Word |
English & Tamil Meaning |
|---|---|
| அங்கடியிங்கடி | aṅkaṭi-y-iṅkaṭi adv. <>அங்கு+அடி+இங்கு+. Here and there; அங்குமிங்கும். Nā. |
| அங்கண் | aṅ-kaṇ n. <>அம்+. Kindness, partiality; கண்ணோட்டம். அங்கணுடைய னவன் (கலித். 37, 22). |
| அங்கண்ணன் | aṅ-kaṇṇaṉ n. <>id.+ கண். One who is very affectionate; அதிசபலன். அங்கண்ண னுண்டவென் னாருயிர்க் கோதிது (திவ். திருவாய். 9, 6, 6). |
| அங்கணம் | aṅkaṇam n. cf. அங்கனம். Chebulic myrobalan; கடுக்காய். (வை. மூ.) |
| அங்கணன் 1 | aṅ-kaṇaṉ n. <>அம் + கண். 1. One who has beautiful eyes; கண்ணழகுடையவன். அங்கணனுக்குரியார் (கம்பரா. கடிமண. 97). 2. One who has gracious eyes; |
| அங்கணன் 2 | aṅkaṇaṉ n. cf. அங்கவன். Miruta-pāṣāṇam, a mineral poison; மிருதபாஷாணம். (வை. மூ.) |
| அங்கணாளன் | aṅ-kaṇ-āḷaṉ n. <>அம் + கண் + ஆள்-. šiva; சிவபெருமான். கைக்கொண்ட அங்கணாளன் றிருவுருவம் (காஞ்சிப். சிவபுண். 33). |
| அங்கணேல் - தல் [அங்கணேற்றல்] | aṅ-kaṇ-ēl- v. intr. <>id.+id.+. To awake; துயிலுணர்தல். தேவியை . . . அங்கணேற்றபிற்காணாது (பெருங். வத்தவ. 7, 92). |
| அங்கத்தி | aṅkatti n. cf. அங்குத்தை. A term of respect, meaning your worthiness, corresponding to tāṅkaḷ, taṅkaḷ; தாங்கள் தங்கள் என்ற பொருளில் வழங்கும் ஒரு மரியாதைச் சொல். Loc. |
| அங்கதம் | aṅkatam n. 1. Food of elephants; யானையின் உணவு. போந்தபிடி யினமுமங்கதங்கிட் டாம லறமெலிந்து (பஞ்ச. திருமு. 158). 2. cf. aṅgada. Breast; |
| அங்கதேவதை | aṅka-tēvatai n. <>aṅga+. Attendant deity of a superior god; பரிவார தேவதை. அங்கதேவதைக்கு இருநாழி உரி அரி (T. A. S. ii, 173). |
| அங்கப்பால் | aṅka-p-pāl n. <>அங்கம்+. Mother's milk; முலைப்பால். அங்கப்பா லுண்ணாமல் தேகம் உதித்தீரோ (பெண்மதிமாலை, 30). |
| அங்கபங்கம் | aṅkapaṅkam n. [T. aṅgaraṅga.] Pomp, pride; கௌரவம். Loc. |
| அங்கபங்கமழி - த்தல் | aṅkapaṅkam-aḻi- v. tr. <>அங்கபங்கம்+. To vex, irritate, torment; வருத்துதல். (W.) |
| அங்கபூவம் | aṅka-pūvam n. <>aṅga+pūrva. (Jaina.) Aṅgāgama and Pūrvāgama; அங்காம பூர்வாகமங்கள். அங்கபூவமாதிநூலோதி (மேருமந். 124). |
| அங்கம் 1 | aṅkam n. <>aṅga. See அங்க சேவை. (தேவா. சூ. 12.) . |
| அங்கம் 2 | aṅkam n. prob. aṅka. Chopping, cutting; வெட்டுகை. (பொதி. நி.) |
| அங்கம் 3 | aṅkam n. 1. cf. அங்கசூதம். Indian laburnum; கொன்றை. (பச். மூ.) 2. A petty cess; |
| அங்கமணிக்கூடை | aṅkamaṇi-k-kūṭai n. <>அங்கமணி+. A basket of presents to a bride; மணப்பெண்ணுக்குக் கூடையில் வைத்துக் கொடுக்கும் வரிசை. (R.) |
| அங்கமணிதிரவியம் | aṅkamaṇi-tiraviyam n. <>id.+. Dowry; சீதனப்பணம். (S. I. I. vi, 152.) |
| அங்கயோகம் | aṅka-yōkam n. <>aṅga+. Yōga which consists of eight forms of discipline; அஷ்டாங்கயோகம். (R.) |
| அங்கரக்கன் | aṅka-rakkaṉ n. <>id.+ rakṣa. Body-guard; மெய்காவலன். அங்கரக்கர் சதகோடி யமைந்தோர் (கம்பரா. இராவணன்றானைகாண். 10). |
| அங்கரமாதி | aṅkaramāti n. Kavuri-pāṣāṇam, a prepared arsenic; கவுரிபாஷாணம். (R.) |
| அங்கரமோததி | aṅkaramōṭaki n. A species of nārattai; கருநாரத்தை. (சித். அக.) |
| அங்கரவல்லி | aṅkaravalli n. <>அங்காரவல்லி. A species of scammony swallow-wort; பெருங்குறிஞ்சா. (சித். அக.) |
| அங்கராயர் | aṅkarāyar n. A title of Kaḷḷars; கள்ளர் பட்டங்களு ளொன்று. (கள்ளர்சரித். 145.) |
| அங்கருகம் | aṅka-rukam n. <>aṅga + ruha. Hair; மயிர். (சங். அக.) |
| அங்கரூகம் | aṅka-rūkam n. See அங்கருகம். (சிந்தா. நி. 35.) . |
| அங்வலாய்ப்பு | aṅkalāyppu n. <>அங்கலாய்-. Yearning; பேராவல். (யாழ். அக.) |
| அங்கலி 1 | aṅkali n. <>aṅguli. 1. Finger; விரல். (சம். அக. Ms.) 2. Aivirali, a creeper bearing red fruits; |
