Word |
English & Tamil Meaning |
---|---|
உகளி - த்தல் | ukaḷi- 11 v. intr. <>உகளு-. 1. To leap, jump; குதித்தல். பேய்பிண மிக்கனவென்றுகளித்தனவே (பாரத. பதினாறாம். 51). 2. To delight, exult; |
உகா | ukā n. 1. Tooth-brush tree, s. tr., Salvadora persica; ஓமை. (பிங்.) Sandpaper-tree, l. tr., Dillenia indica; |
உகாந்தம் | ukāntam n. <>yuga+anta. End of an age or of a yuga; ஊழிமுடிவு. உகாந்தத்து மஞ்சின் (பாரத. காண்டவ. 9). |
உகாய் | ukāy n. Tooth-brush tree. See உகா. (நேமி. எழுத். 15, உரை.) . |
உகாரவுப்பு | ukāra-v-uppu n. Black salt, impure chloride of sodium; கல்லுப்பு. (மூ. அ.) |
உகிர் | ukir n. [T. gōru, K. ugur, M. uhir, Tu. uguru.] Finger of toe nail, talon, claw; நகம். உகிர்த்தொடர் கழன்று (மணி. 20, 59). |
உகிர்ச்சுற்று | ukir-c-cuṟṟu n. <>உகிர்+. [T. gōrutsuṭṭu, K. Tu.ugurusuttu.] Whitlow; நகச்சுற்று. |
உகிர்நிலைப்பசாசம் | ukir-nilai-p-pacācam n. <>id.+. (Nāṭya.) Variety of gesticulation in which the tip of the nail in the thumb is brought into close contact with that of the fore-finger; சுட்டுவிரலும் பெருவிரலும் உகிர்நுனை கவ்விநிற்பது. (சிலப். 3, 18, உரை.) |
உகிரம் | ukiram n. <>ušīra. Cuscus-grass. See இலாமிச்சை. (மூ. அ.) . |
உகின் | ukiṉ n. cf. எகின். Indian hogplum. See புளிமா. (மலை.) . |
உகினம் | ukiṉam n. cf. எகினம். See உகின். (அக. நி.) . |
உகு 1 - தல் | uku- 6 v. intr. [K. ugu.] 1. To shed or part with, as leaves from a tree; to shed, as feathers or hair; to become separated; உதிர்தல். போயுகு மிலைகள் (சி. சி. 1, 15). 2. To be strewed, scattered; 3. To be spilled; to fall, pour out; 4. To trickle gently, as water from a spring, or gush forth, as milk from cow's udder; 5. To wear off, pass away; to be lost; 6. To fall down, fig. to die; 7. To melt, pine, languish, wither; 8. To set, as heavenly bodies; 9. To fly about; 10. To be agitated; |
உகு 2 - த்தல் | uku- 11 v. tr. caus. of உகு1- [K. ugisu.] 1. To let fall, spill, scatter; சிதறுதல். ஊஉ னன்மையி னுன்ணா துகுத்தென (மலைபடு. 148). 2. To cast, as leaves; to exuviate, as a bird its feathers; 3. To emit, pour out; 4. To shed, as tears; 5. To pour; |
உகுணம் | ukuṇam n. <>ukuṇa. Bed-bug; மூட்டுப்பூச்சி. (W.) |
உகுவு | ukuvu n. <>உகு1-. Spilling; சிந்துகை. சோர்ந்துகு வன்ன (மதுரைக். 415). |
உகை 1 - தல் | ukai- 4 v. intr. To move, as a boat; to go, as a vehicle; to walk, as an animal; செல்லுதல். காமவுததியைக் கரைவிட வுகையு நாவா யானும் (கல்லா.19). |
உகை 2 - த்தல் | ukai- 11 v. tr. caus. of உகை1-. 1. To drive, as a carriage; to ride, as a horse; to row, as a boat; to discharge, as an arrow; செலுத்துதல். பெருந்தோணி பற்றி யுகைத்தலும் (திருவாச. 30, 4). 2. To stir up, as dust; 3. To set, as a gem; 1. To rise; 2. To leap, jump up; |
உகை 3 | ukai n. Tooth-brush tree. See உகா. . |
உங்கண் | u-ṅ-kaṇ adv. <>உ4+கண். Yonder, where the person spoken to is, chiefly poetic; உவ்விடம். தனயரைக் கண்டிரோ வுங்க ணென்ன (சேதுபு. அக்கினி. 32). |
உங்கரி - த்தல் | uṅkari- 11 v. intr. <>humkāra. To utter the exclamatory sound of 'hum' expressive of contempt or displeasure; உம்மென்ªறுலித்தல். காமர் வில்லாளியாகி யுங்கரித்து (திருக்காளத். பு. 6, 39). |
உங்காரம் | uṅkāram n. <>hum-kāra. 1. The exclamation 'hum' expressive of menace; அச்சுறுத்தும் தொனி. உங்காரத்தி னுரப்பு மோதையாள் (கந்தபு. அக்கினி. 95). 2. Buzzing sound, as that made by bees in flight; |