Word |
English & Tamil Meaning |
---|---|
உச்சாணி | uccāṇi n. <>உச்சி1+. Highest point, top, summit. உச்சாணிக்கொப்பிலிருந்து விழுந்தான். Loc. |
உச்சாயம் | uccāyam n. <>uc-chrāya. Stateliness, loftiness, dignity; உயர்வு. உச்சாயமாக முகமன்கள்... உரை செய்து (நல். பாரத. ஆசிரமவாச. வனம்புகு. 163). |
உச்சாரணம் | uccāraṇam n. <>uc-cāraṇa. See உச்சரிப்பு. . |
உச்சாரணை | uccāraṇai n. <>id. See உச்சரிப்பு. (வீரசோ. யாப். 35.) . |
உச்சாரம் | uccāram n. <>uc-cāra. See உச்சரிப்பு. (சி. சி. 4, 35, மறைஞா.) . |
உச்சி 1 | ucci n. <>ucca. [K. M. ucci.] 1. Zenith, meridian; ஆகாயமுகடு. 2. Midday, high noon; 3. Crown of head; 4. Head; 5. Summit, top, apex; 6. Limit, end; 7. Indian mistletoe. See புல்லுருவி. (L.) |
உச்சி 2 | ucci n. <>உச்சு. (Onom. imit. of beckoning sound 'cu'). Dog; நாய். (பிங்.) |
உச்சிக்கடன் | ucci-k-kaṭaṉ n. <>உச்சி1+. Midday devotions or prayers; மாத்தியான்னிகம். (கூர்மபு. நித்தியகன். 15.) |
உச்சிக்கரண்டி | ucci-k-karaṇṭi n. <>id.+. Small spoon that is used when pouring oil on the head of a baby; சிசுவின் தலையில் எண்ணெய் வார்ப்பதற்காக உபயோகிக்கும் சிறு கரண்டி. (W.) |
உச்சிக்காலம் | ucci-k-kālam n. <>id.+. 1. Midday; நண்பகல். 2. Noon service in the temple; |
உச்சிக்கிழான் | ucci-k-kiḻāṉ n. <>id.+. Sun, lit. lord of the zenith; சூரியன். உச்சிக்கிழான் கோட்டம் (சிலப். 9, 11). |
உச்சிக்குடுமி | ucci-k-kuṭumi n. <>id.+. Knot of fore-lock, on the crown of one's head worn by men; உச்சியில் வைத்திருக்குங் குடுமி. |
உச்சிக்குழி | ucci-k-kuḻi n. <>id.+. Membranaceous space in an infant's head; fontanelle; சிசுவின் தலையுச்சீப்பள்ளம். |
உச்சிக்கொண்டை | ucci-k-koṇṭai n. <>id.+. 1. Tuft or braid of hair on the crown of one's head; உச்சிமுடி. 2. Cockscomb; crest, as of a cock; |
உச்சிக்கொம்பன் | ucci-k-kompaṉ n. <>id.+. (W.) 1. A bull or cow that has erect horns near together; நிமிர்ந்த கொம்புள்ள மாடு. 2. Rhinoceros, from its having one straight horn; |
உச்சிகுளிர் - தல் | ucci-kuḷir- v. intr. <>id.+. Lit. cooling of the head, fig. to feel happy, to be highly pleased, delighted; மகிழ்வடைதல். அப்பா என்றால் உச்சிகுளிருமோ (ஈடு, 4, 3, ப்ர. ஜீ.) |
உச்சிச்சுட்டி | ucci-c-cuṭṭi n. <>id.+. An ornament for the forehead of children; குழந்தைகளின் தலையணிவகை. |
உச்சிச்செடி | ucci-c-ceṭi n. <>id.+. Indian mistletoe. See புல்லுருவி. (மூ. அ.) . |
உச்சிச்செடில் | ucci-c-ceṭil n. <>id.+. Hook-swinging. See செடிலாட்டம். (W.) . |
உச்சிட்டம் | ucciṭṭam n. <>uc-chiṣṭa. 1. Leavings of food remaining in a plate out of which one had eaten, regarded as being unclean and unfit for use by another; எச்சில். (பிங்.) 2. That which is left, refuse, remains; |
உச்சித்தம் | uccittam (Nāṭya.) A variety of gesture with both hands. See மகரக்கை. (சிலப். 3, 18, உரை.) . |
உச்சித்திலகம் | ucci-t-tilakam n. <>உச்சி1+. A flowering shrub with red blossoms; செம்மலருள்ள ஒருவகைப் பூஞ்செடி. உதிக்கின்ற செங்கதிருச் சித்திலகம்... என்ன விதிக்கின்றமேனி (அபிராமி. 1). |
உச்சிதம் 1 | uccitam n. <>ucita. See உசிதம். Colloq. . |
உச்சிதம் 2 | uccitam n. Small caltrops. See நெருஞ்சி. (மலை.) . |
உச்சிப்படு - தல் | ucci-p-paṭu- v. intr. <>உச்சி1+. To reach the zenith; உச்சமாதல். வெள்ளி உச்சிப்பட்டது, வியாழம் அஸ்தமித்தது (திவ். திருப்பா. 13, வ்யா.) |
உச்சிப்பள்ளி | ucci-p-paḷḷi n. <>id.+. Noonday dismissal of school on the day preceding the new moon or the full moon; சதுர்த்தசிதோறும் பள்ளிக்கூடத்தில் விடப்பெறும் பகல் விடுமுறை. |
உச்சிப்பிளவை | ucci-p-piḷavai n. <>id.+. Ulcerous scab or sore on the crown of the head; உச்சந்தலையிலுண்டாகும் ஓர்புண். (மூ. அ.) |
உச்சிப்பிறை | ucci-p-piṟai n. <>id.+. Crescent-shaped head-ornament, a common ornament among women of the Parava caste; பரவமகளிரணியுந் தலையணிவகை. |
உச்சிப்பூ | ucci-p-pū n. <>id.+. An ornament for a child's forehead; குழந்தைகளின் தலையணி வகை. |
உச்சிப்பொழுது | ucci-p-poḻutu n. <>id. +. Noon, midday; நடுப்பகல். |