Word |
English & Tamil Meaning |
|---|---|
| அந்தரவனசம் | antara-vaṉacam n. <>id.+. A kind of moss; கெடிப்பாசிவகை. (பச். மூ.) |
| அந்தரவனம் | antara-vaṉam n. <>id.+. Uninhabited desert; மக்களில்லாக் காடு. (W.) |
| அந்தரவாண்டு | antara-v-āṇṭu n. <>id.+. The period of time between any two given dates; குறித்த நாளெல்லைகளுக்கு இடைப்பட்ட காலம். (W.) |
| அந்தரவினியோகம் | antara-viṉiyōkam n. A tax; வரிவகை. (S. I. I. i, 136.) |
| அந்தரவீச்சுக்காரன் | antaravīccu-k-kāraṉ n. <>அந்தரவீச்சு+. Fraudulent man, cheat; மோசக்காரன். (W.) |
| அந்தரவுலகம் | antara-v-ulakam n. <>antara+. Svarga. சுவர்க்கம். அந்தரவுலகத்தமரர்கோமான் (பெருங். உஞ்சைக். 37, 96). |
| அந்தராயப்பாட்டம் | antarāya-p-pāṭṭam n. <>antara+āya+. Certain taxes collected in cash; பணமாகத் தண்டும் வரிவகை. (I. M. P. Cg. 1070.) |
| அந்தரான்மா | antarāṉmā n. <>antarātmā. nom. sing of antarātman. 1. God, as mmanent; கடவுள். (விவேக. சூடா. 152.) 2. (šaiva.) Soul when it is associated with the four vākku; |
| அந்தரிப்பு | antarippu n. <>அந்தரி-. Helplessness; கதியின்மை. (W.) |
| அந்தரியாகபூசை | antar-iyāka-pūcai n. <>antas+yāga+. (šaiva) Mental worship; மானசபூசை. அறைந்தவை மூர்த்திசேர்க்கி லந்தரி யாகபூசை (ஞானபூசா. 14). |
| அந்தரிலம்பம் | antar-ilampam n. <>id.+lamba. Acute-angled triangle; கூர்க்கோணங்கள் கொண்ட முக்கோணம். (W.) |
| அந்தரிலயம் | antar-ilayam n. <>id.+laya. (Phil.) The transcendent fifth state of the soul; துரியாதீதம். (சிந்தா. நி. 162.) |
| அந்தரீபம் | antarīpam n. <>antarīpa. Island; தீவு. (சிந்தா. நி. 162.) |
| அந்தரீயம் | antarīyam n. <>antarīya. Waist cloth, dist. fr. uttar.yam; அரையிற் கட்டும் வேஷ்டி. Brāh. |
| அந்தரேணம் | antarēṇam n. <>antarēṇa. Intermediate space; நடுவிடம். (சிந்தா. நி. 164.) |
| அந்தரை | antarai n. A title of Paravas; பரவர் பட்டப்பெயர். (T. A. S. vi, 179.) |
| அந்தளம் | antaḷam n. <>āndōla. [T. antalamu.] Palanquin; பல்லக்கு. (சிவந்தெழுந்த பல்லவராயனுலா Ms.) |
| அந்தா | antā adv. There; அதோ. Loc. |
| அந்தாக | antāka n. <>antu. An expression meaning 'Let it be so'; அப்படியாகுக என்னும் பொருளில் வருஞ் சொல். அந்தாக வென்று வந்தையனும் (கம்பரா. நிகும்பலை. 100). |
| அந்தாதி | antāti n. <>anta+ādi. 1. Beginning and end; முதலும் முடிவும். 2. The limbs from head to foot; |
| அந்தாதியாக | antāti-y-āka adv. <>அந்தாதி+. Without intermission; இடைவிடாமல். அநாதிகாலம் அந்தாதியாக ஸம்ஸரித்துப்போந்த வடியேனுக்கு (ரஹஸ்ய. 1329). |
| அந்தாதியுவமை | antāti-y-uvamai n. <>id.+. (Rhet.) A figure of speech in which the last word of a line is repeated at the beginning of the next line and made the uvamāṉam; அந்தத்துச்சொல்லையே மடக்கி ஆதியாகக்கொண்டு உவமைபெறக் கூறும் அணி. (மாறனலங். 101, உரை.) |
| அந்தாளிக்குறிஞ்சி | antāḷi-k-kuṟici n. <>அந்தாளி+. An ancient melody-type; குறிஞ்சியாழ்த்திறவகை. (தேவா.) |
| அந்தான் | antāṉ n. A small board nailed over a leak in ship or boat to keep water out; கப்பலிலுண்டாகுஞ் சிறுதுளைவழியே தண்ணீர் உட்புகாதபடி அடைக்கும் பலகை. (R.) |
| அந்தாஜ்பட்டி | antāj-paṭṭi n. <>U. andāz+. Estimate of the value of a standing crop; அறுவடைக்குமுன் இடும் பயிரின் விலைமதிப்பு. (R. T.) |
| அந்தி - த்தல் | anti- 11 v. intr. <>anta. To fit in; பொருந்துதல். (அக. நி.) |
| அந்தி | anti part. <>அந்தில். An expletive; ஓர் அசைச்சொல். (பொதி. நி.) |
| அந்திக்காப்பு | anti-k-kāppu n. <>அந்தி+. Evening service performed in a temple; கடவுட்கு மாலைக்காலத்துச் செய்யுஞ் சங்கு. (மதுரைக். பக். 389, கீழ்க்குறிப்பு.) |
| அந்திகாசிரயம் | antikācirayam n. <>antika+ā-šraya. Plants and other immoveable objects; தாவரம். (சிந்தா. நி. 162.) |
