Word |
English & Tamil Meaning |
|---|---|
| அகமிந்திரலோகம் | akamintira-lōkam n. <>id.+. (Jaina.) A celestial region; தேவலோகத் தொன்று. (திருக்கலம். 6, உரை.) |
| அகமுடையான் | akam-uṭaiyāṉ n. <>அகம்+. 1. Landholder; நிலமுடையவன். (W.) 2. Person of the Akampaṭiyar caste; |
| அகர்மகர்த்தரிப்பிரயோகம் | akarma-karttari-p-pirayōkam n. <>a-karma-kartari+prayōga. (Gram.) Intransitive use of a verb; செயப்படுபொருள் குன்றியவினை. (W.) |
| அகரசீர்மை | akara-cīrmai n. <>அகரம்+. Brahmin quarter; அக்கிரகாரம். (M. E. R. 389 of 1916.) |
| அகரப்பற்று | akara-p-paṟṟu n. <>id.+. Land gifted to Brahmins; பிரமதாயமான பூமி. (M. E. R. 556 of 1919.) |
| அகராது | akarātu n. cf. அசராது. Indian laburnum; கொன்றை. (வை. மூ.) |
| அகரிஷணம் | akariṣaṇam n. <>a-harṣaṇa. (W.) 1. Dislike; வெறுப்பு. 2. Sorrow; |
| அகருதம் | akarutam n. Sitting in state; வீற்றிருக்கை. (சிந்தா. நி. 13.) |
| அகல்(லு) - தல் | akal- 3 v. intr. To be worn out; நைந்து கிழிதல். வேஷ்டி அகன்று போயிற்று. (W.) |
| அகல் | akal n. <>அகல்-. 1. Inland town or village; உள்ளூர். (பொதி. நி.) 2. The interior or inner part of a town or village; 3. Extent of space; 4. Country, province; 5. Pudendum muliebre; |
| அகல்வு | akalvu n. <>id. Extent, expanse; அகலம். ஒருநிரல் செல்லு முள்ளகல் வுடைத்தாய் (பெருங். உஞ்சைக். 49, 59). |
| அகல்வோர் | akalvōr n. <>id. Out-castes; தீண்டாதார். (W.) |
| அகலம் 1 | akalam n. <>id. 1. Length; நீளம். (பொதி. நி.) 2. Place; 3. Mouth; |
| அகலம் 2 | akalam n. (வை. மூ.) 1. cf. அலகு. Leaf of margosa; வேப்பலகு. 2. cf. அலகம். Elephant pepper; |
| அகலர் 1 | akalar n. <>அகல்-. Low-born persons; outcastes; கீழ்மக்கள். (W.) |
| அகலர் 2 | akalar n. <>a-kala. God, as formless; [உருவமில்லாதவர்] கடவுள். (சிவநெறிப். 42, உரை.) |
| அகவயிரம் | aka-vayiram n. <>அகம்+. Hard core of a tree; அகக்காழ். (R.) |
| அகவற்சீர் | akavaṟ-cīr n. <>அகவல்+. (Pros.) Metrical feet of two syllables each, chiefly found in āciriya-p-pā; அகவலுரிச்சீர். (W.) |
| அகவாட்டி | aka-v-āṭṭi n. <>அகம்+ஆட்டி. Wife; மனைவி. (W.) |
| அகவாய் | aka-vāy n. <>id.+. 1. Door-frame; கதவுநிலை. திருக்கற்றளிப் பலகைப்படையும் பஞ்சரமும் அகவாயுஞ் செய்தான் (Pudu. Insc. 635). 2. Mind; |
| அகவாய்க்கோடு | akavāy-k-kōṭu n. <>அகவாய்+. Long bar of the body of a cart; வண்டியின் நெடுஞ்சட்டம். (பெருங். உஞ்சைக். 58, 48.) |
| அகவான் | akavāṉ n. <>Hind. agawānī. Agency; முதலாளியின் பிரதிநிதியாகக் காரியம் நடத்துகை. நேரிருந்து சீமையகவா னிகழ்த்த (பஞ்ச. திருமு. 2164). |
| அகவிரல் | aka-viral n. <>அகம்+. The inner side of a finger; விரலின் உட்புறம். அவ் வீக்கினநரம்பை அகவிரலாலும் புறவிரலாலுங் கரணஞ் செய்து (சீவக. 657, உரை). |
| அகவினை | aka-viṉai n. <>agha+. Hindrance, obstruction; இடையூறு. செந்நீர்க் ககவினை செய்யாத தாகவும் (S. I. I. V, 206). |
| அகவேளை | aka-vēḷai n. <>ahan+. Loc. 1. Midday; நண்பகல். 2. Midnight; |
| அகழானெடு - த்தல் | akaḻāṉ-eṭu- v. intr. <>அகழான்+. To make holes in the earth; to burrow, as rats; வளை தோண்டுதல். (W.) |
| அகழிதிருத்து - தல் | akaḻi-tiruttu- v. intr. <>அகழி+. To fill in amall pits and level the ground for cultivation; சிறிய பள்ளங்களைத் தூர்த்துச் சமமாக்குதல். புஞ்செய்த்திடல் கல்லி அகழி திருத்தி (S. I. I. V, 216). |
| அகழு | akaḻu n. <>அகல். Toothed-leaved tree of Heaven; பெருமரம். (அக. நி.) |
| அகளுதி | akaḷuti n. cf. அகுளுதி. Margosa tree; வேம்பு. (பச். மூ.) |
| அகற்றம் | akaṟṟam n. <>அகல்-. Width, expanse; பரப்பு. எயில தகற்றமும் (பெருங். மகத. 14, 25). |
