Word |
English & Tamil Meaning |
|---|---|
| அதிகாரடாகை | atikāra-tākai n. <>id.+U. ṭīgā. Pride of power; அதிகாரத்தால் உண்டாகுங் கர்வம். அதிகாரடாகையின்மே லார்த்து (சரவண. பணவிடு. 109). |
| அதிகாரதத்துவம் | atikāra-tattuvam n. <>id.+. (šaiva.) The function of God in which the principle of energy dominates that of wisdom; கிரியை மிகுந்து ஞானம் குறைந்த ஈச்சுர தத்துவம். (சி. சி. 1. 65, ஞானப்.) |
| அதிகாரப்புறனடை | atikāra-p-puṟa-ṉaṭai n. <>id.+. (Gram.) General permissive rule at the end of a chapter; அதிகாரவிறுதியிற் கூறும் புறனடைச்சூத்திரம். (தொல். சொல். 45, சேனா. பக். 54.) |
| அதிகாரப்பேறு | atikāra-p-pēṟu n. <>id.+. A tax; வரிவகை. (S. I. I. iv, 125.) |
| அதிகாரப்பொன் | atikāra-p-poṉ n. <>id.+. A kind of tax in gold; பொன்னாணயமாக வாங்கும் வரிவகை. (S. I. I. iv, 195.) |
| அதிகாரம் 1 | atikāram n. <>adhikāra. Administrative sub-division of a taluk; தாலுக்காவின் உட்பகுதி. Nāṉ. |
| அதிகாரம் 2 | atikāram n. perh. அதிரசம். A kind of sweet cake; பணியாரவகை. Nāṉ. |
| அதிகாரமேலெழுத்து | atikāra-mēleḻuttu n. <>அதிகாரம்+. Revisional order; கீழுத்தியோகஸ்தர் செய்த கட்டளையை மாற்றியெழுதும் உத்தரவு. திருச்சிவிந்திரத்து மஹாஸபையோம் அதிகாரமேலெழுத்து (T. A. S. iii, 71). |
| அதிகாரவர்த்தனை | atikāra-varttaṉai n. A collection of taxes; வரித்தொகுதி. (M. E. R. 428 of 1913.) |
| அதிகாரன் | atikāraṉ n. <>adhikārin. Superintendent, head, director; officer; அதிகாரி. வரிகளைச் சுமத்தி அநியாயஞ்செய்து பூர்விக அதிகாரர்கள் சதிகாரர்களே (பெண்மதிமாலை, பக். 136). |
| அதிகாரி 1 | atikāri n. <>id. 1. (šaiva.) Mahēsvara aspect of šiva in which the Energy of action predominates; மகேசுவரன். (சி. சி. 1, 65, மறைஞா.) 2. Officer in charge of an atikāram; |
| அதிகாரி 2 | ati-kāri n. <>அதி+காரம். cf. அதிகநாரி. Ceylon leadwort; கொடுவேலி. (பச். மூ.) |
| அதிகோரம் | atikōram n. Emblic myrobalan; நெல்லி. (T. C. M. ii, 2, 429.) |
| அதிங்கு | atiṅku n. cf. அதிங்கம். Liquorice-plant; அதிமதுரம். அரக்குமதிங்கும் (பெருங். இலா வாண. 18, 46). |
| அதிசந்தானம் | ati-cantāṉam n. <>atisandhāna. Falsehood; பொய். (சிந்தா. நி. 122.) |
| அதிசயவுவமை | aticaya-v-uvamai n. <>atišaya+. (Rhet.) A simile which states that there is no difference between uvamāṉam and uvamēyam expect in their loci; மிகையுவமை. (வீரசோ. அலங். 14, உரை.) |
| அதிசரம் | aticaram n. <>ati-cara. Sigh; நெட்டுயிர்ப்பு. (W.) |
| அதிசூக்குமதேகம் | ati-cūkkuma-tēkam n. <>ati+sūkṣma+ (šaiva.) Subtle body, containing the pūtam, taṉmāttirai, āṉēntiriyam, kaṉmēntiriyam, antakkaraṇam, kuṇam, mūla-p-pakuti and kalāti; பூதம் தன்மாத்திரை ஞானேந்திரியம் கன்மேந்திரியம் அந்தக்கரணம் குணம் மூலப்பகுதி கலாதி என்பவற்றில் ஒவ்வொன்று கொண்ட நுண்ணுடல். (சி. போ. பா. 2, 3, பக். 194.) |
| அதிசூக்குமம் | ati-cūkkumam n. <>atisūkṣma. Anything very subtle; மிக நுண்ணியது. (சி. போ. பா. 2, 3, பக். 194.) |
| அதிசூக்குமை | aticūkkumai n. <>atisūkṣma (šaiva.) A form of šiva-šakti; சிவசக்தி பேதங்களுளொன்று. (சதாசிவ. 21, உரை.) |
| அதிசோபனை | ati-cōpaṉai n. <>ati-šōbhanā. Pārvatī; பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 22.) |
| அதிட்டகன்மம் | atiṭṭa-kaṉmam n. <>a-drṣta+. The invisible karma which causes enjoyment and suffering; நன்மை தீமைகளை அனுபவிக்கச் செய்யுங் கருமம். (சிவப்பிர. 19 உரை, பக். 213.) |
| அதிதனு | atitaṉu n. Gold; பொன். (W.) |
| அதிதானம் | ati-tāṉam n. <>ati+. Bounty, gift; ஈகை. (சிந்தா. நி. 143.) |
| அதிதி | atiti n. <>aditi.(நாநார்த்த.) 1. Earth; பூமி. 2. Pārvati; |
| அதிநீசம் | ati-nīcam n. <>ati-nīca. 1. (Erot.) The sexual union of a man of the hare class with a woman of the elephant class, one of aivakai-p-puṇarcci, q.v.; ஐவகைப் புணர்ச்சியுள் யானைச்சாதிப் பெண்ணுடன் முயற்சாதியான் கூடுங் கூட்டம். விழைவற அதிநீச மென்ன (கொக்கோ. 3, 7). 2. (Astron.) Highly debilitated position of a planet in the house of its depression; |
