Word |
English & Tamil Meaning |
|---|---|
| அடங்கார் | aṭaṅkār n. <>அடங்கு- + ஆ neg. Enemies; பகைவர். அடங்காரை எரியழலம்புக வூதி (திவ். திருவாய். 4, 8, 8). |
| அடங்கு - தல் | aṭaṅku- 5 v. intr. 1. To be close together, thick or crowded; நெருங்குதல். அலவன் கண்பெற வடங்கச் சுற்றிய (கலித். 85.) 2. To lie, lie down; |
| அடசட்டா | aṭacaṭṭā n. Cultivation estimate; சாகுபடி மதிப்பு. (R. T.) |
| அடந்தாளம் | aṭantāḷam n. Corr. of அடதாளம். (Mus.) A time-measure; தாளவகை. (W.) |
| அடப்பான் | aṭappāṉ n. Peregrine falcon; பைரிப்புள். (கலைமகள், 56, 189.) |
| அடம் | aṭam n. perh. haṭha. Knife; கத்தி. Loc. |
| அடம்பாரம் | aṭampāram n. 1. Plenty, as of articles; பண்டங்களின் நிறைவு. Tj. 2. The whole at once, altogether; |
| அடம்பு | aṭampu n. 1. Common cadamba; கடம்பு. (L.) 2. Indian laburnum; 3. Small Indian oak; |
| அடமருது | aṭamarutu n. Stag's horn trumpet flower; கடலாத்தி. (Nels.) |
| அடர் | aṭar n. <>அடர்-. (அக. நி.) 1. Closeness; நெருக்கம். 2. Doubt; |
| அடர் - த்தல் | aṭar- 11 v. tr. To pluck, as cocoanuts; பறித்தல். தேங்காயடர்த்தல். Nā |
| அடர்ச்சி | aṭarcci n. <>அடர்-. Closeness; நெருக்கம். (சிந்தா. நி. 75.) |
| அடர்ந்தேற்றம் | aṭarntēṟṟam n. <>id.+ ஏறு. 1. Consolidated rent; மொத்தமாக நிர்ணயிக்கப்பட்ட வரி. (I. M. P. Sm. 16.) 2. Pressure; |
| அடர்மை | aṭarmai n. <>id. Lightness; நொய்ம்மை. அரத்தவடர்மையும் (பெருங். உஞ்சைக். 53, 130). |
| அடரார் | aṭarār n. <>id.+ ஆ neg. Foes; பகைவர். (சிந்தா. நி. 99.) |
| அடலம் | aṭalam n. State of remaining unchanged; மாறாமை. (சிந்தா. நி. 89.) |
| அடலி | atali n. Maid-servant; வெள்ளாட்டி. (யாழ். அக.) |
| அடலை | aṭalai n. <>அடல். Cremation ground; சுடுகாடு. (பொதி. நி.) |
| அடலைபுடலையாய் | aṭalaipuṭalaiyāy adv. Tinn. 1. In an impetuous manner; மிகத்துணிகரமாய். 2. Suddenly; |
| அடவாதி | aṭa-vāti n. <>haṭha-vādin. (W.) 1. Obstinate person; பிடிவாதக்காரன். 2. Revengeful person; |
| அடவிக்கச்சோலம் | aṭavi-k-kaccōlam n. <>அடவி+. 1. Long and round zedoary; கத்தூரிமஞ்சள். (பச். மூ.) 2. A variety of kaccōlam; |
| அடவிக்கொல் | aṭavikkol n. cf. அடவிச்சொல். Bezoar; கோரோசனை. (பரி. அக.) |
| அடவிகம் | aṭavikam n. prob. அடு-. Ashes; சாம்பல். (பரி. அக.) |
| அடவிமார் | aṭavimār n. <>அடைவு. A class of weavers; நெய்வோருள் ஒருவகையார். (M. E. R. 310 of 1916-B.) |
| அடவு | aṭavu n. [K. aṭavu M. aṭavu.] Pledge, pawn; அடகு.(W. G.) |
| அடவுசெய்வார் | aṭavu-ceyvār n. <>அடைவு+. See அடவிமார். (M. E. R. 313 of 1916-B.) . |
| அடவோலை | aṭa-v-ōlai n. <>அடை+. See அடகோலை. Loc. . |
| அடனி | aṭaṉi n. <>aṭani. Extremity of the bow; வில்லின் நுனி. (சிந்தா. நி. 84.) |
| அடாசு - தல் | aṭacu- 5 v. tr. cf. அடைசு-. (W.) 1. To recede, give place to; விலகுதல். 2. To stuff; |
| அடாத்தியம் | aṭāttiyam n. prob. haṭhāt. Impropriety, injustice; அக்கிரமம். (W.) |
| அடாநிந்தை | aṭā-nintai n. <>அடு- + ஆ neg.+. 1. Unfounded reproach; ஆதாரமற்ற பழிச்சொல். (W.) 2. Unbearable slander; |
| அடாநெறி | aṭā-neṟi n. <>id.+ id.+. Evil ways; தகாதவழி. அடாநெறி யறைதல் செல்லாவருமறை (கம்பரா. எதிர்கோள். 1). |
| அடார்வெளி | aṭār-veḷi n. perh. aṭa+. Open, bare field; தரிசு நிலம். (R.) |
| அடாலத்து | aṭālattu n. <>U. adālat. Court of justice; நியாயஸ்தலம். (P. N.) |
