| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| அசுபதி | acupati n. Gold; தங்கம். (வை. மூ.) | 
| அசுபபாவனை | acupa-pāvaṉai n. <>ašubha+. (Buddh.) Contemplation of the disgusting nature of the body and of its impermanence; சரீரத்தின் அசுசி அநித்தியம் முதலியவற்றைக் கருதும் ஸ்ரீலக்ஷணபாவனை. (மணி. பக். 388, கீழ்க்குறிப்பு.) | 
| அசுபம் 1 | acupam n. <>அசுவம். Indian winter cherry; அமுக்கிரா. (பச். மூ.) | 
| அசுபம் 2 | acupam n. <>a-šubha. (நாநார்த்த.) 1. Sin; பாவம். 2. Evil; | 
| அசும்பு | acumpu n. <>அசும்பு-. (பொதி. நி.) 1. Scattering, throwing; வீசுகை. 2. Lustre; 3. Want, poverty; | 
| அசுரகுஞ்சரம் | acura-kucaram n. <>asura+. An asura named Kayamukācuraṉ; கயமுகாசுரன். (தக்கயாகப். 3, உரை.) | 
| அசுரசத்துவம் | acura-cattuvam n. <>id.+. (Erot.) A characteristic of women, one of pattu-cattuvam, q.v.; மகளிர்க்குரிய பத்து சத்துவங்களு ளொன்று. (கொக்கோ.) | 
| அசுரம் | acuram n. <>asura. A form of marriage in which the bridgeroom obtains the bride by bedecking her with jewels and by paying bride-price to her relations; தலைமகட்குப் பொன்பூட்டிச் சுற்றத்தார்க்கு வேண்டுவன கொடுத்துக் கொள்ளும் மணவகை. | 
| அசுரவாத்தியம் | acura-vāttiyam n. prob.a+svara+. Musical instruments like drum, etc,; முரசு முதலிய வாத்தியம். Nā. | 
| அசுவசட்டிரம் | acuvacaṭṭiram n. <>ašvadamṣṭra. Cow's thorn; நெருஞ்சி. (W.) | 
| அசுவத்தவிவாகம் | acuvatta-vivākam n. <>ašvattha+. Rites of marriage performed with a pipal tree as bridegroom and a margosa as bride, the pipal having been planted by a sonless person with a view to begetting a son and having been reared by him as his first son; பிள்ளையில்லாதவன் பிள்ளைப்பேறடையும் பொருட்டு அரசமரத்தை நட்டு மகனாகக் கருதி வளர்த்துப் பின் அவ்வரசமரத்துக்கு வேம்பை மனைவியாக்கிப் புரியும் கலியாணச்சடங்கு. Colloq. | 
| அசுவதாட்டியா - தல் | acuva-tāṭṭi-y-ā- v. intr. <>அசுவம்+தாட்டி+ஆ-. To be fluent in speaking; பேச்சு முதலியவற்றில் தட்டுத்தடையிலதாதல். அவன் அசுவதாட்டியாய்ப் பேசுகிறான். (W.) | 
| அசுவதீபம் | acuva-tīpam n. <>ašva+. A kind of temple, used in worship; கோயில் ஆராதனைத் தீபவகை. (பரத. ஒழிபி. 42.) | 
| அசுவந்தம் 1 | acu-v-antam n. <>asu+anta. Death; மரணம். (யாழ். அக.) | 
| அசுவந்தம் 2 | acuvantam n. <>ašmanta. (யாழ். அக.) 1. Field; வயல். 2. Oven; | 
| அசுவபதி | acuva-pati n. <>ašva+. A title of Vijayanagar kings; விஜயநகர அரசர் தரித்த பட்டப்பெயர்களு ளொன்று. (I. M. P. Md. 81.) | 
| அசுவம் | acuvam n. <>a-šubha. That which is unclean; தூய்மையற்றது. அவைதா நிலையாதுயரா மசுவம் (நீலகேசி, 493). | 
| அசுவமியம் | acuvamiyam n. prob. ašva. Kutirai-p-paṟ-pāṣāṇam, a mineral poison; குதிரைப்பற்பாஷாணம். (வை. மூ:) | 
| அசுவமேதப்பிரதக்ஷிணம் | acuva-mēta-p-piratakṣiṇam n. <>ašva-mēdha+. Circumambulation of the outer court-yard of the temple of Tiruviṭai-marutūr; திருவிடைமருதூரில் வெளிப்பிராகாரத்தை வலம்வருகை. (கோபாலகிருஷ்.8.) | 
| அசுவை | acuvai n. That which is not attested or proved; அத்தாட்சியற்றது. (யாழ். அக.) | 
| அசுனம் | acuṉam n. <>lašuna. Garlic; வெள்ளுள்ளி. (பரி. அக.) | 
| அசுனாதி | acuṉāti n. cf. அகனாதி. Mercury; இரதம். (வை. மூ.) | 
| அசூசை | acūcai n. <>asūyā. Envy; பொறாமை. Loc. | 
| அசூதி | acūti n. <>a-sūti. Sterlie woman; மலடி. (W.) | 
| அசூர் | acūr n. <>U. huzūr. Presence, as of a person in authority; சுமுகம். (P. T. L.) | 
| அசூர்வாசலட்டவணை | acūr-vācal-aṭṭa-vaṇai n. <>அசூர்+வாசல்+. Palace accounts; அரண்மனைக் கணக்கு. அசூர்வாசலட்டவணையிற் பிரவேசச்செலவெழுதி (சரவண. பணவிடு. 146.) | 
| அசூரி | acūri n. cf. வசூரி. Small-pox; வைசூரி. (யாழ். அக.) | 
| அசேவகவாதம் | acēveka-vātam n. <>asēvaka+vāta. A kind of ventrosity in the body; உடலிலுண்டாம் வாதநோய் வகை. (R.) | 
| அசை | acai n. <>அசை-. 1. Fault, blemish; குற்றம். (சம். அக. Ms.) 2. Body, trunk; | 
| அசை - தல் | acai- 4 v. intr. To feel pain; நோதல். (பொதி. நி.) | 
