| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| அடுகிடைபடுகிடை | aṭukiṭai-paṭukiṭai n. Redupl. of. படுகிடை. 1. Lying down at a person's house determined not to leave the place till the thing asked for is obtained; நினைத்தது பெறுமளவும் ஒருவன் வீட்டின்முன் படுத்துக்கிடக்கை. (W.) 2. Being completely bedridden, as in illness; | 
| அடுகுவளம் | aṭu-kuvaḷam n. prob. அடு-+. Food; போசனம். அடுகுவளம் தடைப்படும் போலே காணும் (ஈடு, 10, 4, 3). | 
| அடுத்தி | aṭutti n. perh. அடர்-. cf. அடத்தி. Usury; அக்கிரம வட்டி. (W. G.) | 
| அடுத்துக்கழுத்தறு - த்தல் | aṭuttu-k-kaḻuttaṟu v. tr. <>அடு-+. 1. To kill by treachery; சதிசெய்து கொல்லுதல். (W.) 2. To do harm insidiously; | 
| அடுநறா | aṭu-naṟā n. <>id.+. Distilled toddy, காய்ச்சிய சாராயம். அடுநறா மகிழ்தட்ப (பரிபா. 21). | 
| அடுப்பம் | aṭuppam n. <>id. 1. Heaviness, weight; கனம். மேக அடுப்பமும் பார் அடுப்பமும் ஒத்தன பேய்க்கணங்கட்கு (தக்கயாகப். 361, உரை). 2. Close intimacy or relationship; | 
| அடுப்பூதி | aṭuppūti n. <>அடுப்பு + ஊது-. 1. Cook; சமையற்கா-ரன்-ரி. 2. Fool; | 
| அடுமா | aṭumā n. Nut; கொட்டை. (பரி. அக.) | 
| அடுவம் | aṭuvam n. Wight's Indian nettle; மலைப்புன்கு. (L.) | 
| அடை - தல் | aṭai- 4 v. intr. To be closed, choked up or filled up; தூர்தல். Colloq. | 
| அடை - த்தல் | atai- 11 v. perh. அடு-. intr. To allot; வகுத்தல். To be appropriate to; | 
| அடை | aṭai n. <>செருப்படை. A herb. See அடி2. (பச். மூ.) | 
| அடைக்க | aṭaikka adv. <>அடை-. Entirely; முழுவதும். வீட்டைக்க நோயாயிருக்கிறது. | 
| அடைக்கப்பட்டார் | aṭaikkappaṭṭār n. A title of kaḷḷars; கள்ளர் பட்டங்களு ளொன்று. (கள்ளர்சரித். 145.) | 
| அடைக்கப்புடைக்க | aṭaikka-p-puṭaikka adv. <>அடை-+புடை-. Hurriedly, quickly; விரைவாக. Loc. | 
| அடைக்கலஞ்செய் - தல் | aṭaikkalacey- v. tr. <>அடைக்கலம்+. To bury, inter, entomb; பிரேதவடக்கஞ் செய்தல். (மதி. களஞ். ii, 145.) | 
| அடைக்கலமாதா | aṭaikkala-mātā n. <>id.+. The Lady of Refuge; அடைக்கலமளிக்கும் தேவமாதா. R.C. | 
| அடைக்கலஸ்தலம் | aṭaikkala-stalam n. <>id.+. Asylum; புகலிடம். (R.) | 
| அடைகட்டு - தல் | aṭai-kaṭṭu- v. tr. <>அடை+. 1. To construct a bank or bund; நீர்ப்பெருக்கைத் தடுக்க வரம்புண்டாக்குதல். அண்டகடாகம் வெடித்து அடைகட்ட வேண்டும்படியிறே அபேக்ஷிதம்பெற்று வளர்ந்தபடி (திவ். அமலனாதி. 2, வ்யா. பக். 34). 2. To place a bar of wood or stone in front of a wheel of a carriage to prevent its motion; 3. To insert a wedge-like piece of wood to raise the wheel of a car or cart; | 
| அடைகடல் | aṭai-kaṭal n. <>id.+. Sea-coast; கடற்கரை. (தொல். சொல். 419, உரை.) | 
| அடைகரை | aṭai-karai n. <>id.+. Shore; கரைப்பக்கம். (குறுந். 175.) | 
| அடைகுடி | aṭai-kuṭi n. <>id.+. Cultivating tenant; பயிரிடுங் குடி. (S. I. I. ii, 250.) | 
| அடைகுத்து - தல் | aṭai-kuttu- v. tr. <>id.+. To mortgage; அடைமானம் வைத்தல். குடியொடுகுடிபெறும்விலைக்கு அடைகுத்துக என்று (S. I. I. V, 305). | 
| அடைகொள்(ளு) - தல் | aṭai-koḷ- v. tr. <>id.+. To take on mortgage, as land; ஒற்றியாகப் பெறுதல். இலக்ஷுமண நம்பி அடைகொண்ட நிலமும் (S. I. I. iv, 81). | 
| அடைசாரல் | aṭai-cāral n. <>அடை-+. Heavy monsoon; பருவகாலத்து அடைமழை. ஆனி முற்சாரல், ஆடி அடைசாரல். | 
| அடைசு - தல் | aṭaicu- 5 v. intr To be full; நிறைவாதல். அடைசிச் சாப்பிடுதல். | 
| அடைசுபலகை | aṭaicu-palakai n. <>அடைசு-+. Plank placed above the lintel of a door-frame; கதவுநிலைகளின் மேல் வைக்குஞ்சூரியப்பலகை. (W.) | 
