Word |
English & Tamil Meaning |
|---|---|
| அணுபை | aṇupai n. <>aṇu-bhā. Lightning; மின்னல். (சிந்தா. நி. 105.) |
| அணுமை | aṇumai n. <>anu-mā. (Log.) Inference, as a mode of proof; அனுமானப்பிரமாணம். புனைவுசே ரணுமை (நீலகேசி, தருமவுரைச். 110). |
| அணை | aṇai n. <>அணை-. (பொதி. நி.) 1. Small wooden seat; மணை. 2. Pillow; |
| அணைக்கட்டி | aṇai-k-kaṭṭi n. <>அணை+. Furrow-slice; உழுசாலிற் பெயருங் கட்டி. Loc. |
| அணைக்கட்டிபோடு - தல் | aṇai-k-kaṭṭipōṭu- v. intr. <>அணைக்கட்டி+. To break the clods thrown in the furrow and level; படைச்சாலில் பேர்ந்த கட்டிகளை யுடைத்து நிரவுதல். Loc. |
| அணைக்கல் | aṇai-k-kal n. <>அணை+. Upright stones in a dam; அணையிலுள்ள குத்துக்கல். (R. T.) |
| அணைகோலு - தல் | aṇai-kōlu- v. intr. <>id.+. To form an embankment; நீர்ப்பெருக்கைத் தடுக்க அடைப்புப்போடுதல். வெள்ளம் வருவதற்குமுன்ன ரணைகோலி வையார் (நன்னெறி, 30). |
| அணைப்பு | aṇaippu n. See அணைப்பு. Loc. . |
| அணவு | aṇaivu n. <>அணை-. Embracing; தழுவுகை. அணைவுதந் தாளுதற்கே (மஸ்தான். பாடல், 124). |
| அணோக்கம் | aṇōkkam n. perh. அண்+நோக்கம். Tree; மரப்பொது. (W.) |
| அத்தக 1 | attaka adv. <>அ+தகு-. In that manner; அத்தன்மையதாக. அத்தக நிறீஇ (பெருங். இலாவாண. 6, 50). |
| அத்தக 2 | attaka adv. prob. அம்+. Beautifully; அழகுபொருந்த. அத்தக வரிவைய ரளத்தல் காண்மின் (பரிபா. 12). |
| அத்தகண்டம் | atta-kaṇṭm n. <>hasta+. (Yōga.) See அத்தகண்டாதனம். (தத்துவப். 108.) . |
| அத்தகண்டாதனம் | atta-kaṇṭātaṉam n. <>அத்தகண்டம்+. (Yōga.) A yōgic posture in which one leg is held in upright position by one hand, while the other leg is stretched on the ground, the whole body resting on the other hand; ஒருகாலை மேல் நீட்டி அவ்வாறு நீட்டிய காலை ஒரு கையைக்கொண்டு கட்டி மற்றைக்கையை நிலத்தில் ஊன்றியும் மற்றொரு காலை நிலத்தில் நீட்டியுமிருக்கும் ஆசனவகை. (தத்துவப். 108, உரை.) |
| அத்தகம் | attakam n. perh. hastaka. Accountant; கணக்கன். அத்தகங் கூட்டமிடு மங்கணத்தில் (நெல்விடு. 318). |
| அத்தகானி | atta-kāṉi n. <>artha-hāni. Loss of wealth; பொருட்கேடு. (தஞ். சரசு. i, 307.) |
| அத்தத்தாவெனல் | attattā-v-eṉal n. <>அத்தன்+அத்தன்+. Expr. of child calling its father; குழந்தை தந்தையைக் கூப்பிடுதற் குறிப்பு. அடுத்தடுத் தத்தத்தாவென்பான் (கலித். 81.) |
| அத்ததாளி | attatāḷi n. False-fern tree; காட்டுப்பூவரசு. (L.) |
| அத்தம் 1 | attam n. <>hasta. (நாநார்த்த.) 1. Tuft of hair; மயிர்க்கற்றை. 2. Half of a yard; 3. Proboscis of an elephant; |
| அத்தம் 2 | attam n. <>அற்றம். 1. End, termination; முடிவு. Tinn. 2. Destruction; |
| அத்தம் 3 | attam n. Kentipāṣāṇam an arsenic; கெந்திபாஷாணம். (வை. மூ.) |
| அத்தம்பியார் | attampiyār n. Sister`s husband; அத்திம்பேர். Loc. |
| அத்தமானம் | attamāṉam n. <>astamana. The western mountain behind which the sun is supposed to set; சூரியன் மறையும் மேற்குமலை. கதிரோன் றோன்று முதயத்தோடத்த மானம் (கம்பரா. இரணி. 151). |
| அத்தமேற்கால் | atta-mēṟ-kāl n. <>அத்தம்+மேல்+. (Yōga.) See அத்தமேற்காலாதனம். அத்தமேற்கா லேகபாத மேகவத்தம் (தத்துவப். 108.) . |
| அத்தமேற்காலாதனம் | attamēṟkālātaṉam n. <>அத்தமேற்கால்+. (Yōga.) A yōgic posture in which a person lying on his back holds, his folded legs upright wih his hands; கீழே கிடந்தவண்ணம் இரண்டுகாலும் சம்மணமாக மடித்து அவ்வாறு மடித்த காலிரண்டுந் தலைக்கு மேலாக உயர்த்திக் கையாற்பிடித்துக் கொண்டு கிடக்கையாகிய ஆசனவகை. (தத்துவப். 108, உரை.) |
| அத்தரசிதம் | attaracitam n. Yellow orpiment; அரிதாரம். Pond. |
| அத்தவத்திரதம் | attavattiratam n. A kind of drug; மருந்துச்சரக்குவகை. துத்தமாஞ்சியத்தவத்திரதம் (பெருங். மகத. 14, 147). |
| அத்தவாளம் | attavāḷam n. Pleasantness, recreation; உல்லாசம். (R.) |
| அத்தனை | attaṇai n. cf. அத்துணை That much; அவ்வளவு என்ற பொருளில் வழங்குஞ் சொல். நீருரைத்த தொன்றை நான் செய்யுமத்தனை (பெரியபு. இயற்.9). |
