Word |
English & Tamil Meaning |
|---|---|
| அகன் | akaṉ n. <>அகல். Breadth; அகற்சி. சிலம்பாற் றகன்றலை (சிலப். 11, 108). |
| அகன்றில் | akaṉṟil n. cf. மகன்றில். Male Greek partridge; ஆண் அன்றில். (ஐங்குறு. 381, பி-ம்.) |
| அகன்னம் | akaṉṉam n. <>a-karṇa. Deafness; செவிடு. (யாழ். அக.) |
| அகனம் | akaṉam n. cf. அசனம். Indian kino tree; வேங்கைமரம். (பச். மூ.) |
| அகனாதி | akaṉāti n. 1. Ceylon leadwort; கொடுவேலி. (சித். அக.) 2. cf. அசுனாதி. Quick-silver; |
| அகாத்தியம் | akāttiyam n. prob. ஆகாத்தியம். (W.) 1. Wickedness; பொல்லாங்கு. 2. Deceit; |
| அகாதப்படுஞ்சமயம் | akāta-p-paṭu-camayam n. prob. அகாதம்+படு-+. Times of adversity; கஷ்டகாலம். (W.) |
| அகாதம் 1 | akātam n. <>a-khāta. Tank formed by divine agency; தேவகணத்தால் வெட்டப்பட்ட குளம். (நாநார்த்த.) |
| அகாதம் 2 | akātam n. <>a-gādha. 1. Chasm; பிலம். (நாநார்த்த.) 2. Hold; 3. Cunning; |
| அகாதன் | akātaṉ n. <>a-gādha. Deceitful man; வஞ்சகன். (யாழ். அக.) |
| அகாந்தம் | akāntam n. cf. அக்கந்தம். Belleric myrobalan; தான்றி. (பச். மூ.) |
| அகாயன் | akāyaṉ n. <>a-kāya. God, as bodiless; கடவுள். (வள்ள. பக். 3.) |
| அகாரணம் | akāraṇam n. <>a-kāraṇa. Accident; தற்செயல். (W.) |
| அகாரவுப்பு | akāra-v-uppu n. <>அ+காரம்+. Rock salt; கல்லுப்பு. (வை. மூ.) |
| அகாரி | akāri n. <>a-kārin. God; கடவுள். (W.) |
| அகாருண்யம் | akāruṇyam n. <>a-kāruṇ-ya. Mercilessness; கருணையின்மை. (மேருமந். 97, உரை.) |
| அகாலப்பிரசவம் | akāla-p-piracavam n. <>a-kāla+. Premature delivery; உரிய காலத்திற்குமுன் பிரசவிக்கை. (சு. வை. ர. 604.) |
| அகாலம் | akālam n. <>a-kāla. Times of scarcity; பஞ்சகாலம். (W.) |
| அகி 1 | aki n. <>ahi. (நாநார்த்த.) 1. Lead; ஈயம். 2. Vrtra, an Asura; |
| அகி 2 | aki n. <>அக்கி. Fire; தீ. (பொதி. நி.) |
| அகி 3 | aki n. cf. அரி. Tinkling anklets, worn by women; சிலம்பு. (பொதி. நி.) |
| அகி 4 | aki n. cf. akhila. Total; தொகை. (பொதி. நி.) |
| அகிகை | akikai n. <>ahikā. Silk-cotton tree; இலவு. (W.) |
| அகிதம் | akitam n. <>a-hita. (W.) 1. Unpleasantness; இதமின்மை. 2. Hurt; 3. Hostility; 4. Absence of right or claim; |
| அகிபதி | aki-pati n. <>ahi+. ādišēṣa; ஆதிசேடன். அகிபதி யாயிரந் தலையா லரிதாகப் பொறுக்கின்ற (பெருந்தொ. 892). |
| அகிபுசம் | aki-pucam n. <>ani-bhuj. (W.) 1. Brahminy kite; கருடன். 2. Peacock; |
| அகிமாறல் | akimāṟal n. <>ahimāra. of. அகிமரால். Panicled babool; வெள்வேல். (பச். மூ.) |
| அகிர் | akir n. cf. அசறு. A kind of scurf; தலைப்பொடுகுவகை. (R.) |
| அகிலகலாவல்லி | akila-kalā-valli n. <>akhila+kalā+. Sarasvatī; சரசுவதி. (தக்கயாகப். 220.) |
| அகிலங்கட்டை | akilaṅ-kaṭṭai n. <>அகில்+. Red sanders; செஞ்சந்தனம். (W.) |
| அகிலப்பிரகாசன் | akila-p-pirakācaṉ n. <>akhila+. One whose fame is world-wide; எங்கும் விளங்கும் புகழுடையவன். அகிலப்பிரகாசன் திம்மையவப்பையன் (பெருந்தொ. 1251). |
| அகிலமேதகி | akilamētaki n. Small climbing nettle; சிறுகாஞ்சொறி. (சித். அக.) |
| அகிலரூபன் | akila-rūpaṉ n. <>akhila+. God, as assuming all forms; [எல்லா வடிவங்களுமானவன்] கடவுள். (W.) |
| அகிலாண்டகோடி | akilāṇṭa-kōṭi n. <>id.+aṇda+. Innumerable worlds. எண்ணிறந்த உலகங்கள். அகிலாண்ட கோடியெல்லாம் (தாயு. திருவருள்விலாச. 1). |
| அகிலாண்டநாயகி | akilāṇṭa-nāyaki n. <>id.+id.+. Pārvatī; பார்வதிதேவி. (தக்கயாகப். 613.) |
| அகிலாண்டம் | akilāṇṭam n. <>akhil-āṇda. The whole universe; சர்வலோகம். (W.) |
| அகிற்கட்டை | akiṟ-kaṭṭai n. <>அகில்+. Block of sandal-wood; சந்தனக்கட்டை. (W.) |
