Word |
English & Tamil Meaning |
|---|---|
| அட்டாரி | aṭṭāri n. See அட்டாலி. Cm. . |
| அட்டாலகம் | aṭṭālakam n. <>aṭṭāla-ka. Watch-tower on a fort; கோட்டை மதின் மேலுள்ள காவற்கூடம். அட்டாலகமும் மதிற்பொறியு முதலாயின (குறள், 744, மணக்.). |
| அட்டாலி | aṭṭāli n. <>aṭṭāla. House with an upper floor; மாடியுள்ள வீடு. Cm. |
| அட்டாலை 1 | aṭṭālai n. perh. id. Protection; சவரணை. (சம். அக. Ms.) |
| அட்டாலை 2 | aṭṭālai n. A tree, Ficus acetosa; மரவகை. (R.) |
| அட்டாலைச்செட்டி | aṭṭālai-c-ceṭṭi n. prob. அட்டாலை+. An ancient coin; பழைய நாணயவகை. (சரவண. பணவிடு. 59.) |
| அட்டாலைச்சேவகன் | aṭṭālai-c-cēvakaṉ n. <>id.+. Soldier keeping guard on the watch-tower of a fort; கோட்டை மதிலின் அட்டாலை மண்டபத்திலிருந்து காவல்புரியும் சேவகன். சந்த்ரசேகரனை யட்டாலைச்சேவகனை (சொக்க. உலா, 276). |
| அட்டாளகம் | aṭṭāḷakam n.<>aṭṭāla-ka. Upper storey; மேல்மாடி. Pond. |
| அட்டாளிகை | aṭṭāḷikai n. <>aṭṭāli-kā. See அட்டாளகம். Pond. . |
| அட்டாளை | aṭṭāḷai n. See அட்டாளகம். (W.) . |
| அட்டி | aṭṭi n. (R.) 1. Stern of a ship; கப்பலின் பின்பக்கம். 2. Head or bottom of a cask; |
| அட்டிமை | aṭṭimai n. Bishop's weed; ஓமம். (W.) |
| அட்டியல் | aṭṭiyal n. prob. அட்டு-. A set of vessels of cylindrical shape arranged one within the other; அடுக்கு. Loc. |
| அட்டிற்பேறு | aṭṭiṟ-pēṟu n. <>அட்டில்+. An endowment for distribution of food to the servants of a temple; கோயிற் பணியாளரின் விநியோகத்திற்குரிய பிரசாதக்கட்டளை. (M. E. R. 448 of 1928-9.) |
| அட்டினம் | aṭṭiṉam n. cf. அட்டிமை. Cumin; சீரகம். (பரி. அக.) |
| அட்டு 1 | aṭṭu n. <>அட்டு-. Dirt; அழுக்கு. அவன் அட்டுப்பிடித்தவன். Colloq. |
| அட்டு 2 | aṭṭu n. cf. அட்டும். A verbal suffix used as imperative auxiliary in the sense of 'let'; ஒரு வியங்கோள் விகுதி. (யாழ். அக.) |
| அட்டுக்கிறை | aṭṭukkiṟai n. perh. அடு- + இறை. A tax; வரிவகை. (S. I. I.iii, 311.) |
| அட்டுணவு | aṭṭuṇavu n. <>id.+. See அட்டூண். (பிங்.) . |
| அட்டுப்பிடித்தல் | aṭṭu-p-piṭittal n. <>அட்டு+. Being dirty; அழுக்கடைந்து கிடக்கை. துணி அட்டுப்பிடித்துக்கிடக்கிறது. Colloq. |
| அட்டூண் | aṭṭūn n. <>அடு-+. Cooked food; சமைத்த உணவு. அயலறியா வட்டூணோ வில் (பழமொழி, 148). |
| அட்டைப்பிரயோகம் | aṭṭai-p-pirayōkam n. <>அட்டை+. See அட்டைவிதி. (தஞ். சரசு. iii, 17.) . |
| அட்டைலக்ஷணம் | aṭṭai-lakṣaṇam n. <>id.+. See அட்டைவிதி. (தஞ். சரசு. iii, 80.) . |
| அட்டைவிதி | aṭṭai-viti n. <>id.+. The art of healing by using leeches to suck up blood; அட்டைகளைக் கொண்டு இரத்தத்தை உறிஞ்சச் செய்யும் சிகிற்சை. (தஞ். சரசு. iii, 38.) |
| அடக்கச்சடங்கு | aṭakka-c-caṭaṅku n. <>அடக்கம்+. Burial; பிரேதத்தை அடக்கஞ்செய்யுங் கிரியை. Pond. |
| அடக்கச்செலவு | aṭakka-c-celavu n. <>id.+. See அடக்கச்சடங்கு. Pond. . |
| அடக்கிராவி | aṭakkirāvi n. A variety of paddy; நெல்வகை. (T. A. S. V, 204.) |
| அடக்குப்பண்ணு - தல் | aṭakku-p-paṇṇu- v. tr. prob. அடக்கு-+. To hinder, stop; தடைசெய்தல். Loc. |
| அடகம் | aṭakam n. cf. அட்டகம். Sweet flag; வசம்பு. (பரி. அக.) |
| அடகுபிடி - த்தல் | aṭaku-piṭi- v. tr. <>அடகு+. 1. To do pawn-broking; விலையுள்ள சாமான்களைப் பணங்கொடுத்து ஈடுவாங்குதல். Colloq. 2. (Nāṭya.) To assume poses in dancing; |
| அடகோலை | aṭakōlai n. <>id.+. Lease deed; அடைமான ஓலை. |
| அடங்கம் | aṭaṅkam n. Christmas rose; கடுரோகிணி. (பச். மூ.) |
| அடங்கல்டாப்பு | aṭaṅkal-ṭāppu n. <>அடங்கல்+. Estimate of the produce; கண்டுமுதற் கணக்கு. (R. T.) |
| அடங்கலாமிஷம்டாப்பு | aṭaṅkal-āmiṣam-ṭāppu n. <>id.+ ஆமிஷம்+. Estimate of the annual produce of a piece of land; நிலத்தின் ஒரு வருஷத்து விளைவுமதிப்பு. (R. T.) |
