Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| ஹஸ்தமுத்திரை | hasta-muttirai n. <>id.+. Gesture, indication by hand; கையாற் செய்யும் அடையாளம். சொல்லப்புக்க வார்த்தையைத் தலைக்கட்ட மாட்டாதே ஹஸ்தமுத்திரையாலே தலைக்கட்டா நின்றாள் (ஈடு, 4, 4, 1).  | 
| ஹஸ்தரொக்கம் | hasta-rokkam n. <>id.+. 1. See அஸ்தரொக்கம். . 2. Ready money;  | 
| ஹஸ்தலாகவம் | hasta-lākavam n. <>id.+. Dexterity of hand; விரைந்து தொழில் செய்யும் கைவன்மை.  | 
| ஹஸ்தவிசேஷம் | hasta-vicēṣam n. <>id.+višeṣa. Luck associated with one's hand. See கைராசி. அந்த வைத்தியனுக்கு ஹஸ்தவிசேஷம் உண்டு.  | 
| ஹஸ்தி | hasti n. <>hastin. Elephant. See அத்தி8, 1.  | 
| ஹஸ்திகிரி | hastikiri n. <>id.+giri. The hill on which the temple of šrī Varadarāja at Conjeevaram is situate; காஞ்சீபுரம் ஸ்ரீ¦வரதராஜப் பெருமாள் கோயிலமைந்த குன்று.  | 
| ஹஸ்தினாபுரம் | hastiṉā-puram n. <>Hastinā-pura. An ancient city near modern Delhi. See அஸ்தினாபுரம்.  | 
| ஹஸ்தினி | hastiṉi n. <>hastinī. See அத்தினி. .  | 
| ஹா 1 | hā. . The compound of ஹ் and ஆ. .  | 
| ஹா 2 | hā, int. Expr. of surprise, pain, sorrow. etc.; வியப்பு நோவு துயரம் முதலியவற்றைக் குறிக்குஞ் சொல்.  | 
| ஹாக் | hāk n. <>E. Hank, ring of iron, rope, etc., for fixing the staysails to stays; பாய்களைக் கட்டற்குரிய சவாய்களிலுள்ள வளையம். (மாலுமிசா. 210).  | 
| ஹாகினி | hākiṉi n. A class of yōkiṉi; யோகினிகளுள் ஒருசாரார். (தக்கயாகப். பக். 281).  | 
| ஹாசல்கலம் | hācal-kalam n. <>U. hāsal + கலம்2. That which is written to the point; சாரமாக எழுதியது. (C. G.)  | 
| ஹாசில் | hācil n. <>U. hāsil. Valuation, as for purposes of stamp duty; மதிப்புத்தொகை.  | 
| ஹாசீல் | hācīl n. See ஹாசில். (C. G.) .  | 
| ஹாஞ்சா | hācā n. Halyards, ropes for hoisting or lowering sails, flags, etc; பாய் கொடி முதலியவற்றை இழுத்துச் சாம்புதற்கேனும் இறக்குதற்கேனும் உதவுங் கயிறு. (மாலுமிசா. 210).  | 
| ஹாத்சிட்டா | hātciṭṭā n. <>Hind. hātciṭṭa. Waste book; day book; கைச்சிட்டா. (C. G.)  | 
| ஹாப்தா | hāptā n. <>Arab. hāfdā. Week; வாரம். ஹாப்தா கணக்கு.  | 
| ஹாமிலாத்பஞ்சர் | hāmilāt-pacar n. <>U. hamilāt + U. bajar. Land partly waste and partly cultivated; ஒரு பகுதி கரம்பாக விடப்பட்டும் ஒரு பகுதி பயிரிடப்பட்டு முள்ள நிலம்.  | 
| ஹாயெனல் | hā-y-eṉal n. Onom. expr. (a) Indicating care-free condition; கவலையற்றிருத்தற் குறிப்பு: (b) Calling the crow to eat the offerings;  | 
| ஹார்த்தபாவம் | hārtta-pāvam n. <>hārda-bhāva. Secret or innermost thought; உள்ளக்கருத்து. (ஈடு, 4, 11, ஜீ.)  | 
| ஹார்த்தல் | hārttal n. <>U. haratāl. See ஹர்த்தால். .  | 
| ஹாரம் | hāram n. <>hāra. See ஆரம்1, 1, 2. .  | 
| ஹாராவளி | hārāvaḷi n. <>id.+ āvali. See ஹாரம். .  | 
| ஹாரிணி | hāriṇi n. <>hāriṇī. (šaiva.) The šakti which unites perfected souls with šiva; தநுகரணாதிகளை மாயையிலொடுக்கிப் பக்குவமானதும் ஆத்மாக்களைச் சிவத்துடன் அடை விக்குஞ் சக்தி. (சி. சி. 1, 59, சிவாக்.)  | 
| ஹால் | hāl <>Arab. hāl. n. Present condition, condition of being current; தற்கால வழக்கிலிருக்கும் நிலை. (C. G.)-adj. Present, current;  | 
| ஹாலாஸ்யம் | hālāsyam n. <>Hālāsya. Madura. See ஆலவாய், 2.  | 
| ஹாலாஹலம் | hālāhalam n. <>hālāhala. 1. The deadly poison that was produced during the churning of the ocean. See ஆலகாலம்1. 2. Deadly poison;  | 
| ஹானி | hāṉi n. <>hāni. Harm, injury. See ஆனி3.  | 
| ஹாஜ் | hāj n. <>Arab. hāz. Pilgrimage to Mecca; மக்கா யாத்திரை. Muham.  | 
| ஹாஜர் | hājar n. <>Arab. hāzir. A term meaning 'present', used in answering a roll-call; நேரில் வந்திருப்பதைத் தெரிவிக்குஞ் சொல்.  | 
| ஹாஜர்ப்படுத்து - தல் | hājar-p-paṭuttu- v. tr. <>ஹாஜர்+. 1. To cause to apear, as a person in court; நியாயஸ்தலம் முதலிய இடங்களில் குறிப்பிட்டவர்களை வருவித்தல். 2. To produce, as thing before a person;  | 
