Word |
English & Tamil Meaning |
---|---|
உங்கு | uṅku adv. <>உ4. Yonder, where the person spoken to is; உவ்விடம். (கந்தபு. உமைவரு. 31.) |
உங்குணி | uṅkuṇi n. A bluish sea-fish, Caesio chrysozona; பெருங்கிளிஞ்சில். |
உங்கை | uṅkai n. <>உன்+கை part. Your sister younger than you; உன்தங்கை. மூக்குங்கை யரியுண்டாள் (கம்பரா. சூர்ப்பண. 125). |
உங்ஙன் | u-ṅ-ṅaṉ adv. <>உ4+ஙனம். 1. In the way you do; உவ்வாறு. 2. In the place where you are; |
உங்ஙனம் | u-ṅ-ṅaṉam adv. <>id.+. See உங்ஙன். (கந்தபு. தக்கன்மக. 52.) . |
உச்சக்கிரகம் | ucca-k-kirakam n. <>ucca+. (Astrol.) Planet occupying an exalted position or sign in the Zodiac; உச்சநிலையடைந்தகிரகம். |
உச்சசந்தி | ucca-canti n. <>id.+. (Astrol.) Superior conjunction of planets. (C. G.) . |
உச்சட்டை | uccaṭṭai n. cf. உஞ்சட்டை. Thinness, slenderness; ஒல்லி. Loc. |
உச்சத்தலம் | ucca-t-talam n. <>ucca+. Pate; crown of head; உச்சி. உச்சத்தலத்திடை நிற்ப தபானன் (பிங்.) |
உச்சத்தானம் | ucca-t-tāṉam n. <>id.+sthāna. (Astrol.) Exalted position of a planet; கிரகத்தின் உயர்நிலை. |
உச்சதசை | ucca-tacai n. <>id.+. Prosperous period; the highest point of success; good fortune; நல்ல அதிருஷ்டநிலை. |
உச்சந்தம் | uccantam n. <>id.+anta. (J.) 1. Being at the highest price in the market; விலையுயர்வு. 2. Decline, after the height or crisis is past; |
உச்சந்தமா - தல் | uccantam-ā- v. intr. <>id.+. To be past the highest point; to be lessening, as rain; to become mitigated, as disease; தணிதல்.(J.) |
உச்சந்தலை | uccan-talai n. <>id.+. Crown of head; தலையின் உச்சி. (ஆசாரக். 6.) |
உச்சம் | uccam n. <>ucca. 1. Height, elevation, altitude; உயரம். (திவா.) 2. Extreme top overhead; 3. Zenith, meridian, position overhead; 4. Excellence, superiority; 5. (Mus.) Treble; 6. (Astrol.) Exalted position of a planet; one of five kiraka-nilai, q.v.; 7. Extreme limit; |
உச்சம்போது | uccam-pōtu n. <>id.+. Lit. time when the sun is in meridian; noon; midday; நடுப்பகல். உச்சம்போதே யூரூர் திரிய (தேவா. 298, 9.) |
உச்சம்போழ்து | uccam-pōḻtu n. <>id.+. See உச்சம்போது. (S.I.I. iii, 3.) |
உச்சயிச்சிரவம் | uccayicciravam n. See உச்சைச்சிரவம். (உபதேசகா. கூர்மாவ. 34.) . |
உச்சயிச்சிரவா | uccayicciravā n. See உச்சைச்சிரவம். (சேதுபு. கத்துரு. 7.) . |
உச்சயினி | uccayiṉi n. <>ujjayinī. The ancient city of Ujjain, formerly the capital of king Vikramāditya; ஒரு நகரம். (காஞ்சிப்பு. தீர்த். 75.) |
உச்சராசி | ucca-rāci n. <>ucca+. 1. (Astrol.) Exalted sign of a planet; கிரகம் உச்சத்திலிருக்கப்பெற்ற இராசி. 2. Fortunate natal sign; |
உச்சரி - த்தல் | uccari- 11 v. tr. <>uc-car. 1. To pronounce, enunciate, articulate, with the organs of speech; இதழ்முதலியவற்றின் றொழில்களால் எழுத்துக்களைப் பிறப்பித்தல். 2. To recite mantras; |
உச்சரிப்பு | uccarippu n. <>id. Pronunciation; உச்சரிக்கை உச்சாரணம். |
உச்சவம் | uccavam n. <>Pkt. ucchava. <>ut-sava. 1. Festival, festivity; விழா. (திவா.) 2. Prosperity; |
உச்சவீடு | ucca-vīṭu n. <>ucca+. (Astrol.) See உச்சராசி,1. . |
உச்சன் | uccaṉ n. <>உச்சு-. Cowrie, arecanut or tamarind seed, used for pitching in games; விளையாட்டில் குறிவைத்தெறியும் கல் விதை முதலியனவற்றுள் ஒன்று. (J.) |
உச்சனிமாகாளி | uccaṉi-mā-kāḷi n. <>ujjayinī+. 1. The guardian goddess of the ancient city of Ujjain; உச்சயினி நகரத்திலுள்ள காளிதேவி. 2. A village goddess; |
உச்சாகம் | uccākam n. <>Pkt. ucchāha. <>ut-sāha. Exhilaration, high spirits; மனவெழுச்சி. |
உச்சாடனம் | uccāṭaṉam n. <>uc-cāṭana. 1. Magic art of driving away, causing a person to quit his place, one of aṣṭa-karumam, q.v.; அஷ்டகருமத்துள், இருப்பிடத்தைவிட்டு ஓட்டுந்தொழில். 2. Expelling an evil spirit from a person or place, exorcism, one of aṟupattu-nālu-kalai; 3. Incitement by magical incantation of an evil spirit to cause injury or ruin; |