Word |
English & Tamil Meaning |
|---|---|
| அட்டபந்தம் | aṭṭa-pantam n. <>aṣṭan+. A kind of prepared cement used to fix the stone idol firmly at its base; சிலாவிக்கிரகங்கள் அசைவற்றிருக்கும்படி அடியிடத்துச் சாத்தப்படும் ஒருவகைக் கலவைச்சாந்து. |
| அட்டபந்தனம் | aṭṭa-pantaṉam n. <>id.+. Posting by incantations the regents of the eight cardinal points round a place to ward off evil; தீங்குவராமற் றடுப்பதற்குத் திக்குத் தேவதைகளை மந்திரத்தால் எண்டிசைகளிலும் நிறுத்துகை. (சிந்தா. நி. 75.) |
| அட்டம் 1 | aṭṭam n. <>aṭṭa. 1. Dryness; வறட்சி. (நாநார்த்த.) 2. Excess; 3. Watch-tower on a fort; 4. Market; 5. Junction where four roads meet; 6. Place; 7. Believing; 8. Fullness; completeness; 9. Food, boiled rice; 10. Palate; |
| அட்டம் 2 | aṭṭam n. prob. வட்டம். Circle; வட்டம். (R.) |
| அட்டம் 3 | aṭṭam n. <>aṣṭan. cf. அட்டாங்கம். A kind of obeisance; நமஸ்காரவகை. (R.) |
| அட்டமிடு - தல் | aṭṭam-iṭu- v. tr. <>அட்டம்+. To turn; to move round; சுற்றுதல். (R.) |
| அட்டமுகடு | aṭṭa-mukaṭu n. prob. id.+. Top; உச்சி. (யாழ். அக.) |
| அட்டயோசம் | aṭṭayōcam n. Iron filings; அரப்பொடி. (யாழ். அக.) |
| அட்டர் | aṭṭar n. Nutmeg; சாதிக்காய். (பரி. அக.) |
| அட்டலி | aṭṭali n. A tree, Jatropha glauca; மரவகை. (Nels.) |
| அட்டவணைக்கணக்கன் | aṭṭavaṇai-k-kaṇakkaṉ n. <>அட்டவணை+. Accountant, ledger-keeper; பேரேடெழுதுங் கணக்கன். (W. G.) |
| அட்டவணைக்காரன் | aṭṭavaṇai-k-kāraṉ n. <>id.+. See அட்டவணைக்கணக்கன். Colloq. . |
| அட்டவணைச்சாலை | aṭṭavaṇai-c-cālai n. <>id.+. Counting house; office of accountants; கணக்குவேலைபார்க்கும் இடம். (R.) |
| அட்டவணைப்பிள்ளை | aṭṭavaṇai-p-piḷḷai n. <>id.+. See அட்டவணைக்கணக்கன். (சரவண. பணவிடு. 89.) . |
| அட்டவிகாரம் | aṭṭa-vikāram n. <>aṣṭan+. The eight evil dispositions, viz., kāmam, kurōtam, ulōpam, mōkam, matam, māṟcariyam, iṭumpai, acūyai; காமம் குரோதம் உலோபம் மோகம் மதம் மாற்சரியம் இடும்பை அசூயை என்ற எண்வகைத் தீக்குணம். (R.) |
| அட்டவித்தியேசுவரர் | aṭṭa-vittiyēcuvarar n. <>id.+. The eight agents who perform the paca-kiruttiyam under the orders of īšvara, viz., aṉantar, sūkṣmar, civōttamar, ēkanēttirar, ēkaruttirar, tirimūrtti, nīlakaṇṭar, cikaṇṭi; அனந்தர் சூக்ஷ்மர் சிவோத்தமர் ஏகநேத்திரர் ஏகருத்திரர் திரிமூர்த்தி நீலகண்டர் சிகண்டி என எண்வகையராய்ச் சிருஷ்டியாதி கிருத்தியங்களை ஈசுவர னேவற்படி நடத்துவோர். (சி. சி. 8, 2.) |
| அட்டவிதபரீட்சை | aṭṭa-vita-parīṭcai n. <>id.+ விதம்+. Diagnosis of a disease, by examining the state of uṭal, sparicam or mukam, kural, kaṇ, malam, mūttiram, nānāṭi of a patient; நோயாளியின் உடல் ஸ்பரிசம் அல்லது முகம் குரல் கண் மலம் முத்திரம் நா நாடியாகிய எட்டனையுஞ் சோதித்து நோயை நிதானிக்கை. (சீவரட்.) |
| அட்டவூறு | aṭṭa-v-ūṟu n. <>id.+. The sensation of touch, of eight kinds, viz., caruccarai, cīrmai, taṇmai, tiṇmai, noymmai, meṉmai, vaṉmai, vemmai; சருச்சரை சீர்மை தண்மை திண்மை நொய்ம்மை மென்மை வன்மை வெம்மை என எண்வகைப்பட்ட உணர்ச்சி. (யாழ். அக.) |
| அட்டவெற்றி | aṭṭa-veṟṟi n. <>id.+. The eight kinds of fight leading to victory, viz., veṭci, karantai, vaci, kāci, nocci, uḻiai, tumpai, vākai; வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி நொச்சி உழிஞை தும்பை வாகை என எண்வகைப் போர்கள். (யாழ். அக.) |
| அட்டனம் | aṭṭaṉam n. <>aṭṭana. Discus; சக்கராயுதம். (சிந்தா. நி. 99.) |
| அட்டாங்கநமஸ்காரம் | aṭṭāṅka-namas-kāram n. <>aṣṭāṅga+. Aṣṭāṅka-namaskāram, a form of obeisance; அஷ்டாங்கநமஸ்காரம். |
| அட்டாங்கம் | aṭṭaṅkam n. <>aṣṭāṅga. The eight limbs of the body, viz., feet, hands, shoulders, breast and forehead; இருகால் இருகை இருதோள் மார்பு நெற்றி என்ற எட்டு உறுப்புக்கள். |
| அட்டாமுகம் | aṭṭāmukam n. prob. அட்டம்+. (R.) 1. Face turned aside in contempt, distraction or perplexity; இகழ்ச்சி கவலை ஐயம் இவற்றுற் கோணிய முகம். 2. Wrv face; |
