| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| அச்சணம் | a-c-caṇam adv. <>அ + க்ஷணம். Immediately; உடனே. (R.) | 
| அச்சத்திரி | accattiri n. cf. அச்சத்தி. Brinjal; கத்திரி. (சித். அக.) | 
| அச்சதறி | acca-taṟi n. perh. அச்சு+. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. i, 91.) | 
| அச்சபல்லம் | accapallam n. <>acchabhalla. Bear; கரடி. (சிந்தா. நி. 50.) | 
| அச்சம் 1 | accam n. <>Pkt. ajja. Mother; அன்னை. (பொதி. நி. 19, பி-ம்.) | 
| அச்சம் 2 | accam n. <>accha. 1. Clearness; தெளிவு. (ஈடு, 1, 1, 11.) 2. Crystal; 3. Bear; | 
| அச்சரிபுச்சரி | accari-puccari n. Loc. 1. Itching sensation; தினவெடுக்கை. 2. Annoyance; worry; | 
| அச்சலத்தி | accalatti n. Tediousness; weariness; களைப்பு. Loc. | 
| அச்சவாரம் | accavāram n. <>அச்சாரம். Earnest money; அச்சாரம். | 
| அச்சழிவு | accaḻivu n. <>அச்சு+. Defaced coin, coin worn out by use; முத்திரைதேய்ந்த பணம். (பணவிடு. 142.) | 
| அச்சறுக்கை 1 | accaṟukkai n. prob. எச்சரிக்கை. Caution, care; எச்சரிக்கை. (W.) | 
| அச்சறுக்கை 2 | accaṟukkai n. perh. அச்சு+உறு-. Threat; பயமுறுத்துகை. (W.) | 
| அச்சனம் | accaṉam n. perh. அச்சு + ஏனம். 1. A weaver's implement; நெய்வார் கருவிவகை. நூல் புடவையாய்த் திரிதற்கு அச்சன முதலாயின ஸாதனம் (நீலகேசி, 421, உரை). 2. Garlic; | 
| அச்சாணி | accāṇi n. French chiretta; நிலவேம்பு. (சித். அக.) | 
| அச்சிக்குதிரை | acci-k-kutirai n. <>Malay. achih+. Achin pony; அச்சிமட்டம். (R.) | 
| அச்சினி | acciṉi n. perh. aṣṭa. Eighth month; எட்டாமாதம். (சித். அக.) | 
| அச்சு 1 | accu n. <>ac. The letter; அகரம். (சம். அக. Ms.) | 
| அச்சு 2 | accu n. Yuga, epoch; யுகம். (W.) | 
| அச்சு 3 | accu n. <>akṣa. 1. Chariot; தேர். அச்சாசுவங்களையு மாங்கடித்து (பாரதவெண். 812). 2. A kind of coin; | 
| அச்சுக்கட்டை | accu-k-kaṭṭai n. <>அச்சு+. See அச்சுமரம். Loc. . | 
| அச்சுக்காவலி | accu-k-kāvali n. <>அச்சு + காவல். A tax paid by ryots to the poligars for protection of the standing crops; பயிர்களின் பாதுகாப்புக்காகக் குடிகள் முற்காலத்துப் பாளையக்காரருக்குச் செலுத்திவந்த வரி. Cm. | 
| அச்சுத்தடி | accu-t-taṭi n. <>அச்சு+. Lever, in mechanica; நெம்புதடி. Pond. | 
| அச்சுதப்பண்டாரம் | accutappaṇṭāram n. A title of Kaḷḷars; கள்ளர் பட்டங்களுளொன்று. (கள்ளர்சரித். 145.) | 
| அச்சுதம் | accutam n. <>acyuta. (Jaina.) The world of an Indra; இந்திரர்களுள் ஒருவனுக்குரிய உலகம். (தக்கயாகப். 265.) | 
| அச்சுதன் | accutaṉ n. <>A-cyuta. 1. Arhat; அருகக்கடவுள். அச்சுத னடிதொழுது (நன். 258). 2. šiva, as the Imperishable Being; 3. Skanda; | 
| அச்சுப்பூட்டிவிளையாடு - தல் | accu-p-pūṭṭi-viḷaiyāṭu- v. intr. <>அச்சு+. To play with balls, tamarind seeds, etc.; பந்து புளியங்கொட்டை முதலியனகொண்டு விளையாடுதல். (R.) | 
| அச்சுமரம் | accu-maram n. <>id.+. Axle-tree; வண்டியில் உருள்கோத்த மரம். அச்சு மரத்தின் மேலே . . . நெடுகக்கிடக்கின்ற பருமரங்களை (பெரும்பாண். 48, உரை). | 
| அச்சுவதரம் | accuvataram n. <>ašvatara. (நாநார்த்த.) 1. Mule; கோவேறுகழுதை. 2. A snake; | 
| அச்சுவம் | accuvam n. <>ašva-gandhā. Pellitory root; அக்கரகாரம். (பொதி. நி.) | 
| அச்சுவமுகாதனம் | accuva-mukātaṉam n. <>ašva+. (Yōga.) A yōgic pose in which the person sits cross-legged, places his elbows on his knees and rests his cheeks on the palm of his hands; கால்மடித்து இரண்டு முழந்தாளிலும் முழங்கைகளை யூன்றி இரண்டு உள்ளங்கைகளையும் கன்னத்தில் வைத்திருக்கும் யோகாசன வகை. (தத்துவப். 108, உரை.) | 
| அச்சுவாகனம் | accu-vākaṉam n. <>அச்சு+. Printing press; அச்சிடும் யந்திரம். Mod. | 
| அச்சுவாதீதம் | accuvātītam n. cf. ašvamāra. A kind of red oleander; செவ்வலரிவகை. (சித். அக.) | 
