Word |
English & Tamil Meaning |
|---|---|
| அண்டப்பொகுட்டு | aṇṭa-p-pokuṭṭu n. <>id.+. See அண்டகூடம். பூதலப்பரப்பி னண்டப் பொகுட்டினுட் புறத்துள் (கம்பரா. பிணிவீட்டு. 113). . |
| அண்டபஸ்மம் | aṇṭa-pasmam n. <>aṇda+. Calcination of medicinal drugs with eggs; கோழிமுட்டைக்கருவைக் கொண்டு செய்யும் மருந்து. |
| அண்டபித்தி | aṇṭa-pitti n. <>id.+. The vault of the heavens, as the shell of the universe imagined to be in the form of an eggs; அண்டகோளத்தின் மேலோடு. ஒரு திருவடிகளே அண்டபித்திக்கு மவ்வருகேபோய் (திவ். திருநெடுந் 5, வ்யா.). |
| அண்டபேரண்டபட்சி | aṇṭapēraṇtapaṭci n. <>கண்டபேரண்டம்+. A monster bird; கண்டபேரண்டம் என்னும் பெரும்பறவை. Loc. |
| அண்டம் | aṇṭam n. <>aṇda. 1. Sac of the civet cat; புழுகு சட்டம். (சம். அக. Ms.) 2. Brain; 3. Skull; |
| அண்டரசம் | aṇṭa-racam n. <>id.+. Mercury; பாதரசம். (சை. மூ.) |
| அண்டரண்டபட்சி | aṇṭaraṇṭa-paṭci n. <>கண்டபேரண்டம்+. 1. See அண்டபேரண்டபட்சி. Loc. . 2. Eagle; |
| அண்டவாணன் | aṇṭa-vāṇaṉ n. <>அண்டம்+. God; தேவன். அண்டவாணனடி யுள்குதலால் (தேவா. 1114, 11). |
| அண்டிரன் | aṇṭiraṉ n. <>aṇdīra. Man; மனுஷன். (சிந்தா. நி. 114.) |
| அண்டீரன் | aṇṭīraṉ n. <>aṇdīra. (நாநார்த்த.) 1. Man; மனிதன். 2. Hero, warrior; |
| அண்ணம் | aṇṇam n. <>அண். Lower jaw; கீழ்வாய்ப்புறம். (யாழ். அக.) |
| அண்ணமார் | aṇṇamār n. A minor village deity; ஒரு கிராமதேவதை. Madr. |
| அண்ணல் | aṇṇal n. <>அண்-. 1. Master, lord; தலைவன். அண்ணலா ரறுத்த கூலிகொண்டு (பெரியபு. அரிவாட். 11). 2. Father; 3. Preceptor, spiritual guide; 4. The Buddha; 5. šiva; 6. Arhat; 7. Elder brother; |
| அண்ணவோதை | aṇṇa-v-ōtai n. <>அண்ணம்+. Clicking sound produced by pressing the tongue against the roof of the mouth; நாவாற்கொட்டும் ஒலி. (W.) |
| அண்ணாக்கயிறு | aṇṇā-k-kayiṟu n. <>அரைநாண்+. Waistcord; அரைஞாண். Colloq. |
| அண்ணாநாடு | aṇṇā-nāṭu n. <>அண்ணா+. The region about Tiru-v-aṇṇāmalai; திருவண்ணாமலைப் பிரதேசம். அண்ணாநாட்டு எல்லையில் திருந்திகையாற்றை யடைத்து (S. I. I. viii, 44). |
| அண்ணாவி | aṇṇāvi n. <>அண்+ஆள்-. (யாழ். அக.) 1. Elder brother; தமையன். 2. Poet; |
| அண்ணிசு | aṇṇicu n. <>அண்ணு-. Proximity, nearness; அணிமை. (யாழ். அக.) |
| அண்ணியன் | aṇṇiyaṉ n. <>அண்-மை. Close kinsman; நெருங்கிய உறவினன். தமப்பன் பகையாக அவனிலும் இவன் அண்ணிய னென்றுவரநின்ற ப்ரஹ்லாதன் (ஈடு, 10, 3, ப்ர. பக். 70). |
| அண்ணு - தல் | aṇṇu- 5 v. tr. To resemble; ஓத்தல். புகலும் வாளரிக் கண்ணியர் (கம்பரா. வரைக்காட். 58). |
| அண்ணுண்டார் | aṇṇuṇtār n. A title of kaḷḷars; கள்ளர் பட்டங்களு ளொன்று. (கள்ளர் சரித். 145.) |
| அண்ணூத்திப்பிரியர் | aṇṇūttippiriyar n. perh. ஐந்நூற்றுப்பேரர். A title of Kaḷḷars; கள்ளர் பட்டங்களு ளொன்று. (கள்ளர்சரித். 145.) |
| அண்ணை | aṇṇai n. cf. மண்ணை. Devil, ghost, goblin; பேய். (பொதி. நி.) |
| அண்பினார் | aṇpiṉār n. <>அண்-. Those who have taken refuge; அண்டினவர். அன்பினார் பிரியார் (தேவா. 224, 6). |
| அணங்கம் | aṇaṅkam n. prob. அணங்கு. Grammar; இலக்கணம். (சிந்தா. நி. 103.) |
| அணங்காட்டு | aṇaṅkaṭṭu n. <>id.+. Dance under possession by Skanda; வெறியாட்டு. (W.) |
| அணங்கு - தல் | aṇaṅku- 5 v. intr. To sound, make noise; ஒலித்தல். புகையணங்க (பு. வெ. 10, பொது. 8). |
| அணங்குடையாட்டி | aṇaṅkuṭai-y-āṭṭi n. <>அணங்கு+. A woman divinely inspired and having oracular powers; தெய்வாவேசங்கொண்டு ஆடுபவள். (பெரியபு. கண்ணப்ப. 67.) |
| அணங்குறைவாள் | aṇaṅkuṟaivāḷ n. <>id.+. See அணங்குடையாட்டி. (பெரியபு. கண்ணப்ப. 153.) . |
