamu. Short drawers. See சல்லடம். |
| ஜல்லடை | jallaṭai n. [T. ṭjalleda K. jallada.] Sieve. See சல்லடை. (C. G.) |
| ஜல்லாலி | jallāli n. <>U. jalālī. Coloured strips of cloth hanging from a buffoon's dress. See சல்லாலி. (W.) |
| ஜல்லாலிபில்லாலி | jallāli-pillāli n. Redupl. of ஜல்லாலி. Expr. signifying tattered condition, as of clothes; ஆடை முதலியன கிழிந்திருத்தற் குறிப்பு. துணி ஜல்லாலிபில்லாலியா யிருக்கிறது. |
| ஜல்லி 1 | jalli n. 1.See சல்லி, 1, 2, 3, 5, 7, 8. . 2. Small betel leaf; |
| ஜல்லி 2 | jalli n. Plainness, cleanness; தெளிவு. Loc. |
| ஜல்லிக்கட்டு | jalli-k-kaṭṭu n.prob.ஜல்லி1+. Bull-baiting festival. See சல்லிக்கட்டு. |
| ஜல்லிப்பானை | jalli-p-pāṉai n. <>id.+. Water-pot with rose or sprinking nozzle for watering plants; watering can; செடிகளுக்கு நீர் தெளிப்பதற்குரிய மூக்கு வைத்த பாத்திரம். |
| ஜல்லியடி - த்தல் | jalli-y-aṭi- v. intr. <>id.+. See சல்லியடி-. . |
| ஜலக்கிரீடை | jala-k-kirīṭai n. <>jala+. Mixed bathing. See சலக்கீரிடை. |
| ஜலக்கூர்மரோகம் | jala-k-kūrma-rōkam n. <>id.+. Ovarian tumour, a disease; ஸ்திரீகளின் நாதாசயத்திற் காணுங் கட்டி. (பைஷஜ.241.) |
| ஜலசயனம் | jala-cayaṉam n. <>id.+. 1. See சலசயனம். . 2. Shore-temple, a sacred shrine of Viṣnu at Māmallapuram, the modern Seven Pagodas; |
