Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஜாக்கிகொடுவை | jākki-koṭuvai n. <>id.+. A game of cards; சீட்டாட்டவகை. |
| ஜாக்கிபார் - த்தல் | jākki-pār- v. intr. <>id.+. To be defeated by a definite number of points, in a game of cards; சீட்டாட்டத்திற் குறிப்பிட்ட தடவைகள் தோல்வியுறுதல். |
| ஜாக்கியாட்டம் | jākki-y-āṭṭam n. <>id.+. A game of cards. See முந்நூற்றுநாலு. |
| ஜாக்கிரதாவஸ்தை | jākkiratāvastai n. <>jagrat+ava-sthā. (Phil.) Waking state. See சாக்கிரம். |
| ஜாக்கிரதை | jākkiratai n. <>jāgra-tā. 1. Waking; கண்விழிக்கை. 2. Wakefulness; vigilance; 3. Carefulness; 4. Diligence; |
| ஜாகரணம் | jākaraṇam n. <>jāgarana. Sleeplessness; keeping awake; கண்விழிக்கை. ஏகாதசியில் ஜாகரண வரதம் அனுஷ்டித்தல் நலம். |
| ஜாகரூகன் | jākarūkaṉ n. <>jāgarūka. Vigilant person; விழிப்புள்ளவன். (கோயிலொ. 57.) |
| ஜாகீர் | jākīr n. <>Persn. jāgīr. Tenure of land, common under Muhammadan government, by which the revenues of a certain tract of land were made over either unconditionally or on condition of performing some public service; hereditary assignment of land and of its rent as annuity அரசாங்க வூழியத்தன்பொருட்டு ஒரு நிலத்தின் வருவாயைப் பாரம்பரியமாய் ஒருவர் அனுபவிக்கும்படி முகம்மதியராட்சியில் விடப்பட்டு வந்த நிலமானிய வகை. (I. M. P. 1819.) |
| ஜாகீர்சர்க்கார் | jākīr-carkkār n. <>id.+. U. sirkār. The Chingleput District, as granted by the Nawab Mahomed Ali to the East India Company in return for their espousing his cause against Razah Sahib and for the maintenance of their troops; ரஸாசாஹிப்புக்கு விரோதமாய் நின்று தமக்குச் சகாயஞ் செய்வதற்காக நவாபு முகம்மது அலியால் கிழக்கிந்திய கம்பெனியாருக்கு அவர் படைச்செலவின்பொருட்டு மானியமாக விடப்பட்டதான செங்கல்பட்டு ஜில்லா. |
| ஜாகீர்தார் | jākīr-tār n. <>id.+U. dār. Holder of a jākir; ஜாகீருக்குரியவன். |
| ஜாகை | jākai n. <>U. jagah. Residence. See சாகை4. |
| ஜாங்கலம் | jāṅkalam n. <>jāṅgala. Dry, wind-swept land; வெயிலாலும் காற்றாலும் வறண்ட பூமி. (சாரங்க. 8, குறிப்பு.) |
| ஜாங்கிரி | jāṅkiri n. A kind of sweet confection; இனிய பணியாரவகை. |
| ஜாட்டி | jāṭṭi n. <>U. jāṭi. Whip. See சாட்டி1. |
| ஜாட்டியக்கிரஸ்தன் | jāṭṭiya-k-kirastaṉ n. <>jādya+grasta. One who is ill; நோயாற் பீடிக்கப்பட்டவன். |
| ஜாட்டியம் | jāṭṭiyam n. <>jādya. 1. Dulness of intellect; மடமை. 2. Weakness; 3. Illness; |
| ஜாட்டை | jāṭṭai n. See ஜாட்டி. . |
| ஜாடராக்கினி | jāṭarākkiṉi n. <>jāṭhara+agni. Digesting agency. See சாடராக்கினி. (சாரங்க. 33.) |
| ஜாடா | jāṭā adv. <>U. jhādā. Entirely, in full, completely; முழுவதும். |
| ஜாடி - த்தல் | jāṭi- 11 v. tr. <>T. jādintsu. To chide; கண்டித்துக் கூறுதல். |
| ஜாடி 1 | jāṭi n. <>Hind. jhārī. Jar, large bottle. See சாடி3, 1. |
| ஜாடி 2 | jāṭi n. <>Hind. jhādu. A kind of broom for sweeping streets, etc.; தெருவிற்குப்பை பெருக்குங் கருவி. |
| ஜாடு - தல் | jāṭu- 5 v. tr. cf. Hind. jhādnā. To strike, beat. See சாடு1. அவனை நன்றாக ஜாடி விட்டான். Tj. |
| ஜாடுமாலி | jāṭumāli n. <>Hind. jhādumāli. Sweeper. See சாடுமாலி, 1, 3. |
| ஜாடை | jāṭai n. [T. ṭjāda.] 1. See சாடை1. அவனுக்கு ஜாடையாய்ச் சொன்னால் தெரியவில்லை. . 2. Sign, presage; |
| ஜாடைபிடி - த்தல் | jāṭai-piṭi- v. intr. <>ஜாடை+. To find a clue, as to theft; to detect a crime, as by observing traces; துப்பறிதல். (C. G.) |
| ஜாடைமாடையாய் | jāṭai-māṭai-y-āy adv. Redupl. of ஜாடை+. See சாடைமாடையாய். . |
| ஜாண் | jāṇ n. See சாண். . |
