Word |
English & Tamil Meaning |
|---|---|
| அடாவரி | aṭā-vari n. <>அடு- + ஆ neg.+. Unjust tax; அநியாய வரி. (R.) |
| அடாவழி | aṭā-vaḻi n. <>id.+ id.+. (R.) 1. Rough way; கடுவழி. 2. See அடாநெறி. |
| அடி 1 | aṭi n. <>id. 1. Supreme Being; கடவுள். ஆரே யறிவா ரடியின் பெருமை (திருமந். 2126). 2. Lineage, descent; 3. Sediment; |
| அடி 2 | aṭi n. <>செருப்படி. A herb; செருப்படை. (பச். மூ.) |
| அடிக்கட்டை | aṭi-k-kaṭṭai n. <>அடி+. See அடிமரம். (M. Navi. 81.) . |
| அடிக்கலம் | aṭi-k-kalam n. <>id.+. Anklet; சிலம்பு. அடிக்கல மாற்ற (சீவக. 2041). |
| அடிக்குழம்பு | aṭi-k-kuḻampu n. <>id.+. That which settles at the bottom, sediment; அடிவண்டல். |
| அடிகல் | aṭi-kal n. <>அடி-+. Dressed cut-stone; செதுக்கித் திருத்திய கல். |
| அடிகாயம் | aṭi-kāyam n. <>id.+. Contused wound caused by a blow; அடியால் உண்டாம் இரணம். அடிகாயம் (மதி. களஞ். ii, 119). |
| அடிகாரன் | aṭi-kāraṉ n. <>அடி+. Colloq. 1. Butcher; உணவுக்காகக் கால்நடைகளைக் கொல்பவன். 2. Fencer; |
| அடிச்சட்டம் | aṭi-c-caṭṭam n. <>id.+. Bottom piece, as of a door; கதவு பலகணி முதலியவற்றின் அடியில் இடும் மரம். Loc. |
| அடிச்சரக்கு | aṭi-c-carakku n. <>id.+. (R.) 1. Inferior articles of merchandise; மட்டமான சரக்கு. 2. Refuse; |
| அடிச்சூத்திரன் | aṭi-c-cūttiraṉ n. <>id.+. A person of inferior caste; தாழ்ந்த வகுப்பினன். (W. G.) |
| அடிச்சேரி | aṭi-c-cēri n. prob. id.+. 1. Village near a town; suburb; நகரையடுத்த ஊர். Cm. 2. Part of a village in which the hereditary proprietors reside; |
| அடிசிற்பள்ளி | aṭiciṟ-paḷḷi n. <>அடிசில்+. Kitchen; மடைப்பள்ளி. ஐவே றமைந்த வடிசிற் பள்ளியும் (பெருங். இலாவாண. 7, 133). |
| அடிஞானம் | aṭi-āṉam n. <>அடி+. (šaiva.) Spiritual wisdom; பதிஞானம். அடிஞான மான்மாவிற்றோன்றும் (சி. சி. 8, 28). |
| அடித்தலம் | aṭi-t-talam n. <>id.+. Sandals of a great person; திருவடிநிலை. அடித்தலம் . . . சூடினான் (கம்பரா. கிளைகண். 136). |
| அடித்தழும்பு | aṭi-t-taḷampu n. <>id.+. See அடிதாறு. (W.) . |
| அடித்தளம் | aṭi-t-taḷam n. <>id.+. (W.) 1. Ground-floor; கட்டடத்தின் அடிநிலைப்பரப்பு. 2. Foundation of a well; 3. Rear of an army; |
| அடித்துண்டு | aṭittuṇṭu n. cf. அடுத்தூண். Subsistence allowance; சீவனாம்சம். (மருத்.) |
| அடித்துமுதலானது | aṭittu-mutalāṉatu n. <>அடி-+முதல்+ஆ-. Quantity of grain threshed and heaped at the threshing-floor; கதிரையடித்துக் களத்திற் குவித்த தானியம். Colloq. |
| அடித்துவிடு - தல் | aṭittu-viṭu- v. tr. <>id.+. To accomplish by force; பலவந்தமாக முடித்தல். (R.) |
| அடித்தொடை | aṭi-t-toṭai n. <>அடி+. 1. Upper part of the thigh; தொடையின் மேற்பாகம். 2. The back part of the thigh; |
| அடிதடில் | aṭitaṭil n. <>அடிதடி. Quarrel that ends in blows; அடிதடிச் சண்டை. (மதி. களஞ். ii, 173.) |
| அடிதண்டா | aṭi-taṇṭā n. <>அடி+. Barlaid across a door; கதவிற் குறுக்காக இடுஞ் சட்டத் தாழ்ப்பாள். Loc. |
| அடிதலை | aṭi-talai n. <>id.+. Order, regularity; ஒழுங்கு. (W.) |
| அடிதாளம் | aṭi-tāḷam n. <>அடி-+. Beating time with the hand; கைகளாற் போடுந்தாளம். அடிதாளம் போடாவிட்டால் பாட்டுவாராது என்பார்கள் (மதி. களஞ். ii, 72). |
| அடிதாறு | aṭi-tāṟu n. <>அடி+. Foot-print; அடிச்சுவடு. நிழலு மடிதாறு மானோம் (திவ். இயற். பெரியதிருவந். 31). |
| அடிநா | aṭi-nā n. <>id.+. Root or lower part of the tongue; நாவின் அடிப்பகுதி. (W.) |
| அடிநாய் | aṭi-nāy n. <>id.+. A term of humility meaning 'Slave-dog'; பெரியோர்முன் தன்னைத் தாழ்த்திக்கூறுஞ் சொல். அடிநாயுரை (தேவா. 742, 11). |
| அடிநாயேன் | aṭināyēṉ n. <>அடிநாய். A term of humility referring to oneself as 'Your humble slave-dog'; 'நாய்போலத் தாழ்ந்த அடிமையாகிய நான்' என்ற பொருளில் வரும் ஒரு வணக்க மொழி. உத்தம வடிநாயே னோதுவதுளது (கம்பரா. கங்கை. 63) |
