| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| அஞ்ஞாழிக்கால் | a--āḷi-k-kāl n. <>ஐ + நாழி+. A grain measure; மரக்கால்வகை. (S. I. I. iii, 241.) | 
| அஞ்ஞானாசிரவம் | aaṉāciravam n. <>a-jāna + āšrava. Spiritual ignorance; ஞானமின்மை. (மேருமந். 98, உரை.) | 
| அஞ்ஞை 1 | aai n. prob. அம். Beauty; அழகு. (பொதி. நி.) | 
| அஞ்ஞை 2 | aai n. <>a-ja. (பொதி. நி.) 1. Ignorant person; அறிவிலான். 2. He-goat, male of the sheep; | 
| அஞல் | aal n. cf. அஞலம். A species of gnat; கொசுகு.(சிந்தா. நி. 64.) | 
| அஞலம் | aalam n. cf. ஐஞ்ஞீலம். The five aromatics; பஞ்சவாசம். (பொதி. நி. 30.) | 
| அட்கெனல் | aṭkeṉal n. Onom. expr. of harsh sound; கடியவோசைக் குறிப்பு. அட்கென்றழைப்ப வாந்தை (பதினொ. மூத்த. 3). | 
| அட்சகன்னம் | aṭca-kaṉṉam n. <>akṣakarṇa. (Astron.) Argument of latitude; ககோள கணிதவகை. (W.) | 
| அட்சச்சூலை | aṭca-c-cūlai n. prob. akṣa+. A kind of rheumatism; சூலைநோய்வகை. (R.) | 
| அட்சதூரம் | aṭca-tūram n. <>id.+. Latitude; பூமியின் சமரேகையிலிருந்து வடக்கே அல்லது தெற்கேயுள்ள இடைவெளியின் அளவு. (M. Navi. 57.) | 
| அட்சபாதன் | aṭcapātaṉ n. <>Akṣapāda. Follower of Nyāya philosophy propounded by Akṣapāda; நியாயசாத்திரத்தைப் பின்பற்றி நடப்பவன். (W.) | 
| அட்சமாலை | aṭca-mālai n. <>akṣa+. Rosary; செபமாலை. (W.) | 
| அட்சயதூணி | aṭcaya-tūṇi n. <>a-kṣaya+. The quiver of Arjuna, as inexhaustible; அர்ச்சுனனுடைய அம்புக்கூடு. (W.) | 
| அட்சயம் | aṭcayam n. <>a-kṣaya. 1. Undecaying; கேடின்மை. (சிந்தா. நி. 87.) 2. That which is inexhaustible; | 
| அட்சரகணிதம் | aṭcara-kaṇitam n. <>akṣara+. (Math.) Algebra; பீசகணிதம். (W.) | 
| அட்சரசீவிகன் | aṭcara-cīvikaṉ n. <>akṣara-jīvika. Scribe, writer; எழுத்தாளன். (யாழ். அக.) | 
| அட்சரப்புல் | aṭcara-p-pul n. <>akṣara+. A medicinal grass; பீனசப்புல். (W.) | 
| அட்சரமுகன் | aṭcara-mukaṉ n. <>akṣara-mukha. Student, disciple; மாணாக்கன். (சிந்தா. நி. 96.) | 
| அட்சராரத்தி | aṭcarāratti n. <>akṣara + ārati. Metallic tray containing 51 lights arranged in tiers and waved in front of the deities, the number of lights representing the number of letters in the Sanskrit alphabet; வடமொழி அக்ஷரங்களின் எண் அளவாக 51 தீபங்களை அடுக்கடுக்காகக் கொண்ட தீபத்தட்டுவகை. (தமிழ்விடு. 236, கீழ்க்குறிப்பு.) | 
| அட்சீபம் | aṭcīpam n. <>akṣiva. Horseradish tree; முருங்கை. (பரி. அக.) | 
| அட்டகணம் | aṭṭa-kaṇam n. <>aṣṭan+. (Pros.) The eight kinds of feet with which a poem may begin, viz., nila-k-kaṇam, nīr-k-kaṇam, cantira-kaṇam, intira-kaṇam or iyamāṉa-kaṇam, cūriya-kaṇam, tī-k-kaṇam, vāyu-kaṇam, ākāca-kaṇam; நிலக்கணம் நீர்க்கணம் சந்திரகணம் இந்திரகணம் அல்லது இயமானகணம் சூரியகணம் தீக்கணம் வாயுகணம் ஆகாசகணம் என எண்வகையுடையனவும் நல்லவுந் தீயவுமாய் வருவனவுமான நூன்முதற்சீர்கள். (W.) | 
| அட்டகம் | aṭṭakam n. <>aṣṭaka. A collection of mantras in the Vēda; வேதத்தில் அடங்கிய ஒருசார் மந்திரத்தொகுதி. வருக்க முழுதும் வந்தவட்டகமும் (கலிங். 170). | 
| அட்டகாசம் | aṭṭakācam n. Malabar nut; ஆடாதோடை. (பச். மூ.) | 
| அட்டகுணம் | aṭṭa-kuṇam n. <>aṣṭan+. The eight attributes of God; கடவுளின் எண் குணம். | 
| அட்டகை | aṭṭakai n. <>aṣṭakā. The eighth titi; அட்டமி. (யாழ். அக.) | 
| அட்டசுபம் | aṭṭa-cupam n. <>aṣṭan+. The eight auspicious objects; அட்டமங்கலம். (யாழ். அக.) | 
| அட்டணை | aṭṭaṇai adv. <>அட்டம். [T. adda.] Across; குறுக்கே. (W.) | 
| அட்டணைக்கால் | aṭṭaṇai-k-kāl n. <>அட்டணை+. A kind of stand or pedestal; பீடவகை. (S. I. I. V, 213.) | 
| அட்டதீரசம் | aṭṭatīracam n. Iron filings; அரப்பொடி. (பரி. அக.) | 
| அட்டநேமிநாதர் | aṭṭanēminātar n. (Jaina.) The sages in the samava-caraṇam; பொன்னெயில்வட்டத் திருக்கும் சமணப்பெரியோர். (தக்கயாகப். 373, உரை.) | 
