Word |
English & Tamil Meaning |
|---|---|
| அங்குசரேகை | aṅkuca-rēkai n. <>aṅkuša +. (Palmistry.) A line in the palm, shaped like a hook; கைரேகைவகை. (திருவாரூ. குற. Ms.) |
| அங்குசரோசனம் | aṅkucarōcaṉam n. prob. aṅkuša-rōcana. Flour of East Indian arrowroot; கூவைநீறு. (R.) |
| அங்குசவாதி | aṅkucavāti n. <>hamsa-pādikā. cf. அங்குசபாதி. Scabrous ovate unifoliate tick-trefoil; சிறுபுள்ளடி. (பச். மூ.) |
| அங்குசன் | aṅkucaṉ n. 1. Aṅkuca-pāṣāṇam, a mineral poison; அங்குசபாஷாணம். (வை. மூ.) 2. Magnet; |
| அங்குடம் | aṅkuṭam n. <>aṅkuṭa. Key; திறவுகோல். (யாழ். அக.) |
| அங்குணம் | aṅkuṇam n. <>taṅkaṇa. cf. அங்கணம். Borax; வெங்காரம். (R.) |
| அங்குத்தி | aṅkutti n. See அங்கத்தி. Loc. . |
| அங்குமிங்கும்பாடி | aṅkum-iṅkum-pāṭi n. <>அங்கும்+இங்கும்+. 1. He who first joins one party and then another secretly, at the time of contest; turn-coat; முதலில் ஒரு கட்சியையும் பின்னர் மறைவாக எதிர்க்கட்சியையுஞ் சேர்பவன். (W.) 2. Unreliable person; |
| அங்குரகம் | aṅkurakam n. <>aṅkura-ka. Nest; கூடு. (சிந்தா. நி. 39.) |
| அங்குரம் 1 | aṅkuram n. <>aṅkura. Water; நீர். (நாநார்த்த.) |
| அங்குரம் 2 | aṅkuram n. Indian acalypha; குப்பைமேனி. (W.) |
| அங்குரி | aṅkuri n. <>aṅguri. (சிந்தா. நி. 36.) 1. Finger; கைவிரல். 2. Toe; |
| அங்குலதோரணம் | aṅkula-tōranam n. <>aṅgula-tōraṇa. cf. அங்குலிதோரணம். Marks a sacred ashes worn by šaivites on their foreheads in three horizontal lines; சைவர்கள் நெற்றியிலணியும் விபூதித் திரிபுண்டரம். Cm. |
| அங்குலம் | aṅkulam n. <>aṅgula. Ring-finge; அணிவிரல். (அக. நி.) |
| அங்குலி 1 | aṅkuli n. <>aṅguli. 1. The tip of an elephant's trunk; யானைத்துதிக்கையின் நுனி. அக்கிரி குலங்கள்விடு மங்குலியி னுண்டிவலை (கலிங். 285). 2. Aivirali, a creeper bearing red fruits; |
| அங்குலி 2 | aṅkuli n. perh. aṅgula. (Yōga.) The space between the eye-brows, considered as the seat of the soul; ஆன்மாவின் இருப்பிடமாகக் கருதப்படும் புருவமத்திய ஸ்தானம். அங்குலி கூடி யகப்புறம் (திருமந். 1191). |
| அங்குலித்திரம் | aṅkulittiram n. <>aṅgu-li-tra. Thimble; விரலுறை. (சிந்தா. நி. 39.) |
| அங்குலித்திராணம் | aṅkuli-t-tirāṇam n. <>aṅguli+. See அங்குலித்திரம். (யாழ். அக.) . |
| அங்குலிமுத்திரை | aṅkuli-muttirai n. <>id.+. Signet ring; முத்திரை மோதிரம். (யாழ். அக.) |
| அங்குள் | aṅkul n. Bitter snake-gourd; குறட்டைப்பழம். (வை. மூ.) |
| அங்குற்றி | aṅkuṟṟi n. <>அங்கு+உறு-. See அங்கத்தி. Loc. . |
| அங்குஷ்டம் 1 | aṅkuṣṭam n. Anaemia; பாண்டுவியாதி. (வை. மூ.) |
| அங்குஷ்டம் 2 | aṅkuṣṭam n. <>aṅguṣṭha. (W.) 1. Thump; கட்டைவிரல். 2. Dwarfishness; |
| அங்குஷ்டம் 3 | aṅkuṣṭam n. <>aṅkuša. Goad, elephant's hook; அங்குசம். (R.) |
| அங்கூதியிங்கூதி | aṅkūti-y-iṅkūti n. <>அங்கு+ஊது-+இங்கு+. Tale-bearer; கோட் சொல்பவ-ன்-ள். Loc. |
| அங்கூரம் | aṅkūram n. <>aṅkura. 1. Bud; தளிர். (சிந்தா. நி. 36.) 2. (Anat.) A process in the growth of bone; |
| அங்கையில்வட்டா - தல் | aṅkaiyil-vaṭṭā- v. intr. <>அங்கை + வட்டு+. To be at hand; to be within one's reach; அடைதற்கு மிக எளியதால். அங்கையில்வட்டா மிவளெனக் கருதுகின்றாயே (திவ். பெரியதி. 10, 9, 3). |
| அச்சக்கொடை | acca-k-koṭai n. <>அச்சம்+. Gift made out of fear; அச்சத்தாற் கொடுக்குங் கொடை. (சுக்கிரநீதி, 145.) |
| அச்சங்கரணை | accaṅkaraṇai n. A kind of thorny plant; முட்செடிவகை. (மருத்.) |
| அச்சடியன் | accaṭiyaṉ n. <>அச்சு + அடி-. A kind of chintz for saree; சாய்ப்புடைவைவகை. (யாழ். அக.) |
| அச்சடையாளன் | accaṭaiyāḷam n. <>id.+. Seal, signet bearing the symbol, as of a king; முத்திரை யச்சு. அச்சடையாளமாகிய வலியையுடைய புலியை அடையாளமாக இட்டு (பட்டினப். 134, உரை). |
