Word |
English & Tamil Meaning |
|---|---|
| அக்கிரமகாதேவியார் | akkira-makā-yēvi-yār n. <>id.+. The chief queen; அரசனுடைய தலைமைத் தேவி. (M. E. R. 165 of 1925.) |
| அக்கிரமச்சா | akkirama-c-cā n. <>agrima+jyā. See அக்கிரச்சா. (W.) . |
| அக்கிரமச்சியை | akkirama-c-ciyai n. <>id.+id. See அக்கிரச்சா. (W.) . |
| அக்கிரமண்டபம் | akkira-maṇṭapam n. <>agra+. Front hall of a temple; கோயிலின் முகமண்டபம். திருவக்கிரமண்டபமும் செய்தான் (Pudu. Insc. 634). |
| அக்கிரமப்பேச்சு | akkirama-p-pēccu n. <>அக்கிரமம்+. Improper, evil speech; calumny; அவதூறான சொல். (R.) |
| அக்கிரமாமிசம் | akkira-māmicam n. <>agra-māmsa. Heart; இதயம். (W.) |
| அக்கிரமி - த்தல் | akkirami- 11 v. intr. <>அக்கிரமம். To do wrong or mischief; தீங்கு செய்தல். (பஞ்ச. திருமுக. 81.) |
| அக்கிரன் | akkiraṉ n. <>agra. Elder brother; தமையன். (W.) |
| அக்கிரா | akkirā n. See அக்கிராகாரம். (பொதி. நி.) . |
| அக்கிராகாரம் | akkirākāram n. <>U. akarkarhā. Pellitory root; அக்கரகாரம். (W.) |
| அக்கிராசன் | akkirācaṉ n. (Astrol.) A planet believed to cause consumption; க்ஷயரோகத்தை உண்டாக்குவதாகக் கருதப்படுங் கிரகம். (தஞ். சரசு. iii, 172.) |
| அக்கிராந்தம் | akkirāntam n. Indian kales; சேம்பு. (பச். மூ.) |
| அக்கிரியன் | akkiriyaṉ n. <>agriya. Elder brother; தமையன். (W.) |
| அக்கிரு | akkiru n. <>agru. Finger; விரல். (W.) |
| அக்கிரோனம் | akkirōṉam n. prob. agra. (Astron.) Azimuth. See அக்கிரகோடி. Pond. |
| அக்கிள் | akkiḷ n. cf. அக்குள். Arm pit; கமுக்கட்டு. (யாழ். அக.) |
| அக்கினி | akkiṉi n. <>agni. 1. Aṉalaṉ, a vacu; அனலன் என்னும் வசு. (தக்கயாகப். 483, உரை.) 2. Urine; |
| அக்கினிக்கண்ணன் | akkiṉi-kaṇṇaṉ n. <>அக்கினி+. Lit.. A fire-eyed man. [நெருப்பைக் கண்ணாக வுடையவன்] 1. Cruel man; 2. Man of evil eye; |
| அக்கினிக்கப்பம் | akkiṉi-k-kappam n. cf. அக்கினிகர்ப்பம். Cuttle-bone; கடனுரை. (வை. மூ.) |
| அக்கினிக்கப்பரை | akkiṉi-k-kapparai n. <>அக்கினி+. Fire-pot, as in temple-procession; கோயிலுற்சவம் முதலியவற்றில் எடுக்கும் நெருப்புச்சட்டி. Loc. |
| அக்கினிக்கல் | akkiṉi-k-kal n. <>id.+. Flint, pyrites; சக்கிமுக்கிக்கல். (R.) |
| அக்கினிக்கோடைச்சோளம் | akkiṉi-k-kōṭai-c-cōḷam n. <>id.+கோடை+. A kind of maize; சோளவகை. (விவசா. 3.) |
| அக்கினிகணம் | akkiṉi-kaṇam n. <>id.+. (Pros.) Metrical foot of nirai-nēr-nirai, considered inauspicious at the commencement of a poem; செய்யுண் முதற்சீராக அமைக்கத்தகாததும் நிரைநேர்நிரை என வருவதுமாகிய தீய செய்யுட்கணம். |
| அக்கினிகர்ப்பம் | akkiṉi-karppam n. <>id.+. (W.) 1. Spark of fire; நெருப்புப்பொறி. 2. A crystal with fabulous qualities; 3. Cuttle-bone; |
| அக்கினிகலை | akkiṉi-kalai n. <>id.+. Breath coming from the nostrils, in cara-cāttiram; மூக்கின்வழியாக வரும் மூச்சு. (W.) |
| அக்கினிச்சட்டி | akkiṉi-c-caṭṭi n. <>id.+. 1. Fire-pot, as in temple-procession, etc. See அக்கினிக்கப்பரை. Loc. 2. Fire-pot carried in front of the bier for cremating the corpse; |
| அக்கினிச்சிலம் | akkiṉiccilam n. cf. அக்கினிச்சலம். Red species of Malabar glorylily; செங்காந்தள். (L.) |
| அக்கினிச்சுவாசம் | akkiṉi-c-cuvācam n. <>அக்கினி+. Fiery breath; தீப்போற்சுடும் மூச்சு. (தக்கயாகப். 476, உரை.) |
| அக்கினிசன்மன் | akkiṉi-caṉmaṉ n. <>agni+. Skanda, as born of the God of Fire; முருகக்கடவுள். (W.) |
| அக்கினிசித் | akkiṉi-cit n. <>agni-cit. See அக்கினிசித்தன். (S. I. I. ii, 519.) . |
| அக்கினிசித்தன் | akkiṉi-cittaṉ n. <>agni-cit. A Brahmin who regularly performs agni-hōtra; அக்கினிகோத்திரி. (S. I. I. ii, 528.) |
