Word |
English & Tamil Meaning |
---|---|
உட்படு 2 - த்தல் | uṭ-paṭu- v. tr. caus. of உட்படு1-. 1. To cause to be in, put in; உள்ளாக்குதல். 2. To inclose, enshare, envelop; 3. To persuade, bring round; |
உட்பத்தியம் | uṭ-pattiyam n. <>உள்2+. Abstinence from sexual indulgence as a regimen to be observed while one is taking medicine; புணர்ச்சி விலக்கும் பத்தியம். (W.) |
உட்பந்தி | uṭ-panti n. <>id.+. Inmost or first row of guests at a feast; விருந்தில் தலைவரிசை. (W.) |
உட்பலம் | uṭ-palam n. <>id.+bala. Reserve strength, as of one's physique, property, friends, or fighting force; அகவலிமை. |
உட்பற்று | uṭ-paṟṟu n. <>id.+. Self-love; selfishness; அகப்பற்று. |
உட்பிரவேசம் | uṭ-piravēcam n. <>id.+. Act of entering as into a room or a house; உள்ளேபுகுகை. |
உட்புகு - தல் | uṭ-puku- v. intr. <>id.+. 1. To get into, enter; உள்ளே பிரவேசித்தல், உட்புகுந் தென்னுளமன்னி (திருவாச. 31, 3). 2. To enter deeply into, get to the heart of; |
உட்புரவு | uṭ-puravu n. <>id.+. Endowed land; இராசாங்கத்தைச் சாராத அறப்புறம். நாட்டுநீங்கலாய் உட்புரவாய்த் தேவர்தானமாக (S.I.I. ii, 509). |
உட்புரை | uṭ-purai n. <>id.+. 1. Tubular cavity; உட்டுளை. 2. Small inner folds in a garment; 3. Secret of a matter; |
உட்புறம் | uṭ-puṟam n. <>id.+. Inner side of a thing; உட்பக்கம். |
உட்பூசை | uṭ-pūcai n. <>id.+. Mental and spiritual worship; மானசபூசை. (சி. சி. 2, 28, நிரம்ப.) |
உட்பேதம் | uṭ-pētam n. <>id.+. Internal or sectional difference, sub-division, opp. to புறப்பேதம்; அகவேறுபாடு. (சி. போ. பா. 7, 1.) |
உட்பொருள் | uṭ-poruḷ n. <>id.+. 1. Real purport or signification; உண்மைக்கருத்து. வேதத்தி னுட்பொருள் (திவ். கண்ணிநுண். 8). 2. Secret or esoteric meaning; |
உட்போடு - தல் | uṭ-pōṭu- v. tr. <>id.+. To entice, coax, wheedle; வசமாக்குதல். அவனை உட்போட்டுக்கொண்டு காரியம் நடத்துகிறான். Colloq. |
உடக்கரி - த்தல் | uṭakkari- 11 v. intr. prob. உடல்1+. To pat one's own shoulder, as in challenging another. See உடற்கரி-. (பு. வெ. 12. வென்றிப். 3, உரை.) . |
உடக்கு 1 - தல் | uṭakku- 5 v. tr. To dart or shoot, as an arrow; -intr. To be fitted, to the string of the bow, as an arrow; பிரயோகித்தல். வில்வாங்கியுடக்குஞ் சரத்தால். (மாறன. பா. 660). நாணிற் செறிதல். (மாறன. பா. 374.) |
உடக்கு 2 | uṭakku n. <>உடக்கு-. Thread of a screw; திருகாணிச்சுரையி னுட்சுற்று. (W.) |
உடக்கெடுத்துப்போ - தல் | uṭakkeṭuttup-pō- v. intr. prob. உடல்1+கெடு-+. To grow lean and emaciated; to become skin and bone; உடம்பு மிக மெலிதல். Loc. |
உடங்கு | uṭaṅku n. cf. ஒருங்கு. Propinquity, side, nearness; பக்கம். எமதுடங்கிற் பலித்ததோ (விநாயகபு. 62, 19). 1. Amicably, harmoniously; 2. In the same manner; 3. Together, closely; 4. Immediately; |
உடங்கையில் | uṭaṅ-kaiyil adv. Var. of உடன்கையில். . |
உடசம் 1 | uṭacam n. <>uṭa-ja. Hut made of leaves, hermit's thatched hut; பன்னசாலை. உடசமேற்படரு மாடன்மென்கொடி (சேதுபு. நைமி. 12). |
உடசம் 2 | uṭacam n. prob. kuṭa-ja. Ivory-tree. See வெட்பாலை. (தைலவ. தைல. 72.) . |
உடந்தை | uṭantai n. <>உடன். 1. Union; சேர்க்கை. மனைவியா மனந்தையோ டுடந்தையாய் (மச்சபு. ஆதிசிருட்டி. 15). 2. Alliance, support, abetment; 3. Relationship; |
உடந்தைக்குற்றவாளி | uṭantai-k-kuṟṟa-vāḷi n. <>உடந்தை+. Abettor of an offence, co-offender, accomplice; சேர்க்கைக்குற்றவாளி. (C. G.) |
உடப்பிறந்தாள் | uṭa-p-piṟantāḷ n. <>உடன்+. Sister; சகோதரி. Colloq. |
உடப்பிறந்தான் | uṭa-p-piṟantāṉ n. <>id.+. Brother; சகோதரன். Colloq. |
உடப்பிறப்பு | uṭa-p-piṟappu n. <>id.+. [M. udappirappu.] One born of the same parents, brother or sister; உடன்பிறந்தவன்-ள். Colloq. |
உடப்பு | uṭappu n. West Indian cockspur. See துறட்டுமுள். (மூ. அ.) . |