Word |
English & Tamil Meaning |
|---|---|
| அக்கீகத்து | akkīkattu n. <>U. haqīqat. 1. Statement of a case; வழக்கை எடுத்துரைக்கை. (P. T. L.) 2. Truth, fact; |
| அக்கு | akku n. Whiteness; வெள்ளை. (திவ். பெரியாழ். 1, 7, 3, வ்யா.) |
| அக்குச்சரி | akku-c-cari n. <>அக்கு+. Shell-bracelet; சங்குவளை. கைச்செறி யக்குச்சரி (தக்கயாகப். 100). |
| அக்குப்போர் | akkuppōr n. cf. அக்கப்போர். 1. Worry, trouble; உபத்திரவம். 2. Gossip, rumour; |
| அக்குரு | akkuru n. <>aguru. Eagle-wood; அகில். (சித். அக.) |
| அக்குருக்கி | akkurukki n. <>அக்கு+உருக்கு-. Consumption; எலும்புருக்கி என்னும் நோய். (W.) |
| அக்குல்லி | akkulli n. <>šaṣkulī. cf. அஃகுல்லி. A kind of steamed confectionery; பிட்டு. (மூ. அ.) |
| அக்குள்பாய்ச்சு - தல் | akkuḷ-pāyccu- v. tr. <>அக்குள்+. To tickle; கூச்ச முண்டாக்குதல். Pond. |
| அக்குளு | akkuḷu n. <>அக்குள். Tickling sensation; கூச்சம். புறம்புல்லின் அக்குளுத்து (கலித். 94). |
| அக்குளுப்பாய்ச்சு - தல் | akkuḷu-p-pāyc-cu- v. tr. <>அக்குளு+. See அக்குள்பாய்ச்சு-. (கலித். 94, பக். 571, குறிப்பு.) . |
| அகக்கடவுள் | aka-k-kaṭavuḷ n. <>அகம்+. (W.) 1. God, as immanent in the individual soul; அந்தராத்மாவான கடவுள் 2. Soul; |
| அகக்கணு | aka-k-kaṇu n. <>id.+. (Bot.) Inner tuberosity; மரங்களிலுண்டாம் உட்கணு. (W.) |
| அகக்கோளாளர் | aka-k-kōḷāḷar n. <>id.+. See அகம்படிக்பெண்டுகள். காஞ்சுகிமுதியரு மகக்கோளாளரொடு (பெருங். உஞ்சைக். 47, 167-8). . |
| அககந்தம் | aka-kantam n. <>id.+. (பரி. அக.) 1. Lemon grass; வாசனைப்புல். 2. Flower of champak; 3. Sulphur; |
| அகங்களிப்பு | akaṅ-kaḷippu n. <>id.+. Joy, hilarity; மகிழ்ச்சி. (W.) |
| அகச்சந்தானம் | aka-c-cantāṉam n. <>id.+. (šaiva.) The succession of four divine preceptors who handed down the šaiva šiddhānta canons, viz., Nanti-tēvar, Caṉaṟ-kumārar, Cattiya-āṉa-taricaṉikaḷ, Paracōti-muṉivar; சைவசித்தாந்தக் கொள்ளைகளைக் கைலாய பரம்பரையில் உபதேசித்துவந்தவர்களும் நந்திதேவர் சனற்குமாரர் சத்தியஞானதரிசனிகள் பரஞ்சோதி முனிவர் என்று பெயர் பெற்றவர்களுமான நான்கு குரவர்கள். |
| அகச்சாதி | aka-c-cāti n. <>id.+. (Mus.) A group of melody-types; பண்ணியல்வகையுள் ஒன்று. (சிலப். 13, 112, உரை, பக். 350.) |
| அகச்சூலி | akaccūli n. The tree known as ācupattirā-maram; ஆசுபத்திராமரம். (சித். அக.) |
| அகச்சோலை | aka-c-cōlai n. <>அகம்+. Pleasure-garden; உய்யானவனம். கற்பகவிருட்சமுள இவளது அகச்சோலையில் (தக்கயாகப். 66, உரை). |
| அகசம் | akacam n. 1. Sour lime; எலுமிச்சை. (மறை. அக.) 2. cf. அச்சம். West Indian pea-tree; |
| அகசரிப்பு | aka-carippu n. <>அகம்+. Centripetal force; ஒரு பொருளின் கற்றெல்லையிலுள்ள பகுதி அப்பொருளின் மையத்தை நோக்கி நெருங்குஞ் சக்தி. Mod. |
| அகசாரசக்தி | aka-cāra-cakti n. <>id.+cāra+. See அகசரிப்பு. Mod. . |
| அகஞ்சுகி | aka-cuki n. <>aham+sukhin. One who is mindful of one's own happiness; தான்மட்டுஞ் சுகமனுபவிப்பவன். Loc. |
| அகஞ்செவி | aka-cevi n. <>அகம்+. Auricular cavity; உட்செவி. அகஞ்செவி நிரம்பும்படி ஆரவாரித்தன (முல்லைப். 89, உரை). |
| அகட்டு - தல் | akaṭṭu- 5 v. tr. Corr. of அகற்று-. To open wide; அகலவைத்தல். அண்ணாந்து காலை யகட்டி நடந்து (பஞ்ச. திருமுக. 876). |
| அகடம் | akaṭam n. <>அகடனம். (W.) 1. Injustice; அநீதி. 2. Trick; |
| அகடன் | akaṭaṉ n. <>அகடம். Treacherous person; மோசக்காரன். (W.) |
| அகடனம் | akaṭaṉam n. <>a-ghaṭana. (W.) 1. That which cannot be done; impossibility; செய்யக்கூடாதது. 2. Mischief; |
| அகடனாகடனசாமர்த்தியம் | akaṭaṉā-kaṭaṉa-cāmarttiyam n. <>a-ghaṭanā-ghaṭana+. Ability to effect the impossible; கூடாததைக் கூட்டுவிக்கும் வன்மை. (சர்வசமய. 82.) |
