Word |
English & Tamil Meaning |
---|---|
உட்சமயம் | uṭ-camayam n. <>id.+. (šaiva.) One of six subclasses of religious sects in the fold, viz., வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம். (பிங்.) |
உட்சாத்து | uṭ-cāttu n. <>id.+. A short inner garment worn round the waist; a kind of tunic; அரைக்கச்சை. உழுவைதான் கொடுத்த வுட்சாத்தும் (ஏகாம். உலா. 203). |
உட்சீலை | uṭ-cīlai n. <>id.+. (W.) 1. Under or inner garment; உள்ளேகட்டுஞ் சீலை. 2. Lining of a garment; |
உட்சுரம் | uṭ-curam n. <>id.+. Internal fever; low fever; உட்காய்ச்சல். |
உட்சூத்திரம் | uṭ-cūttiram n. <>id.+. 1. Mainspring of a machinery; எந்திரத்தின் மூலக்கருவி. (W.) 2. Clue to an affair; 3. (Arith.) Short method of working a sum; 4. Easy process of effecting a thing; 5. Deeper meaning of a passage; |
உட்செலுத்து - தல் | uṭ-celuttu- v. tr. <>id.+. 1. To insert, inject; உள்ளே செலுத்துதல். 2. To administer, as a medicine or a poison, by sweet persuasion or guile; 3. To send in a bribe secretly; |
உட்சொல் | uṭ-col n. <>id.+. (Dram.) Soliloquy, aside, address to one's own mind; நெஞ்சொடு கூறல். (சிலப். 3, 13, உரை.) |
உட்டணம் | uṭṭaṇam n. <>uṣṇa. See உஷ்ணம். (சூடா.) . |
உட்டணி - த்தல் | uṭṭaṇi- 11 v. intr. <> id. To become hot, as the weather, as fire, as the animal heat in the body; உஷ்ணமாதல். (W.) |
உட்டாணி | uṭṭāṇi n. <>Mhr. uthāvaṇa. Heavy, solid gem; கனத்த மணி. Loc. |
உட்டி | uṭṭi n. Seeds used in games. See உட்டை. Loc. . |
உட்டிரம் | uṭṭiram n. cf. uṣṭrikā. Indian turnsole. See தேட்கொடுக்கி. (மலை.) . |
உட்டினீடம் | uṭṭiṉīṭam n. <>uṣṇīṣa. Turban fillet; தலைப்பாகை. உட்டினீட முத்திரீயம் (திருவானைக். கோச். 110). |
உட்டீனம் | uṭṭīṉam n. <>uddīna. A particular kind of the flight of birds, one of eight different kinds mentioned; பட்சிகளின் கதி விசேடங்களுள் ஒன்று. உட்டீனம்... கதிபறவைகட்கெட்டுள (காசிக். திரிலோ. 6). |
உட்டுளை | uṭṭuḷai n. <>உள்+துளை. See உட்டொளை. . |
உட்டுறவு | uṭṭuṟavu n. <>id.+ துறவு. Mental renunciation of one's desires and attachments; உள்ளத்துறவு. |
உட்டுறை | uṭṭuṟai n. <>id.+ துறை. Department of internal affairs, as in a temple; கோயில் முதலியவற்றில் உட்காரியம்நடத்தும் வர்க்கம். Loc. |
உட்டெளிவு | uṭṭeḷivu n. <> id.+ தெளிவு. 1. Clearness of mind, freedom from doubt; மனத்தெளிவு. 2. Clear liquid, poured off from the sediment; 3. Soundness, as in timber; 4. Inner measurement; |
உட்டேட்டம் | uṭṭēṭṭam n. <>id.+ தேடு-. (W.) 1. Secret object of pursuit; actuating motive; மனநாட்டம். 2. Property acquired and kept in secret; |
உட்டை | uṭṭai n. prob. உண்டை. Seeds used in Indian indoor games of certain children; விளையாட்டுக்காய். உட்டையெனவைத்து விளையாடுபைங்கழற்காய் (திருப்போ. சந். பிள்ளைத். அம்புலி. 6). |
உட்டொளை | uṭṭoḷai n. <>உள்+தொளை. Hollow space or bore in a pipe or tube; உள்ளரன துவாரம். |
உட்டொளைப்பொருள் | uṭṭoḷai-p-poruḷ n. <>id.+. Anything tubular or hollow; உட்டொளையுள்ள குழல் முதலியன. |
உட்பகை | uṭ-pakai n. <>id.+. 1. Internal enmity, hatred or grudge; rancour at heart with outward profession of friendship; நட்புப் பாராட்டிக் கெடுக்கும் விரோதம். (குறள், 889.) 2. Civil conspiracy; 3. Internal enemy of man, having reference to the six emotions which tend to corrupt and taint his soul. |
உட்பட | uṭ-paṭa adv. <>id.+. Together with, inclusive of; உள்ளாக. நாடும் பொய்கையு முட்பட வுரைத்தனன். (சீவக. 1216.) |
உட்படி | uṭ-paṭi n. <>id.+ படு-. 1. That which is thrown into a scale to make up the weight; a makeweight; தராசிலிடும் படிக்கல்லு எவ்வளவு குறைகின்றதென்பதை அறிதற்கு இடும் சிறுபடிக்கல் முதலியன. (W.) 2. Income for the current year; |
உட்படு 1 - தல் | uṭ-paṭu- v. intr. <>id.+. 1. To be within, included; உள்ளாதல். 2. To be under, as in age; 3. To fall into, as a trap; to be caught, taken in; 4. To be concerned in; to become a party to; to agree to; 5. To join; |