Word |
English & Tamil Meaning |
|---|---|
| அடிநிலை | aṭi-nilai n. <>அடி+. Foundation; அஸ்திவாரம். ஆகமத்தா லடிநிலை பாரித்து (பெரியபு. பூச. 6). |
| அடிநிலைச்சுற்று | aṭi-nilai-c-cuṟṟu n. <>id.+ நிலை+. Stirrup; குதிரை யங்கவடி. அடிநிலைச் சுற்றோ டியாப்புப் பிணியுறீஇ (பெருங். இலாவாண. 18, 22). |
| அடிப்பட்டடைநெல் | aṭi-p-paṭṭaṭai-nel n. <>id.+ பட்டடை+. Grains of paddy caught in the straw on which paddy is heaped; களத்துப்பட்டடையில் வைக்கோலோடு கலந்துகிடக்கும் நெல். (R. T.) |
| அடிப்படி | aṭi-p-paṭi n. <>id.+. Bottom piece of the frame of a door; கதவுநிலையின் அடி மரப்படி. Loc. |
| அடிப்படுத்து - தல் | aṭi-p-paṭuttu v. tr. Caus. pf அடிப்படு-. To establish firmly; நிலைபெறச் செய்தல். தன்னெறிமுறைமை அடிப்படுத்து வருதற்குப் பிரிவன் (கலித். 26, துறை). |
| அடிப்படை | aṭi-p-paṭai n. <>அடி+. Main division of an army; சேனையில் தலைமையாகவுள்ள பகுதி. (W.) |
| அடிப்பற்று | aṭi-p-paṟṟu n. <>id.+. 1. Food, curry, etc., charred in cooking; தீந்து போன சோறு முதலியன. Loc. 2. Rock-salt; |
| அடிப்பிடி - த்தல் | aṭi-p-piṭi v. intr. <>id.+. To be charred, as rice, vegetables, etc., in cooking; சோறு கறி முதலியன தீந்துபோதல். (யாழ். அக.) |
| அடிப்புக்கண்டுமுதல் | aṭippu-k-kaṇṭu-mutal n. <>அடிப்பு+. Gross out-turn of paddy; மொத்த நெல்விளைவு. (R. T.) |
| அடிப்புல் | aṭi-p-pul n. <>அடி+. Grain stored by ants under the ground; தரையின் அடியில் எறும்புகள் சேர்த்து வைக்குந் தானியம். Tp. |
| அடிப்பெருங்கடவுள் | aṭi-p-peruṅ-kaṭavuḷ n. <>id.+. The Supreme Being; எல்லாவற்றுக்கும் மூலமான கடவுள். அடிப்பெருங் கடவுளூழியீறுதொறும் (தக்கயாகப். 656). |
| அடிபறி - தல் | aṭi-paṟi- v. intr. <>id.+. To be uprooted; வேரோடு பெயர்தல். ஊசிவேர் அடிபறிய (தக்கயாகப். 144, உரை). |
| அடிபிடி - த்தல் | aṭi-piṭi- v. <>id.+. intr. 1. To get a clue, as to a crime; துப்பறிதல். (W.) 2. To trace one's footstep; 1. See அடைகட்டு, 1. அண்டகடாகம் வெடித்து அடிபிடிக்க வேண்டும்படி (திவ். அமலனாதி, 2, வ்யா. பக். 33). 2. To pursue; |
| அடிபிழை - த்தல் | aṭi-piḻai- v. intr. <>id.+. To act unlawfully, illegally; நெறிதவறி நடத்தல். வேந்தன் அடிபிழைத்தாரை யொறுக்குந்தண்டத்து (மணி. 19, 42). |
| அடிபுதையரணம் | aṭi-putai-y-araṇam n. <>id.+ புதை-+. A kind of sandals covering the feet; செருப்புவகை. அடிபுதையாண மெய்தி (பெரும்பாண். 69). |
| அடிபுனைதோல் | aṭi-puṉai-tōl n. <>id.+ புனை-+. Sandal; செருப்பு. அடிபுனைதோலி னரண்சேர்ந்து (பெருந்தொ. 437). |
| அடிமடக்கு | aṭi-maṭakku n. <>id.+. (Rhet.) Repetition of a line in a stanza with or without a variation in sense; பொருள் வேறு பட்டேனும் வேறுபடாமலேனும் செய்யுளின் அடி மீண்டுமீண்டு வருவதாகிய சொல்லணிவகை. கொச்சகமெலா மடிமடக்கு (பெருந்தொ. 1793). |
| அடிமடையன் | aṭi-maṭaiyaṉ n. <>id.+. Utter idiot; முழுமுட்டாள். Colloq. |
| அடிமண்டி | aṭi-maṇṭi n. <>id.+. Dregs; deposit; அடியிற் றங்கும் மண்டி முதலியன. தாம்தந்த மயர்வறு மதிநலமெல்லாம் அடிமண்டியோடே கலங்கிற்று என்னுங்கோள் (ஈடு, 1, 4, 3, வ்யா. பக். 183). |
| அடிமயக்கு | aṭi-mayakku n. <>id.+. (Pros.) A verse so constructed that transposing of its lines does not destroy its sense; பொருளில் திரிபின்றி அடிகளை முன் பின்னாக மாற்றும்படி யமைந்த பாடல். (W.) |
| அடிமரம் | aṭi-maram n. <>id.+. Lower mast; பாய்மரத்தின் அடிப்பாகம். (M. Navi. 81.) |
| அடிமுகனை | aṭi-mukaṉai n. <>id.+. Beginning; ஆரம்பம்.(W.) |
| அடிமுட்டாள் | aṭi-muṭṭāḷ n. <>id.+. See அடிமடையன். Colloq. . |
| அடிமுடி | aṭi-muṭi n. <>id.+. See அடிதலை. (யாழ். அக.) . |
| அடிமுண்டம் | aṭi-muṇṭam n. <>id.+. 1. Stump of a tree; வெட்டியமரத்தின் அடிப்பாகம். 2. Worthless person; 3. See அடிமடையன். Loc. |
| அடிமைக்காசு | aṭimai-k-kācu n. <>அடி-மை+. A fre collected from temple servants; கோயில் வேலைக்காரரிடமிருந்து பெறும் வரிவகை. (I. M. P. Sm. 38.) |
